India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 3,274 ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்படவுள்ளன. விண்ணப்பிப்பவர்கள் 24 – 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். மாதச் சம்பளம் ₹23,000 இருந்து வழங்கப்படும். <
அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973-ன் கீழ் புத்தகங்களை வெளியிடுவதற்கு முன் அனுமதி பெற வேண்டும். தற்போது, இந்த விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரசின் செயல்பாடுகள் (அ) கொள்கைகள் தொடர்பான புத்தகங்களை தவிர, இலக்கியம், நாவல், கவிதை, தொழில்முறை உள்ளிட்ட புத்தகங்களை வெளியிட அனுமதி பெற வேண்டியதில்லை. அதேநேரம், தகுதியான அதிகாரிக்கு முறைப்படி தகவல் தெரிவித்து இனி புத்தகங்களை வெளியிட வேண்டும்.
கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது, இயேசு கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்ட 3-ம் நாள், அவருடைய சீடர்கள் கல்லறைக்கு சென்ற போது கல்லறை காலியாக இருந்தது. எனவே அந்த நாளில் இயேசு கிறிஸ்து மரணத்தை வென்றார் என்று நம்பப்படுகிறது. கிறிஸ்துமஸைப் போல் அல்லாமல், உயிர்த்தெழுதலின் அடையாளமாக ஈஸ்டர் ஒவ்வொரு ஆண்டும் ஒரே தேதியில் வருவது இல்லை.
அதிபர் டிரம்பின் கொள்கைகளை எதிர்த்து, அமெரிக்கா முழுவதும் மீண்டும் போராட்டம் வெடித்தது. டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு, மோசமான நிர்வாகம் ஆகியவற்றால் நாடு சுயத்தை இழந்து வருவதாக போராட்டக்காரர்கள் விமர்சித்தனர். டிரம்பின் ஆட்சியில் குடிமக்களின் சுதந்திரம் பறிபோய்விட்டதாகவும் குற்றம்சாட்டினர். பொருளாதார கொள்கைகள், பணி இழப்பு ஆகியவை கவலையளிக்கிறது என்றும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
பெரியவர்களை பார்த்தால், அவர்களின் காலைத் தொட்டு வணங்கும் பழக்கம் நம்மூரில் அதிகம். இது பாரம்பரியம் என்பதை தாண்டி இதில் வேறொரு நன்மையும் உள்ளது. ஆம், இதுவும் ஒரு வகை உடற்பயிற்சியே. உடலின் வட துருவமான தலையை குனிந்து, தென் துருவமான காலை எட்டும்படி குனிவது மூளையில் இருந்து வெளியேறும் ரத்த ஓட்டத்தை மேம்படுகிறது. மேலும், முதுகு மற்றும் முழங்கால் வலிக்கு இது நல்லது என்கின்றனர். SHARE IT.
ஏப்.11 அன்றுடன் முடிந்த வாரத்தில் தங்கத்தின் கையிருப்பு மதிப்பு ₹11,986 கோடி அளவு அதிகரித்துள்ளது. இதனால் கையிருப்பில் உள்ள மொத்த தங்கத்தின் மதிப்பு ₹6,88,496 கோடியாக உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி(RBI) தெரிவித்துள்ளது. அமெரிக்கா – சீனா இடையேயான வரிப்போர், சர்வதேச வர்த்தக பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. இதனால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
★எழுந்தவுடன் தண்ணீர் குடிக்கவும். தண்ணீர், உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்குவதோடு, உடலின் மெட்டபாலிசத்தையும் அதிகரிக்கும் ★மனம் அமைதியடைய சிறிது நேரம் தியானம் செய்யுங்கள் ★15-30 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இது உடலின் சோம்பலை நீக்கி, உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும் ★இன்று என்ன செய்யப் போகிறோம் என்பதை, பட்டியலிட்டு வைத்து கொள்ளுங்கள். SHARE IT.
18-வது ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் சரிபாதி நிறைவடைந்துவிட்டன. அனைத்து அணிகளும் 7 போட்டிகள் விளையாடிவிட்டன. குஜராத், டெல்லி, பஞ்சாப், லக்னோ அணிகள் தலா 5 போட்டிகளில் வென்று முதல் 4 இடங்களை பிடித்துள்ளன. அதற்கு அடுத்த இடங்களில் பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் உள்ளன. 2 வெற்றிகளை பெற்று கடைசி இடத்தில் சென்னை அணி உள்ளது. இந்த ஐபிஎல் தொடரின் 2-ம் பாதி எப்படி இருக்கும்?
ஐபிஎல் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணியும், 5-வது இடத்தில் உள்ள பெங்களூரு அணியும் பிற்பகல் 3.30 மணிக்கு மோத உள்ளன. இரு அணிகளும் பலமாக இருப்பதால் போட்டியில் அனல் பறக்கும். மற்றொரு போட்டியில், ஐபிஎல் தொடரின் எல்- கிளாசிக்கோ எனப்படும் சென்னை – மும்பை அணிகள் இரவு 7.30 மணிக்கு பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இன்னைக்கு டபுள் ட்ரீட் தான்!
நடிகர் சூரி நடிக்கும் புதிய படத்திற்கு மண்டாடி என பெயரிடப்பட்டு மிரட்டலான போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இந்த படத்தில் சூரி மீனவராக நடிக்க உள்ளாராம். மண்டாடி என்றால் நீரின் ஓட்டத்தை வைத்து மீன்பிடிக்கும் உத்தியை அறிந்தவர் என சொல்லப்படுகிறது. முத்துகாளி என்ற கதாபாத்திரத்தில் சூரி நடிக்கும் இந்த படத்தில், மகிமா நம்பியார், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.