India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடப்பு சீசனில் தொடர்ந்து தடுமாறி வந்த ரோஹித்
சர்மா சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் அரைசதம் அடித்தார். மும்பைக்கு 5 கோப்பைகளை கேப்டனாக பெற்று தந்த ரோஹித் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பிவந்தார். இதனால் தொடர்ந்து விமர்சனங்களை எதிர்கொண்டு வந்த அவர் இன்றைய போட்டியில் பேட்டால் பதில் அளித்துள்ளார். ரோஹித் 31 பந்துகளை அரைசதம் அடிக்க, மும்பை அணி 13 ஓவர்களில் 127 ரன்கள் சேர்த்துள்ளது.
பெனின் நாட்டில் அல்கொய்தா தீவிரவாதிகள் நடத்தியத் தாக்குதலில் 70 வீரர்கள் பலியாகினர். ராணுவச் சாவடிகளில் அண்மைகாலமாக அல்கொய்தா, ஐஎஸ் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வடகிழக்கு மாகாணத் தலைநகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 70 வீரர்களை கொன்று விட்டதாக அல்கொய்தா அமைப்பு தெரிவித்துள்ளது. ராணுவம் தரப்பில் பதில் இல்லை.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் காதல் சுகுமார் மீது துணை நடிகை ஒருவர் மோசடி புகார் அளித்திருந்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறி பணம், நகைகளை பெற்று ஏமாற்றி விட்டதாகவும் கூறியிருந்தார். புகாரை விசாரித்த மாம்பலம் மகளிர் போலீசார் 3 பிரிவுகளில் சுகுமார் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் காதல் சுகுமாரன் தலை மறைவாக, போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான SBI, மூத்த குடிமக்களுக்கான நிரந்தர வைப்புத் தொகை மீதான வட்டியை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. இதேபோல், தனியார் வங்கியான HDFC, வட்டியை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. மேலும், பேங்க் ஆப் இந்தியா, ICICI, ஆக்சிஸ் வங்கிகளும் வட்டியை குறைத்துள்ளன. இதனால் வங்கிகள் தரும் வட்டியை நம்பியிருக்கும் பொது மக்கள் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கவர்னரை CM ஸ்டாலின் தபால்காரர் என கூறியதற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். கவர்னர் பதவி என்பது மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரம் மிக்கது என்றும் கவர்னரை கொச்சைப்படுத்தி பேசுவது முதல்வருக்கு அழகல்ல என்றும் அவர் கூறியுள்ளார். உறையூரில் குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் 3 பேர் உயிரிழந்ததை சுட்டிக்காட்டிய அவர் இனியாவது திமுக அரசு கவனமாக இருக்கவேண்டும் என வலியுறுத்தினார்.
ஓராண்டில், ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹20,000 உயர்ந்திருப்பதால், மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சிலர் தங்கத்தின் விலை குறையும் என்று காத்திருக்கின்றனர். ஆனால், தங்கத்தின் விலை எப்போது எப்படி நகரும் என்பதை கணிக்க முடியாது என்கிறார் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன். விரைவில், ஒரு கிராம் தங்கம் ₹10,000க்கும் போகலாம் அல்லது குறையவும் செய்யலாம். சிறுக சிறுக தங்கத்தை வாங்குவதே சிறந்த முதலீடாக இருக்கும்
ஹர்திக் பாண்டியாவுடன் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா திருமணம் செய்து மாலையும், கழுத்துமாக 2 பேரும் நிற்பது போன்ற புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தேவர கொண்டாவுடன் மந்தனா டேட்டிங் செய்வதாக கூறப்படும் நிலையில், இந்த படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை பேக்ட் செக் செய்து பார்த்தபோது, இது ஏஐ உருவாக்கிய போலி படம் எனத் தெரிய வந்துள்ளது. ஆதலால் இதுபோன்ற படங்களை நம்ப வேண்டியதில்லை.
கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம்பிரகாஷை (68) கத்தியால் குத்திக் கொலை செய்த அவரின் மனைவியை பிடித்து போலீஸ் விசாரித்து வருகிறது. பெங்களூருவில் உள்ள வீட்டில் ஓம்பிரகாஷ் குடும்பத்துடன் வசித்து வந்தார். இன்று மனைவி பல்லவிக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மனைவி, கத்தியை எடுத்து வந்து துடிக்க துடிக்க குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் ஓம்பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 176 ரன்கள் சேர்த்துள்ளது. ரச்சின் ரவீந்திரா சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தாலும், களமிறங்கிய முதல் போட்டியிலேயே ஆயுஷ் மாத்ரே அதிரடியாக 32 ரன்கள் சேர்த்தார். முதலில் மெதுவாக விளையாடிய ஷிவம் துபே பின்னர் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து ஆட்டம் இழந்தார். 3 ஓவர்களை வீசிய சாண்ட்னர் 14 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
ராஜஸ்தானில் 19 வயது தலித் இளைஞர் மீது இரண்டு பேர் சிறுநீர் கழித்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞர் தனியே வெளியே சென்றபோது வழிமறித்த இரண்டு பேர், இவரின் ஆடைகளை கழற்ற சொல்லி பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபட்டதாக புகாரில் பதிவாகியிருக்கிறது. அப்போது, அவர்கள் ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாகவும் கடுமையாக தாக்கியதாகவும் பாதிக்கப்பட்டவர் கூறியிருக்கிறார்.
Sorry, no posts matched your criteria.