News April 17, 2025

பங்குச்சந்தை: அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்கள் இவைதான்

image

இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,509 புள்ளிகள் உயர்ந்து 78,553 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 50, 414.45 புள்ளிகள் உயர்ந்து 23,852 புள்ளிகளில் நிறைவு செய்தது. ஐடி பங்குகள் சரிவை சந்தித்தாலும், வங்கி, நிதிச்சேவை பங்குகள் ஏற்றம் கண்டன. ஜொமாட்டோ, சன் பார்மா, ICICI, ஏர்டெல், பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்டவை அதிக லாபம் ஈட்டின.

News April 17, 2025

9 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

9 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. இதேபோல், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக IMD கணித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்ட் பண்ணுங்க.

News April 17, 2025

கைகூடும் 13 வருட காதல்.. மகிழ்ச்சியில் அர்ஜுன் மகள்

image

நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கி வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் தான் 13 வருடங்களாக காதலித்து வந்த காதலரை கரம்பிடிக்க உள்ளதாகக் கூறி, அவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து கூடிய விரைவில் இவர்களது திருமணம் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News April 17, 2025

₹5,979 கோடி.. இந்திய ஏவுகணைக்கு ரேட்!

image

இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணையை ₹5,979 கோடிக்கு வியட்நாம் வாங்க உள்ளது. இதுதொடர்பான இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. வரும் மாதங்களில் இருநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட உள்ளது. தென்சீனக் கடலில் சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க வியட்நாம் ஏவுகணைகளை வாங்குகிறது. முன்னதாக, ₹3203 கோடிக்கு பிலிப்பைன்ஸ் இந்த ஏவுகணையை இந்தியாவிடம் இருந்து வாங்கியது.

News April 17, 2025

IPL: மும்பை அணி பந்துவீச்சு

image

இன்றைய IPL லீக் ஆட்டத்தில், MI – SRH அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. மும்பையில் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்கும் முக்கியமானது. நடப்பு தொடரில் இரு அணிகளும், 6 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளிலும் பவர் ஹிட்டர்ஸ் இருப்பதால், ரன் குவிப்பை எதிர்பார்க்கலாம்.

News April 17, 2025

நிர்வாண வீடியோ.. பெண்ணை டார்ச்சர் செய்தவருக்கு வலை

image

காஞ்சிபுரம் அருகே வீடியோகாலில் நிர்வாணமாக நிற்கும்படி இளம்பெண்ணை டார்ச்சர் செய்த சிப்காட் அதிகாரியை போலீஸ் தேடுகிறது. உத்திரமேரூர் அருகேவுள்ள இளம்பெண், செய்யாறு சிப்காட்டில் வேலை செய்கிறார். அவரிடம் சிப்காட் அதிகாரி சுரேஷ், செல்போனில் ஆபாச பேசி நிர்வாணமாக நிற்க கூறியுள்ளார். இதனால் வேதனையடைந்த அப்பெண், மகளிர் போலீசில் புகார் அளிக்க, சுரேசை தற்போது போலீஸ் தேடி வருகிறது.

News April 17, 2025

மஸ்க்கை புகழ்ந்து தள்ளிய புடின்

image

ரஷ்ய அதிபர் புடின், எலான் மஸ்க்கை மீண்டும் புகழ்ந்துள்ளார். செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியமர்த்துவது தொடர்பான மஸ்கின் முயற்சிகள் இப்போது சாத்தியமில்லாதவையாக தோன்றினாலும், வருங்காலத்தில் சாத்தியப்படும் எனவும், ரஷ்ய விண்வெளி ஆய்வின் முன்னோடி செர்ஜெய் கொரொலெவ்வை இவருடன் ஒப்பிடலாம் எனவும் புடின் தெரிவித்துள்ளார். உலகின் முதல் செயற்கைக்கோள்களான ஸ்புட்னிக், வோஸ்டாக் 1-ஐ ஏவியவர் தான் செர்ஜெய்.

News April 17, 2025

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது

image

தலைமைச் செயலகத்தில் CM ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. புதிய தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளது.

News April 17, 2025

நாளை முதல் 3 நாள்கள் தொடர் விடுமுறை

image

கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு நாளை முதல் 3 நாள்கள் தொடர் விடுமுறையாகும். நாளை வெள்ளிக்கிழமை (ஏப்.18) ‘GOOD FRIDAY’-வை முன்னிட்டு அரசு விடுமுறை ஆகும். அடுத்த நாள் சனிக்கிழமை. அதற்கடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை. ஆகவே, அடுத்தடுத்து 3 நாள்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. அண்மையில்தான் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து மீண்டும் 3 நாள்கள் விடுமுறை கிடைக்கிறது.

News April 17, 2025

டிரெண்டாகும் டோலோ 650.. இது மாத்திரையா? சாக்லெட்டா?

image

X தளத்தில் தற்போது டோலோ 650 மாத்திரைதான் டிரெண்டிங் டாபிக். அமெரிக்காவில் பணியாற்றி வரும் மதுரையைச் சேர்ந்த டாக்டர் பால் என அழைக்கப்படும் பழனியப்பன் மாணிக்கத்தின் பதிவுதான் இதற்கு காரணம். இந்தியர்கள் கேட்பரி ஜெம்ஸ் சாக்லெட்டை போன்று டோலோ 650 மாத்திரைகளைப் பயன்படுத்துவதாக அவர் பதிவிட்டுள்ளார். பலரும் அதை ஒப்புக்கொண்டு கமெண்ட் செய்து வருகிறனர். நீங்க எப்படி?

error: Content is protected !!