News October 25, 2025

அனைத்து கட்சி கூட்டம் நடத்துக: திருமாவளவன்

image

விரைவில் தமிழகத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று CM ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். SIR தொடர்பாக SC-ல் விசாரணையில் உள்ள வழக்குகள் முடியும் வரை, தமிழகத்தில் SIR பணிகளை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டுமென்றும் திருமா வலியுறுத்தியுள்ளார்.

News October 25, 2025

அசாம் என்கவுண்டர்: மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை

image

இந்தியா முழுவதும் நக்சலைட்கள், மாவோயிஸ்ட்களை ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்து, தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், அசாமில் உள்ள கோக்ராஜார் பகுதியில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் கடந்த 23-ம் தேதி நடைபெற்ற கோக்ராஜார் ரயில் தண்டவாள குண்டுவெடிப்பில், தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.

News October 25, 2025

அதானியை காப்பாற்ற LIC ₹33,000 கோடி முதலீடா?

image

கடன் மற்றும் அமெரிக்க வழக்கால் தத்தளித்த அதானி குழுமத்தை மீட்க, LIC மூலம் மத்திய அரசு ₹33,000 கோடி வழங்க திட்டமிட்டதாக The Washington Post செய்தி வெளியிட்டது. இதை மறுத்துள்ள LIC, தங்களது முதலீட்டு முடிவுகள் அனைத்தும் வாரியத்தின் ஒப்புதலுக்கு பிறகு சுதந்திரமாக எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும், இதில் நிதி அமைச்சகம் உள்ளிட்ட எந்த அரசு துறைகளின் தலையீடும் இல்லை என்றும் மறுத்துள்ளது.

News October 25, 2025

90’s கிட்ஸ் Dude திரைப்படங்கள்

image

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி உள்ள ‘Dude’ திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது Gen Z தலைமுறையினருக்கான திரைப்படமாக பார்க்கப்படுகிறது. இதனால், இதேபோன்று கதை அம்சம் கொண்ட 90’s கிட்ஸ்களின் Dude திரைப்படங்கள், SM-யில் டிரெண்டாகி வருகின்றன. அவற்றை மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். இதில், உங்களுக்கு பிடித்த படம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.

News October 25, 2025

FLASH: தங்கம் விலை ₹4,000 குறைந்தது

image

கிடுகிடுவென உயர்ந்த <<18097995>>தங்கம் விலை<<>>, இந்த வாரம் தடாலடியாக சரிந்துள்ளது. இந்த வாரத்தின் வர்த்தகம் முடிவுக்கு வந்த நிலையில், 22 காரட் தங்கம் 1 சவரன் ₹92,000-க்கு விற்பனையாகி வருகிறது. இது கடந்த வாரத்தை விட ₹4,000 குறைவு. வெள்ளி விலையும் கணிசமாக குறைந்துள்ளது. இந்த வாரத்தில் வெள்ளி கிலோவுக்கு ₹20,000 குறைந்து ₹1.70 லட்சத்திற்கு விற்பனையாகிறது. நாளை விடுமுறை என்பதால் விலையில் மாற்றம் இருக்காது.

News October 25, 2025

சுற்றுலா செல்ல சிறந்த நாடுகள்

image

2025-ம் ஆண்டில் சுற்றுலா செல்ல சிறந்த டாப் 10 நாடுகளின் தரவரிசையை, ஃபோர்ப்ஸ் ஆஸ்திரேலியா, கயாக் உடன் இணைந்து வெளியிட்டுள்ளது. யாரும் எதிர்பார்க்காத நாடு, முதலிடத்தில் உள்ளது. இந்த நாட்டுக்கு சென்றுவர செலவுகளும் குறைவுதான். வெளிநாடு சுற்றுலா விரும்பிகள் நம்பர் 1 நாட்டிற்கு சென்று என்ஜாய் பண்ணுங்க. மேலும், அது எந்த நாடு என்று, மேலே உள்ள போட்டோஸை பார்த்து கமெண்ட்ல சொல்லுங்க.

News October 25, 2025

டாஸ்மாக் 3 நாள்கள் இங்கு விடுமுறை.. மதுபிரியர்கள் ஷாக்

image

<<18100311>>ராமநாதபுரத்தை <<>>தொடர்ந்து சிவகங்கையிலும் அக்.27 முதல் 30-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மருதுபாண்டியர், தேவர் குருபூஜையையொட்டி சட்டம் – ஒழுங்கை பராமரிக்கும் வகையில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக கலெக்டர் பொற்கொடி தெரிவித்துள்ளார். மேலும், மதுரை மாவட்டத்திலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. SHARE IT.

News October 25, 2025

மேக்கப் போடுறீங்களா? கண்டிப்பா இத கவனிங்க

image

நீங்கள் போடும் மேக்கப்பை சரியாக கழுவவில்லை என்றால் அதுவே பல சரும பிரச்னைகளுக்கு வழி வகுக்கும். அதனை இயற்கையான முறையிலேயே அகற்ற பல வழிகள் இருக்கின்றன. மேக்கப்பை அகற்ற தேங்காய் எண்ணெய் அல்லது கிரீம்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, கற்றாழை ஜெல், வெள்ளரிக்காய் சாறு, பாதாம் எண்ணெயை பயன்படுத்தலாம். இதனால், மென்மையான உங்கள் சருமத்தில் மேக்கப்பால் ஏற்படும் பக்கவிளைவுகளை தடுக்க முடியும். SHARE.

News October 25, 2025

டெல்லியில் NIGHT SHIFT-க்கு அனுமதி

image

டெல்லியில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பெண்கள் இரவு நேர பணியில் வேலை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. அதேநேரம் பெண்களுக்கான பாதுகாப்புடன் கூடிய போக்குவரத்து வசதி, கடைகளில் சிசிடிவி உட்பட போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பணியிடங்களில் கட்டாயம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அவர்களுக்கான வேலை நேரமும், ஊதியமும் நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறாமல் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

News October 25, 2025

வீட்டு குழாய்களில் உப்பு அடைப்பா? இதை பண்ணுங்க

image

வீட்டு குழாய்களில் உப்பு அடைப்பால் தண்ணீர் வரவில்லையா? இதை பண்ணுங்க.. *தண்ணீர் தொட்டியை முதலில் கழுவி சுத்தப்படுத்தவும். *தொட்டியில் இருந்து குழாய்களுக்கு செல்லும் பைப்களை மூடி, T வடிவ பெண்ட் வழியாக 10 லிட்டர் ஆசிட்டை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றவும். *24 மணி நேரத்திற்கு பைப்களில் ஆசிட் நன்கு ஊறட்டும். *இப்போது T பெண்ட் வழியாக தண்ணீரை விடவும். *உள்ளே அடைத்திருந்த உப்பு கரைந்து மொத்தமும் வெளிவரும்.

error: Content is protected !!