India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மும்பை இந்தியன்ஸ் ஸ்டார் வீரர் ரோஹித் ஷர்மா, எலைட் லிஸ்டில் இணைந்துள்ளார். ஒரு மைதானத்தில் (மும்பை வான்கடே) 100க்கும் அதிகமான சிக்ஸர்களை விளாசிய 4ஆவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 130 சிக்ஸர்கள் அடித்து கோலி முதல் இடத்திலும், 127 சிக்ஸர்களுடன் கிறிஸ் கெயில் 2ஆம் இடத்திலும், 118 சிக்ஸர்களுடன் ஏபி டிவில்லியர்ஸ் 3ஆம் இடத்திலும் உள்ளனர்.
பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய <<16130005>>பொன்முடி <<>>மீது வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டது. ஏற்கெனவே, இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. ஒருவேளை போலீசார் வழக்குப்பதிவு செய்தால், அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை மேலும் வலுக்கும். இது தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு பெரும் நெருக்கடியாக மாறும்.
இன்று (ஏப்ரல் 18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
SRH-ன் முக்கிய பவுலராக இருந்த நடராஜனை, DC பயன்படுத்தாமல் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏலத்தில் ₹10.75 கோடிக்கு வாங்கியும், நடப்பு சீசனில் இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. காயத்தில் இருந்து மீண்டு ஃபிட்டாக இருக்கும் போதிலும், Playing 11-ல் சேர்க்காதது ஏன் என கேள்வி எழுந்துள்ளது. கடந்த சீசனில் அவர் 19 விக்கெட்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே 14 குழந்தைகளுக்கு தந்தையான எலான் மஸ்க், பல பெண்களை X மூலம் தொடர்பு கொண்டு ரகசியமாக குழந்தைகளை பெற முயற்சிப்பதாக Wall Street Journal ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது. வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற, பல பெண்களுடன் ரகசிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகவும், உலகளவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளதால் அவர் இப்படி செய்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதை வதந்தி என மஸ்க் மறுத்துள்ளார்.
பள்ளிகளில் தற்போது மாநில அரசால் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, மாணவர்களின் வருகை அதிகரித்திருப்பதாகக் கூறினார். தற்போது காலை உணவுத் திட்டத்தில் அரிசி உப்புமா வழங்கப்படுவதாகவும், அதற்குப் பதில் இனி பொங்கல்-சாம்பார் வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
SRH-க்கு எதிரான ஆட்டத்தில் MI அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த SRH 162 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய MI அதிரடியாக விளையாடியது. இதனால், அந்த அணி 18.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் ரோகித் முதல் ஹர்திக் பாண்டியா வரை அனைவரும் சிறப்பாக விளையாடினர்.
➤மேஷம் – தாமதம் ➤ரிஷபம் – வெற்றி ➤மிதுனம் – உயர்வு ➤கடகம் – முயற்சி ➤சிம்மம் – பெருமை ➤கன்னி – பயம் ➤துலாம் – ஓய்வு ➤விருச்சிகம் – தனம் ➤தனுசு – உதவி ➤மகரம் – பாசம் ➤கும்பம் – சிரமம் ➤மீனம் – சுகம்.
மோகன்லால் நடித்த ‘L2: எம்புரான்’ திரைப்படம் வரும் 24ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் கலவரம், அன்றைய இந்துத்துவ பஜ்ரங் தள் அமைப்பின் குஜராத் தலைவரான பாபு பஜ்ரங்கை வில்லனாக சித்தரித்தது என பல சர்ச்சைகள் எழுந்ததால், இப்படத்தின் 17 சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கப்பட்டது. சர்ச்சைகளுக்கு மத்தியிலும் இப்படம் ₹250 கோடியை வசூல் செய்தது.
திமுக தொடர்ந்த வழக்கில், வக்ஃப் சொத்துக்களை மாற்ற இடைக்கால தடை விதித்த SC-க்கு CM ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இஸ்லாமிய சமூகத்தை குறிவைத்து மத்திய அரசு இச்சட்டத்தை இயற்றியதாகவும், பிற்போக்குத்தனமான விதிகளை நீதித்துறை மறுஆய்வு செய்ததில் மகிழ்ச்சி எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், சிறுபான்மை சகோதரர்களின் உரிமையை பாதுகாக்க எந்த வாய்ப்பையும் நழுவ விடமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.