India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என சுப்ரீம் கோர்ட்(SC) உத்தரவிட்டுள்ளது. மேலும், வக்ஃப் என பதியப்பட்ட, அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் மீது புதிய சட்டத்தின் கீழ் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை, அறிய புதிய செயலியை வருவாய் துறை உருவாக்கி வருகிறது. செல்போனில், ‘Tamilnilam Gioinfo’ செயலியை பதிவிறக்கம் செய்தால் போதும். அதில், தற்போது எந்த இடத்தில் இருக்கின்றோமோ, அந்த இடத்தின், கூகுள் மேப்புடன், சர்வே எண் விவரங்கள் டிஸ்பிளே ஆகும். அடுத்த சில மாதங்களில், இந்த செயலி செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இது வீடு, மனை உள்ளிட்ட ஆவணங்களை மக்கள் எளிதாக சரிபார்க்க உதவும்.
கோடை காலத்தில் கிச்சனில் சமைக்கும் போது, உடலின் உஷ்ணத்தை குறைக்க சூப்பர் டிப்ஸ்: சீக்கிரமாக தயாராகும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து சமைக்கலாம் *சமைக்கும் போது, ஜன்னலை திறந்து வையுங்கள். Exhaust ஃபேனை பயன்படுத்துங்கள் *உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள அடிக்கடி தண்ணீர், பழச்சாறுகளை பருகுங்கள் *ஃப்ரை பண்ணி சாப்பிடும் உணவுகளை தவிர்ப்பது, உஷ்ணத்தையும் குறைக்கும், உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்படுத்திய பழைய பாடல்களுக்கு முறையே NOC பெற்றிருப்பதாக தயாரிப்பாளர் ரவி சங்கர் தெரிவித்துள்ளார். தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக ₹5 கோடி கேட்டு இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். இதுதொடர்பாக விளக்கமளித்த ரவி சங்கர், இசை நிறுவனங்களிடம் இருந்து முறையான அனுமதி பெற்றுள்ளதாகவும், இளையராஜா தரப்பில் இருந்து எந்த நோட்டீஸும் வரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உ.பியில் சொந்த மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட மருமகனுடன் <<16041082>>மாமியார் ஓட்டம்<<>> பிடித்தது உங்களுக்கு தெரியும். ஒருவாரத்திற்கு பிறகு அவர்களை பிடித்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், என்ன ஆனாலும் ராகுலுடன் (மருமகன்) தான் வாழ்வேன் என்றும் மாமியார் சப்னா அழுதபடி கூறியுள்ளார். மேலும் தான் வீட்டில் இருந்து நகை பணத்தை எடுத்து செல்லவில்லை என்றும் தெரிவித்தார்.
குடும்பத்திடம் பாங்காக் ட்ரிப்பை மறைக்க நினைத்தவர் காவல்துறையில் சிக்கி கம்பி எண்ணுகிறார். புனேவை சேர்ந்த 51 வயது நபர் கடந்த ஆண்டு மட்டும் 4 முறை பாங்காக் சென்று வந்துள்ளார். ஆனால் அதை குடும்பத்தினரிடம் மறைக்க பாஸ்போர்ட்டில் சில பக்கங்களை கிழித்துள்ளார். இந்தோனேஷியாவில் இருந்து மும்பை விமான நிலையம் வந்த அவரின் பாஸ்போர்ட்டை சோதித்த அதிகாரிகள் பக்கங்கள் கிழிக்கப்பட்டதற்காக அவரை கைது செய்தனர்.
BGT தொடரின் தோல்வியை சுட்டிக்காட்டி <<16125458>>Asst. கோச் அபிஷேக் நாயர்<<>> உள்பட 3 பயிற்சியாளர்கள் அணியில் இருந்து நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளிவருகிறது. ஆனால், இந்த தோல்விக்கு அவர்கள் மட்டுமே எப்படி காரணமாக முடியும். தலைமை பயிற்சியாளர் கம்பீருக்கும் பங்கு இருக்கிறதே என கேள்வி எழுகிறது. கம்பீருக்கு மேலும் ஒரு சான்ஸ் வழங்க நினைத்தால், அபிஷேக்கிற்கும் வழங்கலாமே என நெட்டிசன்கள் கேட்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
நகைக்கடனுக்கு RBI புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதனால் முத்தூட், மணப்புரம் போன்ற நிறுவனங்களில் நகையை அடகு வைக்கும் நடைமுறை மாறுகிறது. உதாரணமாக உங்களது நகையின் மதிப்பு ₹1 லட்சம் எனில், கடன் ₹75,000 மட்டுமே கிடைக்குமாம். அதாவது Loan-to-Value (LTV) அளவு 75%ஐ தாண்டினால் நிறுவனத்தின் லாபத்திலிருந்து 1% தொகையை பாதுகாப்பு நிதியாக ஒதுக்கப்படும் என்பதால் அடகு வைக்கும் முன் விவரங்களை கேளுங்க..
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர், நடிகர் வேதாங் ரெய்னாவுடன் காதலில் இருப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. ‘ஆர்ச்சிஸ்’ படத்தில் நடித்தபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த ஜோடி டேட்டிங்கில் இருப்பதாக செய்திகள் உலா வந்தன. அதனை சிம்பாலிக்காக குஷி கபூர் உறுதி செய்துள்ளார். V, K ஆகிய எழுத்துகள் அடங்கிய செயின் அணிந்திருக்கும் அவரது ஸ்டில்ஸ் வைரலாகி வருகின்றன.
உடல் சூட்டை தணிப்பது அம்மை நோயை வராமல் தடுக்கும் *வாரம் 3 நாள்கள் தலைக்குக் குளிக்கலாம் *வெறும் தண்ணீர் குடிக்காமல், எலுமிச்சை சாறு, நன்னாரி போன்றவற்றைச் சேர்க்கலாம் *தாழம்பூவுக்கு அம்மையைத் தடுக்கும் குணம் உண்டு. டாக்டர்களின் ஆலோசனையோடு தாழம்பூ மணப்பாகு எடுத்துக்கொள்ளலாம். குளிக்கும் நீரில் வேப்பிலையும் மஞ்சளும் சேர்த்து குளிக்கலாம் *இளநீர், கரும்பு ஜூஸ், பனஞ்சாறு குடிக்கலாம். SHARE IT.
Sorry, no posts matched your criteria.