India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவின் ஆட்டோமொபைல் ஏற்றுமதி 19% அதிகரித்து, 53 லட்சம் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக SIAM தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தைகளில் உலகளாவிய பிராண்ட்களின் தேவை அதிகரித்துள்ளதால், இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் 7.70 லட்சம் பயணிகள் வாகனங்கள், 80,986 வணிக வாகனங்கள், 4.19 லட்சம் 2 சக்கர வாகனங்கள், 3.10 லட்சம் 3 சக்கர வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 10-ம் வகுப்பு எக்ஸாம் பேப்பரை திருத்த எடுத்த டீச்சர்கள், உள்ளே ₹500 இருப்பதை பார்த்து ஷாக்காகி உள்ளனர். ‘இந்த ₹500-ஐ வெச்சிக்கோங்க… என்ன பாஸ் பண்ணிவிட்டுருங்க’ என எழுதியுள்ளனர். ஒருவர் என்றால் பரவாயில்ல, பலரும் இதே வேலையை செய்துள்ளனர். ‘படிச்சி பாஸ் பண்ண முடியாது, டீச்சருக்கு காசு கொடுத்து பாஸ் பண்ணிடலாம்’ என குறுக்கு வழியில் மாணவர்கள் செயல்பட்டது அதிர்ச்சியளிக்கிறது.
மதிமுக முதன்மை செயலாளர் பதவியில் இருந்து துரை வைகோ விலகிய நிலையில், நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க வந்த துரை வைகோ மேடையில் அமர வைக்கப்பட்டார். மல்லை சத்யா மேடையின் ஓரத்தில் இருந்த சேரில் அமர்ந்தார். கூட்டத்தில் TN கவர்னர் ஆர்.என்.ரவியை பதவியில் இருந்து நீக்கக்கோருவது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவர்னரை கண்டித்து, ஏப்.26-ல் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது.
ஷேக் ஹசீனா உள்பட 11 பேரை பிடிக்க இண்டர்போலின் உதவியை வங்கதேச இடைக்கால அரசு நாடியுள்ளது. இடைக்கால அரசை கவிழ்க்க சதி மற்றும் உள்நாட்டு போரை ஏற்படுத்த முயன்ற குற்றத்திற்காக ரெட் நோட்டீஸ் பிறப்பிக்குமாறு இண்டர்போலிடம் வங்கதேச அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ரெட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டால், இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனா நாடுகடத்தப்பட்டு கைது செய்யப்படுவார்.
தவெக தலைவர் விஜய், தனது X பதிவில் போட்டிருக்கும் வாழ்த்து சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் புத்தாண்டு தினமான ஏப்.14 அன்று வெறுமனே சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் என பதிவிட்டிருந்தார். ஆனால், ஈஸ்டர் திருநாளுக்கு உவகையுடன் அனைவருக்கும் வாழ்த்துகள் என அலங்கார புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். தமிழ் புத்தாண்டு என நேரடியாக விஜயால் வாழ்த்து கூற முடியாதா என நெட்டிசன்கள் மனம் குமுறி வருகின்றனர்.
4 காதலர்களுடன் சேர்ந்து மனைவி ரிடான்ஷி ஷர்மா தன்னை கொல்ல சதித்திட்டம் தீட்டுவதாக உ.பி.யைச் சேர்ந்த கவுரவ் ஷர்மா போலீசில் புகார் அளித்துள்ளார். 1,200 பக்க மொபைல் ஸ்க்ரீன்ஷாட் ஆதாரங்கள், வீடியோக்களுடன் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தன்னை கொன்றுவிட்டு, இன்சூரன்ஸ் பணத்தை பெற்றுக் கொள்ள மனைவி திட்டம் போடுவதாகவும், குடித்துவிட்டு தன்னை அடிக்கடி அடிப்பதாகவும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்லோ ஓவர் ரேட் குற்றத்திற்காக குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு BCCI ₹12 லட்சம் அபராதம் விதித்துள்ளது. நேற்றைய டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இருப்பினும், பந்துவீச்சின் போது டெல்லி வீரர்கள் ரன் குவிப்பதை தடுப்பதற்காக, பந்துவீச அந்த அணி நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2026 தேர்தலில் திமுகவுக்கு பூஜ்ஜியமும், அதிமுகவுக்கு ராஜ்ஜியமும் கிடைக்கும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தோல்வியை சந்திக்கும் என CM ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில், அவர் இந்த பதிலை கொடுத்துள்ளார். திமுகவால் இந்த கூட்டணியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.
இந்தியாவுக்கு நாளை குடும்பத்துடன் வரும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அக்ஷர்தாம் கோயில், தாஜ்மஹால் உள்ளிட்ட இடங்களுக்கு செல்கிறார். டெல்லி வந்திறங்கியதும் பிரதமர் மோடியை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர், பிரதமர் அளிக்கும் விருந்தில் பங்கேற்றப் பின், இரவே ஜெயப்பூர் புறப்பட்டு செல்கிறார். அங்கு ராம்பாக் அரண்மனையில் குடும்பத்துடன் தங்கவுள்ளார்.
*தர்பூசணியை தட்டிப் பார்த்து வாங்கவும். கனமான சத்தம் வந்தால் அது நன்கு பழுத்து இனிப்புச் சுவையுடன் இருக்கும். *அதிக எடையுடன் கனமாக இருக்கும் பழத்தில் நீர்ச்சத்து அதிகம் இருக்கும். *நீளவாக்கில் உள்ள தர்பூசணியை விட உருண்டையாக இருக்கும் பழம் அதிக இனிப்புடன் சுவையாக இருக்கும். *தோல் அடர் பச்சை நிறத்தில் கடினமாக இருந்தால் அந்த தர்பூசணி பழுத்து இனிப்பாக இருக்கும். நோட் பண்ணீங்களா? ஷேர் பண்ணுங்க..!
Sorry, no posts matched your criteria.