News October 24, 2025

‘பைசன்’ பார்த்துவிட்டு பாராட்டிய வைகோ

image

‘பைசன்’ படத்தை பார்த்துவிட்டு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வைகோ போனில் பேசி வாழ்த்து தெரிவித்ததாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். நீண்ட நாள்களுக்கு பிறகு நான் பார்த்த சினிமா, இதை எடுத்த இயக்குநர் யார் என தேட வைத்தது மாரி, நீங்கள் தூரத்தில் இருக்கிறீர்கள், நான் இங்கிருந்தே கட்டித் தழுவுகிறேன் என வைகோ தெரிவித்ததாகவும் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.

News October 24, 2025

அனைவருக்கும் ₹1,000 உரிமைத் தொகை.. வந்தது அப்டேட்

image

வருமான வரி செலுத்தும் குடும்பத்தினரை தவிர்த்து, அனைத்து மகளிருக்கும் ₹1,000 உரிமைத் தொகை வழங்க நிதித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக சேர சுமார் 30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், தகுதியுள்ள மகளிருக்கு டிச.15-ம் தேதி முதல் பணம் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. தற்போதைய நடவடிக்கையால் லட்சக்கணக்கான மகளிர் பயனடைய உள்ளனர். SHARE IT.

News October 24, 2025

இரவில் தேன் சாப்பிட்டால்..

image

இரவில் தேன் சாப்பிடுவதால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றில் சில முக்கியமான பலன்கள் என்னென்ன என்று மேலே போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. அதில், உள்ள நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க. இதுபோன்று வேறு ஏதேனும் நன்மைகள் உங்களுக்கு தெரிந்தால், கமெண்ட்ல சொல்லுங்க.

News October 24, 2025

2026-ல் தங்கம் விலை எப்படி இருக்கும்?

image

பல்கேரியவைச் சேர்ந்த பாபா வாங்காவின் முன்னறிவிப்புகள் பலதும் நிஜத்தில் நடந்துள்ளன. அந்தவகையில், 2026-ல் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவிலான நிதி நெருக்கடி ஏற்படும் எனவும், பாரம்பரிய நிதி அமைப்புகள் சீர்குலையும் என்றும் கணித்துள்ளார். பாரம்பரிய அமைப்புகள் பாதிக்கப்பட்டால், அது நிச்சயம் தங்கம் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். அதன்படி தங்கத்தின் விலை 20 – 40% வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News October 24, 2025

BREAKING: விஜய் அதிரடி முடிவு

image

கரூர் துயரத்தையொட்டி புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 2-ம் கட்ட தவெக தலைவர்கள் மீது விஜய் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில், கட்சியின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களின் பதவிகளை கலைக்கும் அதிரடி முடிவை அவர் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News October 24, 2025

நாளை சாதனை படைப்பாரா ரோஹித்?

image

ஆஸி.,-க்கு எதிரான 3-வது ODI போட்டி நாளை நடைபெற உள்ளது. இதில் ரோஹித் சர்மா முக்கிய சாதனை ஒன்றை படைக்க வாய்ப்புள்ளது. அதன்படி, நாளைய போட்டியில் 6 சிக்ஸர்களை அடித்தால், ODI போட்டிகளில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைப்பார். இந்த பட்டியலில் 351 சிக்ஸர்களுடன் பாகிஸ்தான் முன்னாள் வீரர் அஃப்ரிடி முதலிடத்திலும், 346 சிக்ஸர்களுடன் ரோஹித் சர்மா 2-வது இடத்திலும் உள்ளனர்.

News October 24, 2025

கேரளாவை பார்த்து மனம் மாறுங்கள் CM: நயினார்

image

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கேரளா இணைந்ததை சுட்டிக்காட்டி, உங்கள் சகாவைப் பார்த்தாவது மனம் மாறுங்கள் என CM ஸ்டாலினை நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என ஆடம்பர விழாக்களை நடத்தினால் போதுமா, அரசு பள்ளி மாணவர்களை முன்னேற்ற வேண்டாமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஆட்சி முடியும் நேரத்திலாவது, மாணவர்கள் நலன் காக்க முன்வர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

News October 24, 2025

உருவானது புயல் சின்னம்.. மழை வெளுத்து வாங்கும்

image

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இது நாளை தாழ்வு மண்டலமாகவும், 27-ம் தேதி புயலாகவும் மாற வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. ஏற்கெனவே பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், புயல் சின்னத்தால் மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அக்.28 வரை மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News October 24, 2025

தீபாவளி சோகம்: 30 குழந்தைகள் பார்வை இழப்பு?

image

தீபாவளியில் கார்பைடு துப்பாக்கி வைத்து கொண்டாடிய 30 குழந்தைகள் <<18082464>>பார்வையை இழக்கும்<<>> அபாயம் உள்ளதாக ம.பி. அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த 30 குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை 300 பேர் தீவிர கண் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். முன்னதாக, நேற்று 14 குழந்தைகள் பார்வையை இழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

News October 24, 2025

நடிகர் லிவிங்ஸ்டன் இறந்துவிட்டாரா?… CLARITY

image

நடிகர் லிவிங்ஸ்டன் இறந்துவிட்டதாக வதந்தி பரவி வருகிறது. அவரது மகள் ஜோவிடாவின் இன்ஸ்டா பதிவுக்கு விஜய் ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்ததே அதற்கு காரணம். தந்தை லிவிங்ஸ்டனுடன் இருக்கும் வீடியோவை ஜோவிடா பதிவிட, ‘உங்க அப்பா இன்னும் உயிரோடு இருக்கிறாரா?’ என அவர் கேட்டார். இதனால் கடுப்பான ஜோவிடா, நீங்களும் உங்கள் குடும்பமும் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்ததாக அல்லவா நினைத்தேன் என பதிலடி கொடுத்துள்ளார்.

error: Content is protected !!