News April 17, 2025

தீரன் சின்னமலை சிலைக்கு முதல்வர் மரியாதை

image

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டையில் உள்ள தீரன் சின்னமலை சிலையின் கீழுள்ள உருவப் படத்திற்கு மலர் தூவி முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதில், அமைச்சர் முத்துச்சாமி, கொங்கு ஈஸ்வரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்தினர்.

News April 17, 2025

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்.. ₹71,000-ஐ கடந்தது!

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.17) ₹840 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,920-க்கும், சவரன் ₹71,360-க்கும் விற்பனையாகிறது. இது வரலாறு காணாத புதிய உச்சமாகும். அதேநேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ₹110-க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,10,000-க்கும் விற்பனையாகிறது.

News April 17, 2025

வாயை கொடுத்து வசமாக சிக்கிய சீக்கா..!

image

விஜய் சங்கர் குறித்த கருத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் சீக்கா. CSK வீரர் விஜய் சங்கர் மெதுவாக விளையாடுகிறார் என விமர்சனக் கணைகள் ஏவப்படும் நிலையில், மற்ற வீரர்களுக்கு Drinks கொண்டு செல்லத்தான் அவர் தேவை என சீக்கா தன் பங்குக்கு சாடியுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்கள், உங்கள் கமெண்ட்ரிக்கு அவர் எவ்வளவோ மேல் என கமெண்ட் செய்து வருகின்றனர். சீக்கா கருத்து பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

News April 17, 2025

காங்., தலைவர்களின் மர்ம மரணங்கள்.. அரசுக்கு நெருக்கடி!

image

காங்கிரஸ் நிர்வாகிகளின் மர்ம மரணங்கள் அரசுக்கு புது நெருக்கடியை கொடுத்துள்ளது. ஆளும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றனர். கடந்தாண்டு மே 4-ம் தேதி நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் கருகிய நிலையில், சடலமாகக் கிடந்தார். இந்நிலையில், நேற்று நீலகிரி காங்., தலைவர் <<16113595>>ராஜ்குமார்<<>> மர்மமான முறையில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

News April 17, 2025

தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்

image

நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீனவர்களை தாக்கிவிட்டு ₹50,000 மதிப்புள்ள மீன்பிடி வலை உள்ளிட்ட பொருட்களை அவர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த 4 மீனவர்கள் வேதாரண்யம் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News April 17, 2025

நில ஆவணங்களை எளிதாக அறிய புதிய செயலி!

image

நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை, அறிய புதிய செயலியை வருவாய் துறை உருவாக்கி வருகிறது. செல்போனில், ‘Tamilnilam Gioinfo’ செயலியை பதிவிறக்கம் செய்தால் போதும். அதில், தற்போது எந்த இடத்தில் இருக்கின்றோமோ, அந்த இடத்தின், கூகுள் மேப்புடன், சர்வே எண் விவரங்கள் டிஸ்பிளே ஆகும். அடுத்த சில மாதங்களில், இந்த செயலி செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இது வீடு, மனை உள்ளிட்ட ஆவணங்களை மக்கள் எளிதாக சரிபார்க்க உதவும்.

News April 17, 2025

இன்றைய முக்கிய செய்திகள்!

image

1) CM ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம். 2) வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்குகளில் SC இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு. 3) 22 மாதங்களுக்குப் பிறகு மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் திறப்பு; பட்டியல் சமூக மக்கள் சாமி தரிசனம். 4) USA துணை அதிபர் J.D.வான்ஸ் குடும்பத்தினருடன் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார். 5) ஆசிய U-18 5000 மீ ரேஸ் வாக்கில் வெள்ளி வென்ற <<16124119>>இந்திய வீரர்<<>>.

News April 17, 2025

5 ஆண்டுகளுக்கு பிறகு.. DC-யின் மாஸ் ரெக்கார்ட்!

image

18 வருட IPL வரலாற்றில் சூப்பர் ஓவரில் அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற சாதனையை DC அணி படைத்துள்ளது. இதுவரை 5 சூப்பர் ஓவர்களில் விளையாடி, அவற்றில் 4-ல் DC(முன்னர் Delhi Daredevils) வெற்றி பெற்றுள்ளது. இந்த பட்டியலில் PBKS அணி, 3 வெற்றிகளை பெற்று 2-வது இடத்தில் உள்ளது. நேற்றைய மேட்ச் யாரு பாத்தீங்க?

News April 17, 2025

அட்சய திருதியில் ஏன் தங்கம் வாங்க வேண்டும்?

image

சித்திரை மாத அமாவாசைக்கு அடுத்த வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் இந்த நாளில், தானங்கள் செய்து புண்ணியத்தைப் பெறுவது மிகவும் சிறப்பு. இந்த நாளில் செய்யப்படும் புதிய தொடக்கங்கள், முதலீடுகள் அனைத்தும் அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் கொண்டு வரும் என்பது நம்பிக்கை. வரும் ஏப்ரல் 30-ம் தேதி இந்த திருதியை வருகிறது.

News April 17, 2025

சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் – வலுக்கும் கண்டனம்

image

நாங்குநேரியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு சாதிய தாக்குதலுக்குள்ளான மாணவர் சின்னத்துரை மீண்டும் தாக்கப்பட்டதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இன்ஸ்டா மூலம் பழகிய நபர்கள், சின்னத்துரையை தனியாக அழைத்து தாக்கியதாகவும் முந்தைய தாக்குதலுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில், சின்னத்துரையை தாக்கியவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என கண்டன குரல்கள் வலுத்துள்ளன.

error: Content is protected !!