News April 17, 2025

BREAKING: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 163 ரன்கள் இலக்கு

image

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 163 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட் செய்தது. 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக அபிசேக் சர்மா 40 ரன்கள், கிளாசன் 37 ரன்கள், டிராவிஸ் ஹெட் 28 ரன்களை விளாசினர்.

News April 17, 2025

PM இன்டர்ன்ஷிப் திட்டம்: இன்னும் 5 நாள்கள் அவகாசம்

image

PM இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்னும் 5 நாள்கள் மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது. PM இன்டர்ன்ஷிப் திட்டத்தின்கீழ் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து படித்த இளைஞர்களைத் தேர்வு செய்து மாதம் ரூ.5,000, ஒருமுறை ரூ.6,000 மத்திய அரசு அளிக்கிறது. இந்தத் திட்டத்தில் சேருவதற்கான கால அவகாசம் கடந்த 15-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. எனினும், அந்த அவகாசத்தை 22ம் தேதி வரை அரசு நீடித்துள்ளது.

News April 17, 2025

2026 தேர்தல்: திமுக கூட்டணி VS அதிமுக கூட்டணி (2/2)

image

2006 தேர்தலில் 96 தொகுதிகளில் வென்ற திமுக, கூட்டணிக் கட்சியையே நம்பியிருந்தது. 2021 தேர்தலிலும் சிம்பிள் மெஜாரிட்டியிலேயே வென்றது. தோற்கையில் (2001, 2011) திமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. தனிப்பட்ட வாக்கு விகிதத்தை கணக்கிட்டாலும் திமுகவை விட அதிமுக பலமாக உள்ளது. 2021 தேர்தலில் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க அதிமுக களத்தில் குதித்துள்ளது. பதிலுக்கு திமுக என்ன செய்கிறது எனப் பார்க்கலாம்.

News April 17, 2025

2026 தேர்தல்: திமுக கூட்டணி VS அதிமுக கூட்டணி (1/2)

image

2026 தேர்தலுக்காக பாஜக-அதிமுக முன்கூட்டியே கூட்டணி அமைத்தது, அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது. 2021 தேர்தலில் திமுக கூட்டணியிடம் தோற்றாலும், அதிமுக வாக்கு விகிதத்தில் மிகப்பெரிய பாதிப்பு இல்லை எனலாம். ஏனெனில் தேர்தல்களில் வெல்கையில் பெரிய வெற்றிகளை அதிமுக குவித்துள்ளது. தோற்றாலும் அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை தன்வசமாக்கியுள்ளது. 2006, 2021 தேர்தலில் 61, 66 தொகுதிகளை வென்றுள்ளது.

News April 17, 2025

61 வயதில் திருமணம் செய்யும் பாஜக EX எம்பி

image

61 வயதில் மே.வங்க பாஜக EX எம்பி திலிப் கோஷ் திருமணம் செய்ய இருப்பது, அந்த மாநில அரசியலில் பேசு பொருளாகியுள்ளது. ஆர்எஸ்எஸ்-காரரான திலிப் கோஷ் திருமணம் செய்யக்கூடாது என உறுதியாக இருந்தார். தற்போது அந்த முடிவை கைவிட்டு, 51 வயதான தெற்கு கொல்கத்தா பாஜக மகளிர் அணி தலைவி ரிங்கு மஜூம்தாரை நாளை திருமணம் செய்கிறார். 2 பேரும் நடைபயிற்சியில் அறிமுகமாகியுள்ளனர். இதை திருமணமாக்க முடிவு செய்துள்ளனர்.

News April 17, 2025

26 பந்துகளில் சதம்.. 24 சிக்ஸர்களை விளாசிய வீரர்

image

ஐரோப்பிய கிரிக்கெட் தொடரில் (T10) புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. சிவிட்டாவெச்சியா அணிக்கு எதிரான போட்டியில், மிலன் வீரர் ஜையின் நக்வி, வெறும் 26 பந்துகளில் சதம் விளாசினார். கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார். 24 சிக்ஸர், 2 ஃபோர் என 37 பந்துகளில் 160* ரன்களை அடித்தார். 8, 10-வது ஓவர்களில் 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர்களை விளாசினார்.

News April 17, 2025

தவெக கொடி வழக்கு: விஜய் பதில் அளிக்க உத்தரவு

image

தவெக கொடியில் இடம்பெற்றுள்ள யானை படத்துக்கு தடை கோரி பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில் கொடியில் யானைகள் இடம்பெற்றிருப்பது தேர்தல் சின்னங்கள் விதிகளுக்கு முரணானது எனவும் கூறப்பட்டிருந்தது. இதை விசாரித்த நீதிமன்றம் ஏப்ரல் 29-ம் தேதிக்குள் தவெக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

News April 17, 2025

வீட்டை எதிர்த்து திருமணம்? கோர்ட் முக்கிய தீர்ப்பு

image

பெற்றோர் சம்மதம் இல்லாமல் ஓடிப்போய் திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு, உண்மையான அச்சுறுத்தல் இல்லாதவரை, போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. சம்மந்தபட்ட ஜோடிகள், இந்த சமூகத்தை எதிர்கொள்ள கற்றுக்கொள்ளவும் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. மேலும் உறவினர்களால் பாதிப்பு இல்லை எனக் கூறிய கோர்ட், பாதுகாப்பு கேட்ட ஜோடிகளுக்கு பாதுகாப்பை வழங்க மறுத்து உத்தரவிட்டுள்ளது.

News April 17, 2025

அட்சய திரிதியை: 5 ராசிக்காரர்களுக்கு பணமழை

image

அட்சய திரிதியையில் 5 ராசியினருக்கு பணமழை கொட்டும் என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். கடக ராசியினருக்கு வெற்றி, விரும்பிய வேலை கிடைக்கும். தங்கம், வெள்ளி சேரும். மகர ராசியினருக்கு, லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் மூலம் புதிய வருமானம் கிடைக்கும். கும்ப ராசியினர் வியாபாரம், தொழிலில் லாபம் பெறுவர். ரிஷப ராசியினருக்கு வங்கியில் சேமிப்பு உயரும். துலாம் ராசியினர் புதிய சொத்துகள் வாங்குவர்.

News April 17, 2025

21 ஏக்கர் நிலம் வெறும் 99 பைசாவிற்கு!

image

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள 21.16 ஏக்கர் நிலத்தை, TCS நிறுவனத்திற்கு 99 பைசாவிற்கு ஒதுக்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவு மாநிலத்திற்கு ₹1,370 கோடி முதலீட்டைக் கொண்டு வரும் எனவும், மேலும் 12,000 வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலத்தில் TCS நிறுவனம் புதிய IT வளாகத்தை அமைக்க உள்ளது.

error: Content is protected !!