India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரசு துறைகளின் சேவைகளை வாட்ஸ்அப் வாயிலாக பெற ‘நம்ம அரசு’ என்ற பெயரில் சாட்பாட் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இச்சேவைகளை 78452 52525 என்ற வாட்ஸ்அப் எண்ணில் பெற முடியும். தற்போது 16 அரசு துறைகளை சேர்ந்த 51 சேவைகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. மின்சார கட்டணம் செலுத்தும் வசதி, மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இதில் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

IND vs NZ இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ODI தொடர் இன்று மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது. SA-க்கு எதிரான தொடரில் ருத்ரதாண்டவம் ஆடிய RO-KO ஜோடி இன்றைய போட்டியில் விளையாட உள்ளதால், எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதேபோல், மண்ணீரல் காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஸ்ரேயஸ் ஐயர், நீண்ட நாள்களுக்கு பிறகு அணியில் இடம்பெற உள்ளார். மேலும், காயம் காரணமாக பண்ட் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

▶ஜனவரி 11, மார்கழி 27 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 3:30 PM – 4:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: அஷ்டமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.

தமிழுக்கு பண்ண துரோகத்துக்கு இந்த ஜென்மத்துல ஆட்சிக்கு வர முடியாது என ‘பராசக்தி’ படத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வசனம் இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இதை மேற்கோள்காட்டிய அக்கட்சி MP மாணிக்கம் தாகூர், பரவும் தகவல் உண்மையா? பார்த்தவர்கள் வீடியோ போடுங்க பா. இந்த படம் தோல்வி என நண்பர்கள் சொன்னார்கள், உழைத்த காசை வீணாக்க வேண்டாம் என அதை பார்க்கவில்லை என அவர் என தனது X-ல் பதிவிட்டுள்ளார்.

பாக்., – வங்கதேசம் இடையே விமான சேவை வரும் 29-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இவை இந்திய வான் எல்லைக்குள் பயணிக்க வேண்டும் என்பதால், இதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாக்., விமானங்கள் இந்திய வான் எல்லையில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கும் அனுமதி மறுக்க பட்டால், 2,300 கி.மீ பயண தொலைவு 5,800 கி.மீட்டராகவும், பயண நேரம் 3 to 8 மணி நேரமாகவும் அதிகரிக்கும்.

வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மரியா, தனது அமைதிக்கான நோபல் பரிசை டிரம்பிற்கு தர விரும்புவதாக சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில், ஏற்கனவே ஒருவருக்கு அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்ட நோபல் பரிசை வேறு எவருக்கும் மாற்றவோ, பகிர்ந்து கொள்ளவோ முடியாது என நார்வே நோபல் அமைப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக, 8 போர்களை நிறுத்தியதற்கு தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என டிரம்ப் கூறியிருந்தார்.

பிஹார் CM நிதிஷ்குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை வலுத்து வருகிறது. இது தொடர்பாக JD(U) MP கேசி தியாகி PM மோடிக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானும் இதை வலியுறுத்தியுள்ளார். இந்த பட்டியலில் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகனான தேஜ் பிரதாப்பும் இணைந்துள்ளார். மேலும், நிதிஷ்குமாருக்கு கொடுத்தால் தனது தந்தைக்கும் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வெனிசுலாவின் எண்ணெய் வளத்தில் இருந்து ஈட்டப்படும் வருவாய், தற்போது முழுக்க முழுக்க அமெரிக்க கட்டுப்பாட்டில் சென்றுள்ளது. எந்தவொரு நீதித்துறை நடவடிக்கைகளில் இருந்தும் அந்த நிதியை பறிமுதல் செய்ய முடியாத வகையில் முக்கிய உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். வெனிசுலாவின் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய இந்த நிதி பயன்படுத்தப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமேசானும், பிளிப்கார்ட்டும் அடுத்த பெரிய விற்பனைக்கு தயாராகி வருகின்றன. குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் 16-ம் தேதி ‘Great Republic Day Sale’-ஐ தொடங்க உள்ளதாக அமேசான் அறிவித்துள்ளது. SBI கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 10% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிளிப்கார்ட்டின் குடியரசு தின விற்பனை வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. டிவி, போன்கள், லேப்டாப்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

100 நாள் வேலை திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரி, நாடு தழுவிய 45 நாள் பிரசாரத்தை காங்., முன்னெடுத்துள்ளது. இன்று அனைத்து மாவட்டங்களிலும் ஒருநாள் உண்ணாவிரத போராட்டமும், நாளை முதல் வரும் 29-ம் தேதி வரை கிராம பஞ்சாயத்துகளில் மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. மேலும், பிப். 7 -15 வரை மாநில அளவிலும், பிப்.16 – 25 வரை பெரிய பேரணிகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.