News April 21, 2025

தேர்தல் ஆணையத்தின் சிஸ்டம் சரியில்லை: ராகுல்

image

இந்திய தேர்தல் ஆணையம் சமரச அமைப்பாகிவிட்டது என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், பாஸ்டன் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் இந்திய தேர்தல் ஆணையத்தின் சிஸ்டத்தில் மிகப் பெரிய தவறு இருப்பதாக குற்றம்சாட்டினார். அமெரிக்காவுடன், இந்தியாவுக்கு நட்புறவு நீடிக்கிறது என்றும் தெரிவித்தார்.

News April 21, 2025

போப் பிரான்சிஸ் மறைவுக்கு PM மோடி இரங்கல்

image

போப் பிரான்சிஸ் மறைவுக்கு மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். போப் மறைவு மிகுந்த வேதனையை அளிப்பதாகவும், இந்த துயரமான வேளையில், உலகம் முழுவதும் உள்ள கத்தாேலிக்க கிறிஸ்தவர்களுக்கு தனது இதயம் கனிந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனைவருக்கும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக அவர் கொண்டிருந்த உறுதி தனக்கு மிகுந்த உத்வேகத்தை அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News April 21, 2025

அதிமுக–பாஜக கூட்டணியால் முதல்வருக்கு பயம்: இபிஎஸ்

image

அதிமுக–பாஜக கூட்டணியால் முதல்வருக்கு பயம் வந்துவிட்டது என இபிஎஸ் விமர்சித்துள்ளார். இந்த கூட்டணியால் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதை உணர்ந்ததால் அவர் பதற்றத்துடன் தங்களது கூட்டணியை விமர்சிப்பதாகவும் இபிஎஸ் குற்றம்சாட்டினார். யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது தங்களது உரிமை என்றும் தெரிவித்தாா். நீட் நுழைவுத் தேர்வை கொண்டு வந்தது திமுக கூட்டணி தான் என்றும் இபிஎஸ் விளக்கம் அளித்தார்.

News April 21, 2025

போப் ஆண்டவரின் கடைசி வார்த்தை!

image

காஸாவில் போர் நிறுத்தம் வரவேண்டும் என்பதே போப் பிரான்சிஸின் கடைசி வார்த்தை. நேற்று ஈஸ்டர் தினத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை சந்தித்து ஆசி வழங்கிய அவர், இதுகுறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸிடம் கூட கூறியுள்ளார். இன்று காலை 7:35 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக வாடிகன் அறிக்கை வெளியிட்டுள்ளது. போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலகம் முழுவதும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News April 21, 2025

அக்‌ஷர்தாம் கோயிலில் ஜே.டி.வான்ஸ் தரிசனம்

image

டெல்லி வந்திறங்கிய அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், அக்‌ஷர்தாம் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். மனைவி உஷா மற்றும் மூன்று குழந்தைகளுடன் சேர்ந்து வழிபட்டார். ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், ராஜஸ்தானில் உள்ள பிரசித்தி பெற்ற அரண்மனை ஆகியவற்றையும் கண்டுகளிக்க ஜேடி வான்ஸ் திட்டமிட்டுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த அவரது மனைவி உஷா ஆந்திராவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 21, 2025

போப் பிரான்சிஸ் காலமானார்.. கடந்து வந்த பாதை!

image

அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் 1936-ல் பிறந்த <<16168574>>போப் பிரான்சிஸ்<<>> கடந்த 2013-ல் கத்தோலிக்க திருச்சபையின் 266-வது தலைவராக பொறுப்பேற்றார். 12 ஆண்டுகள் அந்த பொறுப்பிலிருந்த 65 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். உலக அமைதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். நேற்று ஈஸ்டர் தினத்தையொட்டி அமெரிக்க துணை அதிபர் J.D.வான்ஸ் உள்ளிட்டோருக்கு ஆசி வழங்கிய நிலையில், இன்று உலகை விட்டு மறைந்தார்.

News April 21, 2025

4 ஆண்டுகளில் புதிதாக 3,500 பஸ்கள்: சிவசங்கர்

image

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் புதிதாக 3,500 பஸ்கள் பயன்பாட்டிற்கு வந்திருப்பதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். பேரவையில் போக்குவரத்துத் துறை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், புதிய பஸ்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, 15 ஆண்டுகள் பழமையான பஸ்கள் மாற்றப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

News April 21, 2025

AI-யிடம் நன்றி சொல்லாதீங்க… கரண்ட் செலவாகுதாம்

image

மின்சார சிக்கனம்; தேவை இக்கணம் என்ற வாசகத்தை அவ்வளவு எளிதில் தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். தற்போது அது AI மாடல்களிடம் உரையாற்றுவதற்கும் தேவைப்படுகிறதாம். Thank you, hello, please போன்ற சிறிய உரையாடல்களுக்கு கூட மின்சாரத்திற்கு கோடிக்கணக்கான டாலர்கள் செலவாவதாகக் கூறி OPEN AI சிஇஓ சாம் அல்ட்மென் அதிர்ச்சியளித்துள்ளார். எனவே, தேவையானதை மட்டும் AI–யிடம் கேளுங்கள். ப்ளீஸ்…

News April 21, 2025

மகா.விலும் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு

image

தமிழகத்தை தொடர்ந்து பாஜக ஆளும் மகாராஷ்டிராவிலும் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. மராத்திக்கு மாற்றாக இந்தியை திணிப்பதாக சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில், 3வது மொழியாக இந்தியை கற்பிப்பது மாணவர்களுக்கு சுமையாக அமையும் என மாநில மொழிக் குழுவும் தெரிவித்துள்ளது. ஆனால், மராத்திக்கு மாற்றாக இந்தியை திணிக்கவில்லை என CM பட்நாவிஸ் விளக்கமளித்துள்ளார்.

News April 21, 2025

BREAKING: போப் பிரான்சிஸ் காலமானார்

image

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ், புனித வெள்ளி பிரார்த்தனையில் கூட கலந்துகொள்ளவில்லை. இதனால், அவரின் உடல்நிலை மீண்டும் மோசமானதாக கூறப்பட்ட நிலையில், வாடிகனில் உள்ள இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது.

error: Content is protected !!