News April 17, 2025

நகைச்சுவை மன்னன் விவேக் மறைந்த நாள்..

image

2021-ல் இதே தேதியில் தான் ( ஏப்ரல் 17) நகைச்சுவை மன்னன் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட நடிகர் விவேக் மறைந்தார். அவர் இல்லையென்றாலும், காமெடிகள் மூலம் இன்றும் நம் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். அவர் வாழ்ந்த நாள்களில் பல ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டார். அவரின் கடைசி ஆசை அனைவரும் மரம் நட வேண்டும் என்பது. எனவே, இன்று அவரின் ரசிகர்கள் ஒவ்வொருவரும் மரக்கன்றுகளை நட்டு அஞ்சலி செலுத்துங்கள்.

News April 17, 2025

இபிஎஸ் ஆட்டம் இனிமே தான் ஆரம்பம்: செம்மலை

image

இபிஎஸ் தான் ஒரு அரசியல் சாணக்கியர் என்பதை நிரூபித்துள்ளார் என்று செம்மலை தெரிவித்துள்ளார். பக்காவாக ஸ்கெட்ச் போட்டு பாஜக உடன் கூட்டணி அமைத்தது ஆரம்பம் மட்டும் தான். இனி தான் ஆட்டமே இருக்கிறது. யார் யார் அதிமுக கூட்டணியில் இணைவார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். இதனால் திமுக உள்ளிட்ட கட்சிகள் பதற்றப்படுகிறார்கள் எனக் கூறிய அவர், திமுகவின் ஊழலை வைத்துதான் தேர்தல் பிரச்சாரம் இருக்கும் என்றார்.

News April 17, 2025

IPL ரசிகர்களை குறிவைத்த ஏர்டெல்

image

ஐபிஎல் ரசிகர்களை குறிவைத்து ஏர்டெல் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ₹451க்கு அறிமுகமாகியுள்ள புதிய திட்டத்தில் 3 மாத ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவுடன் 50 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. ஆனால், வாய்ஸ் & மெசேஜ் சலுகைகள் கிடையாது. ஏற்கெனவே, ஏர்டெல் ₹100க்கு 5 GB டேட்டா + ஜியோ ஹாட்ஸ்டார் (30 நாள்), ₹195க்கு 15 GB டேட்டா + ஜியோ ஹாட்ஸ்டார் (90 நாள்) திட்டங்களை வழங்குவது குறிப்பிடத்தக்கது.

News April 17, 2025

வெப்ப அலை: மதியம் வெளியே வராதீங்க

image

தமிழகத்தில் வெப்ப அலை வீசும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே, காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் தேவையில்லாமல், வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். மதிய நேரத்தில் கடுமையான வேலைகளை செய்ய வேண்டாம். வெயிலில் வேலை செய்பவர்கள் மதியம் ஓய்வு எடுக்க வேண்டும். குறிப்பாக, வெப்ப அலையை எதிர்கொள்ள தேவையான அவசரகால மருந்துப் பொருள்களை அனைத்து தொழிற்சாலைகளில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

News April 17, 2025

முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்

image

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிப்பது, திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், புதிதாக தொடங்கப்படவுள்ள தொழில்கள் மற்றும் தொழிற்சாலை விரிவாக்கம் குறித்தும் ஆலோசனை நடைபெறலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

News April 17, 2025

விஜய் கட்சியில் நானா? என்ன ஆள விடுங்க சாமி!!

image

சத்யராஜ் மகள் திவ்யா திமுகவில் இணைந்த நிலையில், மகன் சிபிராஜ் தவெகவில் இணையவுள்ளதாக பேச்சு அடிப்பட்டது. அதுகுறித்து தற்போது பேசியுள்ள அவர், நான் விஜய்யின் தீவிர ரசிகன், அவ்வளவு தான்.. தவெகவில் இணையப் போவதாக வெளியாகும் செய்தி வெறும் வதந்தி, அதில் எந்தவொரு உண்மையும் இல்லை. ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன்; எனக்கு அரசியல் ஆர்வம் & அறிவு கிடையாது என கூறியுள்ளார்

News April 17, 2025

சஞ்சு மட்டும் களத்தில் இருந்திருந்தால்..

image

DC அணிக்கு எதிரான போட்டியில் RR தோல்வியடைந்தது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த சஞ்சு சாம்சன், பாதியிலேயே, மைதானத்தில் இருந்து வெளியே போனதுதான். 31 ரன்கள் எடுத்திருந்தபோது retd hurt முறையில் வெளியேறாமல் இருந்திருந்தால், ரன் குவிப்பில் ஈடுபட்டிருப்பார். இதனால், சூப்பர் ஓவர் வந்திருக்க வாய்ப்பில்லை; ராஜஸ்தானும் வெற்றிபெற அதிக வாய்ப்பு இருந்திருக்கும்.

News April 17, 2025

திமுகவை வீட்டுக்கு அனுப்ப பொன்முடி போதும்: ராமலிங்கம்

image

பொன்முடியின் பேச்சால், அவரின் மீது பெண்கள் கோபத்தோடு இருக்கின்றனர்; திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படுவதற்கு அவர் மாதிரியான ஆட்களே போதும் என்று பாஜக துணைத் தலைவர் ராமலிங்கம் விமர்சித்துள்ளார். மேலும், பொன்முடிக்கு சேரும் பெருமையெல்லாம், முதல்வர் ஸ்டாலினையும் சேரும் என சாடிய அவர், இதுபோன்ற விவகாரங்களை திசை திருப்பவே திமுக, அதிமுக – பாஜக கூட்டணியை விமர்சிப்பதாகவும் கூறியுள்ளார்.

News April 17, 2025

இறை பக்திக்கு புது விளக்கம் கொடுத்த சேகர் பாபு

image

இறை பக்தி என்பது வாழைப் பழம் போன்றது. வாழைப் பழத்தில் இருக்கும் தோல் சனாதனம். அதற்குள் இருக்கும் பழம்தான் இறைவன் என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார். இதற்கு அதிமுகவின் கே.பி.முனுசாமி, அமைச்சர் சொல்லும் உவமை முழுமையாக தவறு. சனாதனத்திற்கும், இறைவனுக்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளன. இறைவனும், சனாதனமும் ஒன்று என்றால், இவ்வளவு பெரிய விவாதமும் நீதிமன்ற வழக்குகளும் தேவையில்லை என்று பதிலடி கொடுத்தார்.

News April 17, 2025

வரலாற்றில் இன்று!

image

* 1966 நடிகர் விக்ரம் பிறந்த தினம்
* 1975 இந்தியாவின் 2-வது குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் காலமானார்.
* 1946 பிரான்சிடம் இருந்து சிரியா சுதந்திரம் பெற்றது.
* 1983 SLV ராக்கெட் இந்தியாவால் ஏவப்பட்டது. இது இந்தியாவில் விண்வெளி யுகத்தை தொடங்கியது.
* 1756 தீரன் சின்னமலை பிறந்த தினம்
* உலக ஹீமோபிலியா தினம்

error: Content is protected !!