News August 20, 2025

அக்னி-5 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றி

image

இண்டர்மீடியட் ரேஞ்ச் பாலிஸ்டிக் ஏவுகணை ‘அக்னி-5’ சோதனை வெற்றி அடைந்ததாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒடிஷாவின் சந்திப்பூர் சோதனைக் களத்தில் இச்சோதனை நடந்தது. செயல்பாட்டு, தொழில்நுட்ப ரீதியாக அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இச்சோதனை இருந்தது. அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய ஏவுகணை இந்திய ராணுவத்தின் பலத்தை மேலும் கூட்டும் என பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகின்றனர்.

News August 20, 2025

புதிய சட்ட மசோதாவுக்கு ஆதரவும் எதிர்ப்பும்

image

30 நாள்களுக்கு மேல் சிறையில் இருந்தால், பதவிநீக்கம் செய்யும் ‘<<17462799>>PM, CM பதவிபறிப்பு மசோதா<<>>’வுக்கு ஆதரவும் எதிர்ப்பும் தீவிரமாகியுள்ளது. இந்த சட்டம் குற்றம் செய்வதிலிருந்து அரசியல்வாதிகளை தடுக்க உதவும் என்கின்றனர் ஆதரிப்போர். ஆனால், குற்றம் செய்யாமல் (அ) பொய்வழக்கில் சிறைசெல்ல நேரும் அரசியல் தலைவர்களை, பதவியிழக்க செய்ய இது தவறாக பயன்படுத்தப்படும் என்கின்றனர் எதிர்ப்போர். உங்களின் கருத்து என்ன?

News August 20, 2025

தவெக மாநாட்டில் திடீர் மாற்றம்

image

மதுரை தவெக மாநாட்டு அரங்கில் <<17463695>>100 அடி உயரக் கொடிக்கம்பம் சரிந்து விழுந்த விபத்து<<>> பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் வடு மறைவதற்குள் ராட்சத ஃபோக்கஸ் லைட்டுகள் சரிந்து விழுந்தது. இப்படி அடுத்தடுத்து விபத்துக்கள் நடந்த நிலையில், விஜய் மாநாட்டு அரங்கில் ஏற்பாடுகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்நிலையில், சேதமடைந்த கொடிக்கம்பத்திற்கு மாற்றாக வேறு கொடிக்கம்பம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News August 20, 2025

அப்பாவை அசைக்க முடியாது: ஸ்ருதி உறுதி

image

‘தக் லைஃப்’ தோல்வி கமல்ஹாசனை பாதிக்கவில்லை என அவரது மகள் ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். சினிமாவில் வெற்றி, தோல்வி என தனது தந்தை நிறைய பார்த்தவர் எனவும், சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை மீண்டும் சினிமாவில்தான் போடுவதாகவும் அவர் கூறியுள்ளார். அதனால், இந்த நம்பர் கேம் ஒருபோதும் தந்தையை பாதிக்காது என தெரிவித்துள்ளார். ‘இந்தியன் 2’, ‘தக் லைஃப்’ என கமலின் அடுத்தடுத்த படங்கள் தோல்வியை சந்தித்துள்ளன.

News August 20, 2025

புதிய சட்ட மசோதா நிறைவேற வாய்ப்புள்ளதா?

image

இன்று நாடாளுமன்றத்தில் தாக்கலான <<17459383>>புதிய சட்ட மசோதா<<>>, ஒரு அரசியலைப்பு சட்டத்திருத்தம் ஆகும். ஆகவே, இதை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை (லோக் சபாவில் 362 எம்பிக்கள்) தேவை. NDA-வுக்கு 293 எம்பிக்கள் உள்ளனர். ராஜ்ய சபாவில் 164 எம்பிக்கள் தேவையென்ற நிலையில் NDA-வுக்கு 125 பேர் தான் உள்ளனர். இருந்தும் இந்த மசோதாவை பாஜக கொண்டு வந்துள்ளது. பாஜகவின் திட்டம் என்ன? எதிர்க்கட்சிகள் என்ன செய்யும்?

News August 20, 2025

BREAKING: வீட்டுக்கடன்… நிதி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு

image

வீட்டுக்கடன் வழங்கும் நிதிநிறுவனங்கள், கடன் மதிப்பு விதிமுறைகளை மீறுவதால், கடன்களை கண்காணிக்க NHB(National Housing Bank) திட்டமிட்டுள்ளது. கஸ்டமர்களின் செக்யூரிட்டி ஆவணங்களில் LTV(Loan-to-Value) 75% இருக்கலாம் என்ற விதியை மீறி, சில வங்கிகள் 95% கடன் வழங்குவது தெரியவந்துள்ளது. NHB கண்காணிப்பின் வளையத்திற்குள் இந்நிறுவனங்கள் வந்துள்ளதால், புதிதாக வீட்டுக்கடன் பெறுவோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

News August 20, 2025

30 நாள் கெடு விதிக்கும் சட்டம்: யாருக்கு குறி?

image

இன்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்த ‘<<17462799>>PM, CM பதவிபறிப்பு மசோதா<<>>’வை எதிர்க்கட்சிகள் முற்றாக எதிர்க்கின்றன. பிரதமரோ, முதல்வரோ அல்லது அமைச்சரோ – தொடர்ந்து 30 நாள்கள் சிறையில் இருந்தாலே, அவர் பதவியிழப்பார் என்று இந்த மசோதா சொல்வதே காரணம். தேர்தலில் வீழ்த்த முடியாத மாநில அரசியல் தலைவர்களை, வழக்குகள் மூலம் சிறையில் தள்ளி வீழ்த்தும் மறைமுக வியூகமே இது என்கின்றனர் எதிர்கட்சிகள். உங்கள் கருத்து?

News August 20, 2025

காதல்.. டீச்சரை பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவன்

image

மத்தியபிரதேசத்தில் தான் ஒருதலை காதலை வளர்த்துவந்த 26 வயது ஆசிரியையை மீது 18 வயது மாணவன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒருநாள் தன்னை பார்த்து கமெண்ட் அடித்ததால் மாணவர் மீது ஆசிரியை போலீசில் புகாரளித்துள்ளார். இதனால் கடுப்பான அம்மாணவன் டீச்சரை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். ஆசிரியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

News August 20, 2025

கில் வரவால் சாம்சனுக்கு பின்னடைவு?

image

சுப்மன் கில், ஜெய்ஸ்வால் இல்லாத போது மட்டுமே சாம்சனுக்கு ஓபனிங் இறங்க வாய்ப்பு அளிக்கப்பட்டதாக தேர்வுக்குழு தலைவர் அகார்கர் கூறியது சாம்சனுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. 2025 ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியில் கில் இடம்பெற்றிருப்பதால், சாம்சன் உட்கார வைக்கப்படவே வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. இதனால் அவரது டி20 கரியர் கேள்விக்குறியாகியுள்ளது.

News August 20, 2025

BREAKING: அஜித் குமார் மரணம்.. அதிர்ச்சி தகவல்

image

காவலாளி அஜித்குமார் காவல் மரண வழக்கில் CBI குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில், 103 சாட்சிகளின் வாக்குமூலங்கள், 102 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் அஜித்குமாருக்கு எதிராக திருட்டு புகார் வழக்கும் CBI வசம் உள்ள நிலையில், அதன் குற்றப்பத்திரிகை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. திடுக்கிடும் திருப்பமாக, இந்த வழக்கில் நிகிதா மீதும் FIR பதிவு செய்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!