News April 17, 2025

பெண்களுக்கு மானிய விலையில் கிரைண்டர்: TN அரசு

image

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 2,000 பேருக்கு உலர், ஈரமாவு அரைக்கும் கிரைண்டர் வாங்க ₹1 கோடி மானியம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ₹10,000 (அ) அதற்கு மேல் மதிப்பிலான கிரைண்டர் வாங்கும்போது, மொத்த விலையில் 50% (அ) அதிகபட்சமாக ₹5000 மானியம் கிடைக்கும். இத்திட்டத்தில் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக மினிஸ்டர் கீதாஜீவன் கூறினார்.

News April 17, 2025

சிமெண்ட் விலை அதிகரிக்க வாய்ப்பு

image

தேவை அதிகரிப்பு காரணமாக இந்தியாவில் சிமெண்ட் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நுவாமா நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. 2025 ஏப்ரல் மாத நிலவரப்படி, தென்னிந்தியாவில் அதிகமாக விலை உயர்ந்திருப்பதாகவும், நாட்டின் மத்திய, கிழக்கு, வட மாநிலங்களில் விலை அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இம்மாத இறுதியில் விலை சற்று குறையும் என டீலர்கள் கூறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 17, 2025

உங்க பெயரில் போலி சிம் இருக்குதான்னு தெரியணுமா?

image

◆ https://sancharsaathi.gov.in/ பக்கத்துக்குச் செல்லவும் ◆‘Useful Links’ஐ கிளிக் செய்து, அதில், ‘Know Mobile Connections in Your Name’ஐ கிளிக் செய்யவும் ◆ உங்களின் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை பதிவிட்டு, ‘Captcha’வை பதிவிடவும் ◆போனுக்கு வரும் OTP-யை கொடுத்தால், உங்கள் பெயரில் இருக்கும் மொபைல் எண்கள் காட்டும் *அதில் செக் பண்ணி, எந்த நம்பர் உங்களுடையது இல்லையோ அதை புகார் செய்யலாம்.

News April 17, 2025

45 நாள்கள் விடுமுறை.. பள்ளி மாணவர்கள் குஷி!

image

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தேர்வுகள் நிறைவடைந்தது. 45 நாள்கள் கோடை விடுமுறை தொடங்கியதால் மாணவர்கள் சந்தோஷத்தில் உள்ளனர். 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே விடுமுறை விடப்பட்டுள்ளது. தற்போது 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இறுதித் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் அவர்களுக்கும் வரும் 23-ம் தேதியோடு தேர்வுகள் முடிவடைவதால் பின்னர் விடுமுறையாகும்.

News April 17, 2025

கருணாநிதி சமாதியில் கோவில் கோபுரம்… வெடித்த சர்ச்சை

image

இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்கு முன் அமைச்சர் சேகர்பாபு கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அங்கு கோயில் கோபுரம் போல் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். காலம்காலமாக இந்துக்களின் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதையே தொழிலாக திமுவினர் கொண்டுள்ளதாக சாடினார். அதிமுக தரப்பிலும் இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 17, 2025

‘நாளைய முதல்வரே’ என நயினாருக்கு போஸ்டர்!

image

தமிழக அரசியலில் தேர்தல் பரபரப்பு சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. 2026-ல் NDA கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா கூறி இருந்தார். அதே நேரத்தில், கூட்டணி மட்டும் தான், கூட்டணி ஆட்சி இல்லை என பேசி இபிஸ் அதிர வைத்தார். இந்த சூழலில்தான், பாளையங்கோட்டையில் நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டரில் ‘வருங்கால முதல்வரே’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க?

News April 17, 2025

பெண்ணை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டல்!

image

காதலனுடன் சேர்ந்து பெண்ணை நிர்வாணமாக வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த ஹேமலதா சிக்கியுள்ளார். திருவள்ளூரை சேர்ந்த இவர், கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். காதலர் ஜெயந்தனுடன் சேர்ந்து வாழ்ந்து வரும் நிலையில், ஜெயந்தன் வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்துள்ளார். அதனை வீடியோவாக பதிவு செய்து அந்த பெண்ணின் கணவரை மிரட்டி வந்த நிலையில், காதல் ஜோடி தற்போது கம்பி எண்ணுகிறது.

News April 17, 2025

அதிமுக உடனான கூட்டணியில் விரிசல் இல்லை: பாஜக

image

அதிமுக தலைவர்களின் பேச்சுகள் பாஜகவுடனான கூட்டணி நிலைக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளன. கூட்டணி மட்டுமே, ஆட்சியில் பங்கில்லை என்பதை <<16114717>>இபிஎஸ்<<>>, <<16125773>>தம்பிதுரை<<>> உள்ளிட்ட தலைவர்கள் திட்டவட்டமாக கூறி வருவதே இதற்கு காரணம். இந்நிலையில், சில பேச்சுகள் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறதே தவிர, அதிமுக உடனான கூட்டணி பலமாகவே இருக்கிறது என பாஜக தேசிய தலைமை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 17, 2025

இனி சிப்ஸ், ஐஸ்கிரீம் சாப்பிடும் முன் யோசியுங்க!

image

பெட்ரோலில் இருந்து பெறப்பட்ட கெமிக்கல்கள், சாப்பிடும் சில உணவுகளில் இருப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். பதப்படுத்தப்பட்ட தினை, உருளைக்கிழங்கு சிப்ஸ், சில சாக்லேட்டுகளின் மூலம் மனித உடலுக்குள் பெட்ரோல் நுழைய வாய்ப்பு உள்ளதாம். பெட்ரோலில் இருந்து பெறப்படும் Propylene Glycol ஐஸ்கிரீம் மற்றும் டோனட்டுகளிலும், Tertiary butyl hydroquinone சிப்ஸ் கெட்டுப்போகாமல் இருக்கவும் பயன்படுத்தப்படுகிறதாம்.

News April 17, 2025

டைம்ஸ் பட்டியலில் ஒரு இந்தியர் கூட இல்லை..

image

சர்வதேச அளவில் செல்வாக்குமிக்க 100 பேர்களின் பட்டியலை டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் டிரம்ப், ஜேடி வான்ஸ், எலான் மஸ்க், வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், மைக்ரோசாப்ட் சிஇஒ சத்யா நாதெல்லா, உள்ளிட்ட பலர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் ஒரு இந்தியர் கூட இடம்பெறவில்லை. கடந்த ஆண்டு இந்தியாவின், ஆலியா பட், சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோர் பட்டியலில் இடம்பெற்று இருந்தனர்.

error: Content is protected !!