India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அதிமுக மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான தம்பிதுரை(78) உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை திடீரென அவரது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், குடும்பத்தினர் ஹாஸ்பிடலில் சேர்த்துள்ளனர். டாக்டர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வரும் நிலையில், சிகிச்சைகள் தொடர்பாக விரைவில் மருத்துவ அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்.30-ல் தேவர் ஜெயந்தி விழா நடைபெறவுள்ளது. இதில் துணை ஜனாதிபதி CP ராதாகிருஷ்ணன் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்.28-ல் தமிழகம் வரும் அவர், கோவையில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அக்.29-ல் மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்கும் அவர், 30-ம் தேதி மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக பசும்பொன் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும் என்றும், நாளை மறுநாள் புயலாக மாறும் என்றும் IMD அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி ஆகிய 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா ஒரு சிறப்பான ஜனநாயக நாடு என்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற வெனிசுலா அரசியல் செயற்பாட்டாளர், மரியா கொரினா மச்சாடோ பாராட்டியுள்ளார். மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக இந்தியா உள்ளது என்று கூறிய அவர், வெனிசுலா மக்களின் உரிமைகளையும், இறையாண்மையையும் பாதுகாக்க இந்தியாவின் ஆதரவு குரல் தேவை என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியுடன் பேச விரும்புவதாகவும், மரியா கொரினா குறிப்பிட்டுள்ளார்.

பிஹார் சட்டசபை தேர்தலில் INDIA கூட்டணி தேஜஸ்வி யாதவை CM வேட்பாளராக அறிவித்தது. தொடர்ந்து, NDA கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேசியுள்ளார் PM மோடி. நேற்று பிஹாரில் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நிதிஷ்குமார் தலைமையில் NDA கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று சாதனை படைக்கும் என்று கூறியுள்ளார்.

அரையாண்டு, கிறிஸ்துமஸ் விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை முதல் தொடங்கியுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு டிச.15 முதல் 23 வரை நடைபெறுகிறது. டிச.24 – ஜன.1 வரை அரையாண்டு விடுமுறை வருகிறது. அதேபோல், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டிச.25-ம் தேதி விடுமுறையாகும். இதனால், விடுமுறைக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக, ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

பள்ளி ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வினை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக CM ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால், இதுகுறித்து ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வார் என்றும் விரைவில் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிடுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

சினிமாவில் ஜொலித்த விஜய்க்கு அரசியல் களத்தில் அடுத்தடுத்து தடைகள் ஏற்பட்டு வருகின்றன. சோசியல் மீடியா மற்றும் பிரசார களங்களில் பம்பரமாக சுழன்று வந்த அக்கட்சியின் தொண்டர்கள் சிறிது காலமாக சைலண்ட் மோடில் உள்ளனர். இதற்கு கரூர் சம்பவம் காரணமாக கூறப்பட்டாலும், சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் விஜய் தடுமாறுவதாகவும் கூறுகின்றனர். தங்களது ஆதங்கத்தை சிலர் விஜய்யை Tag செய்து X பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்தை கண்டுள்ளது. இன்று(அக்.25) சவரனுக்கு ₹800 அதிகரித்துள்ளது. 22 கேரட் 1 கிராமுக்கு ₹100 உயர்ந்து ₹11,500-க்கும், சவரன் ₹92,000-க்கும் விற்பனையாகிறது. நேற்று மாலை நேர வர்த்தகத்தில் ₹1,120 குறைந்திருந்த நிலையில், மிகப்பெரிய மாற்றமாக மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. அதேநேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹170-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,70,000-க்கும் விற்பனையாகிறது.

மனிதர்களுடன் செல்லம் கொஞ்சும் பிராணிகளில் ஒன்று பூனை. மனிதர்களுடன் எப்போதும் இணைந்தே இருக்கும் ஒரு செல்லப்பிராணி. நம் வாழ்வின் இன்ப, துன்பங்களில் பங்கு கொள்ளும், அமைதியான ஆறுதலை தரும் உயிர் துணைகள். இப்படிப்பட்ட பூனைகள் பற்றி உங்களுக்கு தெரியாத சில ஆச்சர்யமூட்டும் விஷயங்களை அறிய மேலே ஸ்வைப் பண்ணி பாருங்க…
Sorry, no posts matched your criteria.