News October 24, 2025

திமுக கூட்டணிக்குள்ளேயே சமூக நீதி இல்லை: நயினார்

image

சமூக நீதி பற்றி பேசுபவர்கள் கூட்டணிக்குள்ளேயே சமூக நீதி இல்லை என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விழாவிற்கு தன்னை அழைக்கவில்லை என்று செல்வப்பெருந்தகை அறிக்கை விட்டிருப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இப்படிப்பட்டவர்களின் அரசால், தமிழ்நாட்டில் எப்படி சமூக நீதி தர முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News October 24, 2025

பிஹார் தேர்தல்: பல துணை முதல்வர் வேட்பாளர்கள்

image

பிஹாரில் எதிர்க்கட்சிகளின் சார்பில் இன்னும் பல துணை முதல்வர் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என, CM வேட்பாளரும், RJD தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். முன்னதாக, நேற்று பிஹார் மக்கள் தொகையில் 2.5% உள்ள மீனவர் சமுதாயத்தை சேர்ந்த முகேஷ் சஹானி, துணை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், ஆளும் NDA கூட்டணியின் CM வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News October 24, 2025

சின்ன செயல் பெரிய பலன்.. ட்ரை பண்ணுங்க

image

சில செயல்கள் இயற்கையாகவே நமது உடல் மற்றும் மனதை புத்துணர்வோடு வைத்துக்கொள்ள உதவும். அவை என்னென்ன விஷயங்கள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை, ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களுக்கு பிடித்தது எது? கமெண்ட்ல சொல்லுங்க. மேலும், இதை உங்க நண்பர்களுக்கு share பண்ணுங்க.

News October 24, 2025

சற்றுமுன்: ஒரே நாளில் ₹4,000 விலை குறைந்தது

image

<<18091994>>தங்கம் <<>>விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் ஏறிய வேகத்தில் இறங்கிக் கொண்டிருக்கிறது. 1 கிலோ வெள்ளி இன்று காலையில் ₹3,000, மாலையில் ₹1,000 குறைந்திருப்பது நடுத்தர மக்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 1 கிராம் ₹170-க்கும், 1 கிலோ ₹1.70 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 நாள்களில் மட்டும் வெள்ளி விலை கிலோவுக்கு ₹37,000 சரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News October 24, 2025

சிக்கலில் நடிகர் மோகன்லால்

image

2011-ல் மோகன்லால் வீட்டில் IT ரெய்டு நடத்தியபோது, யானை தந்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது சட்டவிரோதம் என்பதால், உரிமம் வேண்டி அரசிடம் அவர் கோரிக்கை வைத்திருந்தார். இதனால் 2016-ல் கேரள அரசு அவருக்கு உரிமம் வழங்கியிருந்தது. ஆனால், இது தொடர்பான அறிவிப்பாணை அரசிதழில் வெளியிடப்படவில்லை. எனவே, தற்போது இதனை சுட்டிக்காட்டி அரசின் உரிமத்தை, HC ரத்து செய்துள்ளது. இதனால் அவருக்கு சிக்கல் எழுந்துள்ளது.

News October 24, 2025

இந்தியாவுக்கு வரமாட்டோம்: பாக்., அணி அறிவிப்பு

image

வரும் நவம்பர் – டிசம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ள ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ஆனால், இந்தியா அல்லாத பொதுவான நாட்டில் தொடரை நடத்தினால், அதில் பங்கேற்கவும் விருப்பம் தெரிவித்துள்ளது. இருப்பினும், பாகிஸ்தானுக்கு மாற்றாக இன்னொரு அணி விரைவில் அறிவிக்கப்படும் என சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

News October 24, 2025

விவசாயிகள் கண்ணீர்… திமுக அரசே பொறுப்பு: அன்புமணி

image

விவசாயிகள் கதறி அழுது முறையிட்டபோதும், டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதலில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். விவசாயிகளின் கண்ணீரை துடைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். விவசாயிகளை கடனாளிகளாக மாற்றாமல், கொள்முதல் பணிகளை விரைவுபடுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

News October 24, 2025

புயல்களுக்கு பெயர் வைப்பது ஏன் தெரியுமா?

image

புயல்களுக்கு பெயர் சூட்டும் வழக்கத்தை தொடங்கியவர் பிரிட்டன் வானியல் விஞ்ஞானி கிளெமென்ட் ராக். ஒரே நேரத்தில் பல்வேறு பகுதியில் புயல்கள் உருவாகலாம். குழப்பம் வரக்கூடாது என்பதற்காகவே புயல்களுக்கு பெயரிடப்படுகிறது. புயலின் பெயரில் அரசியல் பிரபலங்களின் பெயர்கள், கலாசாரம், மத நம்பிக்கை, இனம் போன்றவை பிரதிபலிக்கக் கூடாது. புயலின் பெயர் 8 எழுத்துகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும் போன்ற விதிமுறைகள் உள்ளன.

News October 24, 2025

BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

image

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மளமளவென சரிந்துள்ளது. காலையில் ₹320 அதிகரித்த நிலையில், மாலையில் ₹1,120 குறைந்துள்ளது. சென்னையில் தற்போது 22 காரட் தங்கம் 1 கிராம் ₹11,400-க்கும், 1 சவரன் ₹91,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ₹6,400 குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News October 24, 2025

PAK-க்கு ஆப்பு: இந்தியாவை பின்பற்றும் ஆப்கன்

image

பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவைப் போல ஆப்கனும் தனது நீர்வளத்தை ஆயுதமாக பயன்படுத்த உள்ளது. தங்களது நாட்டில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் குனார் ஆற்றின் நடுவே அணைகளை கட்ட உள்ளதாக ஆப்கன் அறிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா பகுதியின் பாசனம், குடிநீர் மற்றும் நீர் மின் உற்பத்தி கேள்விக்குறியாகும். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா சிந்து நதிநீரை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!