India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்த சீசனில் RCB தான் கப் ஜெயிக்கும் என நியூசி.-யின் ஸ்டார் வீரர் வில்லியம்சன் கணித்துள்ளார். இந்த சீசனில் விராட் கோலி மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், இந்த முறை கோப்பையை வெல்ல அவர் கடுமையாக முயற்சித்து வருவதாகவும் வில்லியம்சன் கூறியுள்ளார். மேலும், இந்த ஆண்டு அவர்களின் கனவு நிறைவேறும் எனவும் தெரிவித்துள்ளார். நீங்கள் என்ன நினைக்கிறீங்க, கமெண்ட் பண்ணுங்க.
பெங்களூருவைச் சேர்ந்த சதீஷ் என்ற நபர் ₹50 கோடிக்கு நாய் வாங்கியதாக சோஷியல் மீடியாவில் பதிவிட அது ED ரெய்டு வரைக்கும் சென்றுள்ளது. ‘கடாபோம்ப் ஒகாமி’ எனும் நாய் + ஓநாய் சேர்ந்த கலப்பின நாயை வாங்கியதாக அவர் குறிப்பிட்டார். இதையடுத்து அவரது வீட்டிற்கு ரெய்டுக்குச் சென்ற ED அதிகாரிகள் சதீஷ் சொன்னது பொய் எனவும், பக்கத்து வீட்டுக்காரரின் நாயை அவர் போட்டோ எடுத்து பதிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
2026-ம் ஆண்டு பொங்கலுக்கு மக்களுக்கு அரசு இலவசமாக வேட்டி-சேலை வழங்கவுள்ளது. இதற்காக முன்கூட்டியே 1.46 கோடி சேலைகளும், 1.44 கோடி வேட்டிகளும் உற்பத்தி செய்ய தமிழக அரசு நிர்வாக ரீதியிலான ஆணையை பிறப்பித்துள்ளது. மேலும், இலவச வேட்டி-சேலைக்காக அரசு முதல்கட்டமாக ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து, வரும் ஜூன் மாத தொடக்கத்தில் தயாரிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் டீலர் ஒருவர் தன் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். புற்றுநோயை குணப்படுத்த பணத்தை வீணடிக்க விரும்பவில்லை என கடிதத்தில் எழுதி வைத்துள்ளார். இறுதிவரை உன்னோடு இருப்பேன் என மனைவிக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்ற அவரை கொன்றுவிட்டதாகவும் கூறியுள்ளார். பெற்றோரை இழந்து மகன்கள் கண்ணீருடன் தவிக்கின்றனர்.
சாப்பிட்டதும் பலரும் தூங்கி விடுகிறார்கள். இது நமது ஹார்மோனல் சமநிலையை பாதிக்கும். உணவு ஜீரணத்தை தாமதமடைய செய்யும். மேலும் நெஞ்செரிச்சல், செரிமான பிரச்னையை உண்டாக்கும். உடல் எடை அதிகரிப்பு, பருமன் பிரச்னையை ஏற்படுத்தும். ஆதலால் சாப்பிட்ட பிறகு குறைந்தது 15 நிமிடங்களாவது நடக்க வேண்டுமென உடல்நல நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD தெரிவித்துள்ளது. இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் IMD தெரிவித்துள்ளது.
சிறுவயதில் கமல்ஹாசனை கட்டிப்பிடித்துவிட்டு 3 நாள்கள் குளிக்காமல் இருந்ததாக நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார். கமலின் ஆரா மற்றும் ஸ்மெல் தன் மீது இருக்க வேண்டும் என நினைத்து அப்படி செய்ததாகவும், அந்த அளவிற்கு அவருடைய ரசிகன் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஒருவேளை தான் பெண்ணாக பிறந்திருந்தால் அவரைத் தான் நிச்சயமாக திருமணம் செய்திருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
‘புலே’ பட ரிலீஸை எதிர்க்கும் பிராமண சங்கங்களை அனுராக் காஷ்யப் கடுமையாக சாடியுள்ளார். இந்த நாட்டில் சாதி இல்லையென்றால், ஜோதிராவ் புலே, சாவித்ரிபாய் புலே போன்றோர் ஏன் போராட போகிறார்கள் எனவும், பிராமணர்கள் உண்மையிலேயே வெட்கப்படுகிறார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்ட படம் குறித்து சாதி சங்கத்திற்கு எப்படி தெரியவந்தது எனவும் வினவியுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளரும், பழங்குடியின ஆர்வலருமான ரோஸ் கெர்கட்டா காலமானார். கொரோனா காலகட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து படுத்த படுக்கையாக இருந்தார். மேலும் அவர் பல்வேறு உடல்நல பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் இன்று உயிரிழந்தார். அவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இதுகுறித்து கேள்விப்பட்டு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதில் நிர்வாகிகளுக்கு அதிமுக கடிவாளம் போட்டுள்ளது. கழகத்தின் முக்கிய முடிவுகள், நிலைப்பாடுகள் குறித்தான தகவல்களை, கட்சியின் தலைமை உரிய நேரத்தில் அவ்வப்போது தெரிவிக்கும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆகவே கழகத்தின் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த எவ்வித கருத்துகளையும் அனுமதியின்றி ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.