News April 19, 2025

இன்றைய பொன்மொழிகள்

image

▶ நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது ▶உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது ▶கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும் ▶எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ் ▶வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.

News April 19, 2025

GT vs DC, RR vs LSG .. வெற்றி பெறப்போவது யார்?

image

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறவுள்ளன. மதியம் 3: 30-க்கு தொடங்கும் போட்டியில் GT vs DC அணிகளும், இரவு 7 :30-க்கு RR vs LSG அணிகளும் மோதுகின்றன. இப்போட்டிகள் 4 அணிகளுக்கும் மிக முக்கியம். DC வெற்றிபெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கும், GT வெற்றி பெற்றால் முதலிடத்திற்கு முன்னேறும். அதேபோல், RR vs LSG அணிகளுக்கும் இப்போட்டி முக்கியம்.

News April 19, 2025

அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 74 பேர் மரணம்

image

ஏமனில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தை குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 74 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி பயங்கரவாத அமைப்பு ஆதரவு தெரிவித்து வருகின்றது. செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் சரக்கு கப்பல்கள் உள்ளிட்டவற்றின் மீது ஹவுதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு, பதிலடியாக இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

News April 19, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னா செய்யாமை ▶குறள் எண்: 31▶குறள்: சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா செய்யாமை மாசற்றார் கோள். ▶பொருள்: மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்.

News April 19, 2025

3 அமைச்சர்களை டார்கெட் செய்யும் அதிமுக

image

அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கே.என்.நேரு மற்றும் பொன்முடிக்கு எதிராக சமீபத்தில் அதிமுக சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. இந்நிலையில், இந்த மூன்று அமைச்சர்கள் விவகாரங்களை கையில் எடுத்து, மக்கள் மத்தியில் அதிமுக தீவிரமாக பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தேர்தல் நேரத்தில் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக முதல்வருக்கும் உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளதாம்.

News April 19, 2025

இது என்னடா புது கதையா இருக்கு.. அதிர்ச்சியூட்டும் ஆய்வு

image

திருமணம் செய்ய நினைப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சி தரும் ஒரு ஆய்வு முடிவு வெளியாகி இருக்கிறது. ஆம்! திருமணம் செய்து கொள்வதால், நினைவாற்றல் பாதிக்கப்பட (Dementia)வாய்ப்புள்ளதாக ஃப்லோரிடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்ல, திருமணமாகாதவர்கள் , விவாகரத்து ஆனவர்களுக்கு இந்த பாதிப்பு குறைவாக இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 19, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஏப்ரல் 19- சித்திரை- 06 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9 : 00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1 : 30 AM – 3:00 PM ▶ குளிகை: 6 : 00 AM – 7 :30 AM ▶ திதி: அதிதி ▶ சஷ்டி ▶சூலம் : மேற்கு ▶பரிகாரம்: தயிர் ▶ பிறை: தேய்பிறை

News April 19, 2025

BREAKING : PBKS அபார வெற்றி

image

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த RCB-க்கு எதிரான போட்டியில் PBKS அபார வெற்றிபெற்றது. மழை காரணமாக போட்டியின் ஓவர் 14ஆக குறைக்கப்பட்டது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த RCB 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்பின் களமிறங்கிய PBKS தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தாலும், 12.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

News April 19, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News April 19, 2025

புதுமைப் பெண் திட்டம்: 4.95 லட்சம் மாணவிகள் பயன்

image

புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக ரூ.721 கோடி செலவிடப்பட்டு இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் 4,95,000 மாணவிகள் பயனடைந்து உள்ளதாகவும் அரசு குறிப்பிட்டுள்ளது. அதேபாேல், தமிழ் புதல்வன் திட்டத்தில் 3.80 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.

error: Content is protected !!