India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

2026 தேர்தலில் தவெக கூட்டணியில் அமமுக இடம்பெறும் என தகவல் வெளியானது. அதனை உறுதிசெய்யும் வகையில், விஜய் தலைமையில் கூட்டணி அமையும் என டிடிவி தினகரனும் கூறியிருந்தார். ஆனால், தற்போது விஜய் தலைமையில் கூட்டணி அமையும் என்றேனே தவிர, விஜய்யுடன் கூட்டணிக்கு செல்வோம் என சொல்லவில்லை என்று விளக்கமளித்துள்ளார். விஜய்யை கூட்டணிக்கு வாங்க வாங்க என EPS கூவி கூவி அழைப்பதாகவும் டிடிவி தெரிவித்துள்ளார்.

வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது என IMD அறிவித்துள்ளது. அப்பகுதிகளில் சூறாவளிக்காற்று அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால், வரும் 28-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் இன்று மாலைக்குள் கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ரசிகர்களும் இருப்பார்கள், விமர்சகர்களும் இருப்பார்கள். ஆனால் சில திரைப்படங்கள், கதையின் எளிமை, உணர்வின் ஆழம், இசை, நடிகர்களின் இயல்பான நடிப்பு போன்றவற்றால் அனைவராலும் கொண்டாடப்படுகின்றன. Zero Haters திரைப்படங்கள் சிலவற்றை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாத உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் அதிக பயனர்களை சேர்க்கும் வகையில், விதிமுறையில் சில தளர்வுகளை வழங்கியுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அவற்றை பொதுமக்கள் அறிந்து திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்திய அவர், தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் ₹1,000 கிடைக்கும் என உறுதியளித்துள்ளார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமிற்கு சென்று தளர்வுகள் குறித்த விவரங்களை அறியலாம். SHARE IT.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் காலியாக உள்ள 348 Executive பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி, வயது: 20- 30, சம்பளம்: ₹30,000. தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 17 காலியிடங்கள் உள்ளன. வரும் 29-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களுக்கு <

தமிழகத்தில் நாளை(சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளித்ததை ஈடுசெய்ய நாளை பள்ளிகள் முழுநேரம் செயல்பட பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. செவ்வாய்க்கிழமை அட்டவணைப்படி வகுப்புகள் இயங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படலாம். SHARE IT.

தற்போது, டெக்னாலஜி இல்லாமல் எந்த ஒரு வேலையும் செய்ய முடியாது என்ற நிலைக்கு மனிதன் வந்துவிட்டான். சிறு வேலையாக இருந்தாலும், ஒருவருக்கு டெக்னாலஜியின் உதவி தேவைப்படுகிறது. ஆனால், இப்படியான உதவியால், மனிதனிடம் இருந்த பல திறமைகள் மெல்ல அழிந்து வருகின்றன. அவை என்னென்ன என தெரிஞ்சிக்க மேலே உள்ள போட்டோஸை வலது பக்கம் Swipe பண்ணி பாருங்க. இன்னும் என்ன திறமையை எல்லாம் நாம் இழப்போம் என கமெண்ட் பண்ணுங்க?

தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே போவதால், தற்போது தங்கம் வாங்குவது சரியான முதலீடா? இப்போது ஏறும் விலை திடீரென சரியுமா என பல சந்தேகங்கள் உள்ளன. ஆனால், இன்னும் 3 அல்லது 6 மாதங்களில் தங்கத்தின் விலை பெரிய உச்சத்தை அடையும் என நகை வியாபாரிகள் கூறுகின்றனர். அதனால், தற்போது கையில் காசு உள்ளவர்கள் பிக்சட் டெபாசிட்டுக்கு பதிலாக, தங்கத்தில் முதலீடு செய்யவும் அறிவுறுத்துகின்றனர்.

சொந்த தொழில் தொடங்க ₹10 லட்சம் வரை கடன் தந்து, தொழிற்பயிற்சியும் தருகிறது மத்திய அரசின் ரோஸ்கர் யோஜனா திட்டம். இந்த கடனை பெற விண்ணப்பதாரர் 18 – 35 வயதுக்குட்பட்ட வேலையில்லாத நபராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம். ₹1 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும். கடனை பெற <

கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை பனையூருக்கு வரவழைத்து சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. கரூருக்கு நேரில் செல்ல விஜய் திட்டமிட்டிருந்தார். ஆனால், சந்திப்புக்கான இடத்தை தேர்வு செய்வதில் இழுபறி நீடிக்கிறது. இதனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து சந்திக்க முடிவு எடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.