India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மஹாராஷ்டிர பள்ளிகளில் ஹிந்தி கட்டாயம் என்ற அம்மாநில அரசின் உத்தரவு, பிரிந்து போன 2 உறவினர்கள் ஒன்று சேரும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மக்களின் நலன்களுக்காக, தங்களுக்குள் இருக்கும் சிறிய சச்சரவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, உத்தவ் தாக்கரேவுடன் இணைந்து செயல்பட தயார் என MNS தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதற்கு தாங்களும் ஒன்றுபடத் தயாராக இருப்பதாக உத்தவ் தாக்கரேவும் பதிலளித்துள்ளார்.
அகமதாபாத்தில் நடந்து வரும் போட்டியின் போது, GT பவுலர் இஷாந்த் ஷர்மா கடும் வெயிலால் நிலைகுலைந்தார். உடனே அவரை பவுண்டரி லைனுக்கு வெளியே அழைத்து சென்று நீராகாரங்கள், நீரில் நனைத்த டவலை குஜராத் பிசியோ ஸ்டாஃப் வழங்கினார். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்ததும், 19ஆவது ஓவரை வீச அவர் களத்திற்கு வந்தார். மைதானத்தில் வெயில் 40 டிகிரியை கடந்ததால் DC, GT வீரர்கள் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தி கட்டாயம் என்று மாநில அரசு அறிவித்திருப்பதற்கு சிவசேனா (UBT) கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, இந்தி மீது தனது கட்சிக்கு எந்த வெறுப்பும் இல்லையென்றும், அது கட்டாயமாக்கப்படுவதை மட்டுமே எதிர்க்கிறோம் என்றும் கூறினார். தமிழக அரசும் இதே கருத்தைதான் முன் வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உ.பி.யில் பெய்த திடீர் கனமழைக்கு 16 பேர் பலியாகினர். 6 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் 11 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியாகினர். அதிகபட்சமாக அயோத்தியில் 6 பேர் உயிரிழந்தனர். பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. மழை உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்துள்ள உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், தேவையான உதவிகள் செய்து தரப்படும் என உறுதியளித்துள்ளார்.
RCB பேட்ஸ்மென்கள் காமன் சென்ஸை பயன்படுத்த சேவாக் அறிவுறுத்தியுள்ளார். பவுலர்கள் சிறப்பாக செயல்படும் நிலையில், பேட்ஸ்மென்கள் தொடர்ந்து சொதப்புவதாகவும், நேற்றைய போட்டியில் மோசமான ஷாட்களை ஆடி தேவையில்லாமல் அவுட் ஆனதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், சொந்த மண்ணில் RCB தோற்றுக் கொண்டே வருவதை நிறுத்த, அந்த அணியின் கேப்டன் படிதார் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் Ng Eng Hen ராஜினாமா செய்துள்ளார். கட்சியிலும், அரசிலும் புதிய ரத்தத்தை பாய்ச்ச ஏதுவாக ராஜினாமா செய்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட போவதில்லை எனவும் Ng Eng Hen அறிவித்துள்ளார். சிங்கப்பூர் அரசிலும், ஆளும் கட்சியிலும் இருக்கும் மூத்தோர் தன்னைப் போல பதவி விலகி இளைய தலைமுறையினருக்கு வழிவிடவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
துணை நடிகை அளித்த புகாரில் நடிகர் ‘காதல்’ சுகுமார் மீது மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணமானதை மறைத்து, தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, தனிக்குடித்தனம் நடத்தி நகை, பணம் மோசடி செய்ததாக துணை நடிகை புகார் அளித்திருந்தார். பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ள சுகுமார், ‘காதல்’ படத்தில் ஹீரோ பரத்திற்கு நண்பனாக நடித்ததன் மூலம் பிரபலமாகி ‘காதல்’ சுகுமார் எனப் பெயர் பெற்றார்.
தங்கம் விலை இந்தாண்டில் 33%க்கும் மேல் அதிகரித்த போதிலும், அதன் மீதான ஆசை, தேவை மட்டும் குறையவில்லை. இதை புரிந்து கொண்டு, நகை வியாபாரிகள், நகைக்கடைகள் 2024-25ம் நிதியாண்டில் மட்டும் ரூ.5.03 லட்சம் கோடிக்கு வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்துள்ளனர். இது 2023-2024ம் நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.1.03 லட்சம் கோடி அதிகமாகும். இறக்குமதி அளவும் 27.38% கூடுதல் ஆகும்.
இந்தியாவுக்கு வர மிகுந்த ஆவலுடன் இருப்பதாக டெஸ்லா தொழிலதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியுடன் நேற்று ஃபோனில் பேசியது தனக்கு கிடைத்த கெளரவம் என X பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் டெஸ்லா கார்களை விற்பனைக்கு கொண்டு வருவது குறித்து இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால், டெஸ்லா கார்கள் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள ஏதுவாக, கட்சியில் உள்கட்டமைப்பை வலுப்படுத்த திமுகவில் ஒன்றியம், நகரங்களை பிரிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து திமுக தலைமையகத்தில் கடந்த சில நாள்களாக மாவட்ட செயலாளர்களை அழைத்து தனித்தனியாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. 52 மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்டதில் 40 பேர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.