News April 21, 2025

EPS-க்கு ஆதரவாக வேல்முருகன்.. அதிமுக கூட்டணியில் தவாக?

image

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் வேல்முருகன் இபிஎஸ்-க்கு ஆதரவாக பேசியது அரசியல் களத்தில் புதிய புயலை கிளப்பியிருக்கிறது. கடந்த சில நாள்களாகவே வேல்முருகனுக்கும், திமுகவினருக்கும் இடையிலான உறவு சுமுகமாக இல்லை. இந்நிலையில், பாஜக உடன் கூட்டணி வைத்தாலும், EPS-இன் உள்ளார்ந்த எண்ணம் இஸ்லாமியர்களுக்கு எதிராக சிந்திக்காது என்று கூறியுள்ளார். இது புதிய கூட்டணிக்கு அச்சாரமா என கேள்வி எழுந்துள்ளது.

News April 21, 2025

சிவாஜி வீடு ஜப்தி உத்தரவு ரத்து!

image

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீடு(அன்னை இல்லம்) ஜப்தி உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. சிவாஜியின் மூத்த மகனான ராம்குமாரின் மகன் துஷ்யந்த் வாங்கிய கடனுக்காக சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்ய கடந்த மாதம் உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று அந்த உத்தரவை ரத்து செய்துள்ளதோடு நடிகர் பிரபு தான் அந்த இல்லத்திற்கு முழு உரிமையாளர் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

News April 21, 2025

சீன வர்த்தகத்தை ஒழிக்க அமெரிக்கா புது திட்டம்

image

சீனாவுடனான வர்த்தகத்தை குறைத்துக் கொள்ளும் நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பில் சலுகை அளிக்க அமெரிக்கா முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஆவேசமடைந்துள்ள சீனா, இப்படியான உடன்பாடு எட்டப்பட்டால் தக்க பதிலடி தரப்படும் என அமெரிக்காவை நேரடியாக எச்சரித்துள்ளது. மேலும், ஒருதலைபட்சமான இந்த அழுத்தத்தை உலக நாடுகள் புறக்கணிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

News April 21, 2025

வரிகளை குறைப்பாரா ஜே.டி.வான்ஸ்?

image

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸின் இந்திய வருகை இரு தரப்பு வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பொருட்கள் மீதான வரிகளை குறைப்பது குறித்து ஜே.டி.வான்ஸிடம் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. இருதரப்பு வர்த்தக உறவை வலுப்படுத்தும் வகையில் இந்த பேச்சுவார்த்தை அமையும் என வெளியுறவு செய்திதொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News April 21, 2025

தொடங்கிய டிக்கெட் விற்பனை… CSK ரசிகர்கள் ஆர்வம்

image

சென்னை – ஹைதராபாத் அணிகள் மோதும் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. சென்னை அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேற அடுத்து நடக்க உள்ள 6 போட்டிகளிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனிடையே வரும் 25-ம் தேதி சேப்பாக்கத்தில் சென்னை அணி, ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 21, 2025

பெண்கள் முன்பு நிர்வாணம்: இளைஞர் அதிரடி கைது!

image

சென்னை வியாசர்பாடி ரயில்வே ஸ்டேஷனில் பெண்கள் பயணம் செய்யும் பெட்டியின் முன்பு நிர்வாணமாக நின்று கொண்டு ஆபாச சைகையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 10-ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக பெண்கள் பலர் ரயில்வே போலீசில் புகார் அளித்தனர். பின்னர், அவரை பிடிக்க பரிசுத் தொகை அறிவித்து தேடி வந்த நிலையில், முனுசாமி என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

News April 21, 2025

முருகன் மாநாட்டில் பங்கேற்பாரா ரஜினி?

image

ஜூன் 22ஆம் தேதி ‘குன்றம் காக்க, கோவிலை காக்க’ என்ற தலைப்பில் முருக பக்தர்கள் மாநாடு மதுரையில் நடக்கிறது. இம்மாநாட்டில் நடிகர் ரஜினியை பங்கேற்க வைக்க இந்து முன்னணி களம் இறங்கியுள்ளது. ‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பில் இருந்த ரஜினியை சந்தித்து, மாநாட்டிற்கான அழைப்பிதழை இந்து முன்னணி கட்சியினர் வழங்கினார். அரசியலில் இருந்து விலகினாலும், சமீப காலமாக அவரின் பேச்சுகள் அரசியலாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

News April 21, 2025

சீனாவில் பறந்த தமிழக பட்டம்!

image

சீனாவின் வெய்பாங் நகரில் நடந்து வரும் சர்வதேச பட்டம் விடும் போட்டியில், தமிழகத்தின் பட்டம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில், காளை மாடு வடிவிலான பட்டம் பறக்கவிடப்பட்டது. தவிர, மூவர்ண கொடி தாங்கி தமிழ்நாடு, இந்தியா என்று பொறிக்கப்பட்ட பட்டமும் பிரம்மாண்டமாக காட்சியளித்தது.

News April 21, 2025

மாநில அதிகாரத்தை தமிழகம் விட்டு தராது: ஸ்டாலின்

image

கூட்டாட்சி தத்துவத்தை குலைத்து, டெல்லியில் அதிகாரத்தை அதிகரிக்கும் மத்திய அரசின் முயற்சியை தமிழகம் அனுமதிக்காது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநிலங்களின் நியாயமான உரிமைகளுக்கான இப்போராட்டத்தில் மற்ற மாநிலங்கள் இணையும் என நம்புவதாகவும், வலுவான மாநிலங்களால்தான் வலுவான இந்தியாவை கட்டமைக்க முடியும் எனவும் கூறினார். மேலும், மத்திய – மாநில அரசுகளுக்கான உறவுகளில் சமநிலையை உருவாக்க வேண்டும் என்றார்.

News April 21, 2025

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம்.. 1 கிராம் ₹9,000-ஐ கடந்தது!

image

தங்கம் விலை <<16166177>>இன்று<<>> (ஏப்.21) வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் ₹9,015-க்கும், சவரன் ₹72,120-க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் சுத்த தங்கம் 1 கிராம் ₹9,834-க்கும், 8 கிராம் ₹78,672-க்கும் விற்பனையாகிறது. கடந்த 6 நாள்களில் மட்டும் 22 கேரட் தங்கம் சவரனுக்கு ₹2,360 உயர்ந்துள்ளது. வரும் நாள்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

error: Content is protected !!