News April 21, 2025

அடுத்த சீசனுக்கு சிஎஸ்கேவை தயார் செய்வேன் – தோனி

image

சராசரிக்கும் குறைவான ஸ்கோர் எடுத்ததே MI உடனான தோல்விக்கு காரணம் என CSK கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். லீக் சுற்றில் மீதமுள்ள 6 போட்டிகளிலும் வென்று பிளே ஆஃப்-க்கு முன்னேற முயற்சிப்போம் என தெரிவித்த அவர், ஒருவேளை வெற்றி பெறவில்லை என்றால் அடுத்த சீசனுக்காக அணியை கட்டமைக்கும் பணியை தொடங்குவேன் எனக் குறிப்பிட்டுள்ளார். 8 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே CSK வென்றுள்ளது.

News April 21, 2025

போரிடுவதை தவிர வேறு வழியில்லை: இஸ்ரேல் பிரதமர்

image

காசா மீதான தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தி இருக்கும் இஸ்ரேல், போரிடுவதை தவிர வேறு வழியில்லை எனத் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 51,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஹமாஸ் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படும் வரை போரை முடிவுக்கு வர முடியாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். காசா மக்களுக்கு என்றுதான் விடிவுகாலம் வருமோ?

News April 21, 2025

பிறந்த நாள் கொண்டாட பூமிக்கு வந்த விண்வெளி வீரர்!

image

நாசாவின் மூத்த வீரர் டான் பெட்டிட் தனது 70-வது பிறந்த நாளை கொண்டாட விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பியுள்ளார். ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் மூலம் கடந்தாண்டு அக்டோபரில் அவர் விண்வெளிக்குச் சென்றார். சக ரஷ்ய வீரர்களுடன் விண்கலத்தில் பூமி திரும்பிய அவர், கஜகஸ்தான் அருகே கடலில் பத்திரமாக தரையிறங்கினார். விமானம் மூலம் அவரை அமெரிக்கா அழைத்து வர நாசா திட்டமிட்டுள்ளது.

News April 21, 2025

ஏப்ரல் 21: வரலாற்றில் இன்று!

image

▶ தேசிய குடிமை பணிகள் தினம். ▶ 1926 – மறைந்த இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள். ▶ 1964 – புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள். ▶ நாடக, திரைப்பட நடிகர் டி.ஆர். மகாலிங்கம் நினைவு நாள். ▶ 1944 – பிரான்சில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்த நாள். ▶ 1987 – இலங்கை தலைநகர் கொழும்புவில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் 106 பேர் உயிரிழப்பு.

News April 21, 2025

‘குட் பேட் அக்லி’ OTT ரிலீஸ் எப்போது?

image

அஜித் நடிப்பில் வெளியாகிய குட் பேட் அக்லி படம் வசூலில் சக்கைப்போடு போட்டு வருகிறது. உலகளவில் இப்படம் சுமார் 250 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், படத்தின் OTT ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மே இரண்டாம் வாரத்தில் படத்தை OTT-ல் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News April 21, 2025

பார்சிலோனா ஓபன்.. பட்டம் வென்றார் டென்மார்க் வீரர்!

image

பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். ஃபைனலில் ஸ்பெயின் வீரர் அல்காரஸை அவர் எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற ஆட்டத்தில், 7-6, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று ஹோல்ஜர் ரூனே வாகை சூடினார். 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.

News April 21, 2025

அதிமுக – பாஜக கூட்டணியை 3வது முறையும் வெல்வோம்: CM

image

தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்யும் பாஜகவையும் அதனுடன் கூட்டணி சேர்ந்து துரோகம் இழைக்கும் அதிமுகவையும் மூன்றாவது முறையும் TN மக்கள் தோற்கடிப்பார்கள் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த கூட்டணி இரு முறை திமுகவால் தோற்கடிக்கப்பட்ட கூட்டணிதான் எனத் தெரிவித்த அவர், கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே இரு கட்சிகளும் பிரிந்ததுபோல் கள்ளக் கூட்டணிதான் வைத்திருந்தார்கள் எனக் குற்றஞ்சாட்டினார்.

News April 21, 2025

அப்துல் கலாமின் தன்னம்பிக்கை வரிகள்..!

image

▶ அதிகாலை நீ நினைத்த நேரத்தில் எழுந்து விட்டாலே தோல்விகள் உன்னை விட்டு ஒதுங்கிக் கொள்ளும். ▶ நீ தூங்கும்போது வருவது கனவல்ல. உன்னை தூங்க விடாமல் செய்யும் கனவே கனவாகும். ▶ அவமானங்களை பொருட்படுத்தாதீர்கள். ஆனால் ஒரு முறை செய்த தவறை இன்னொரு முறை செய்யாதீர்கள். ▶ வெற்றிக் கதைகளை படித்தால் செய்திகளே கிடைக்கும். தோல்வி கதைகளை படியுங்கள். வெற்றி பெற யோசனைகள் கிடைக்கும்.

News April 21, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னாசெய்யாமை ▶குறள் எண்: 313 ▶குறள்: செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமந் தரும். ▶பொருள்: யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால், அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதாகும்.

News April 21, 2025

காசாவில் போரை நிறுத்துங்கள்.. போப் பிரான்சிஸ்

image

காசாவின் கண்ணீரைத் துடைக்க போப் பிரான்சிஸ் குரல் கொடுத்துள்ளார். ஈஸ்டர் திருநாளையொட்டி வாடிகன் சதுக்கத்தில் மக்களிடம் உரையாற்றிய அவர், காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார். பசியால் வாடும் மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்றும், மனிதாபிமான உதவிகள் தடையின்றி சென்று சேர வேண்டும் எனவும் போப் பிரான்சிஸ் கேட்டுக் கொண்டார்.

error: Content is protected !!