News October 26, 2025

PAN CARD தொலைஞ்சிடுச்சா? Easy-ஆ வாங்கலாம்

image

➤<>www.onlineservices.proteantech.in<<>> -க்கு சென்று, PAN, ஆதார் நம்பரை உள்ளிடுங்கள் ➤DOB-ஐ உள்ளிட்டு, செக் பாக்ஸை டிக் செய்து, Submit-ஐ அழுத்துங்கள் ➤₹50 கட்டணம் செலுத்தினால், அக்னாலேஜ்மென்ட் ஸ்லிப் கிடைக்கும் ➤அதிலுள்ள 15 இலக்க நம்பரை வைத்து விண்ணப்பத்தின் ஸ்டேட்டஸை தெரிந்துகொள்ளுங்கள் ➤20 நாட்களுக்குள் உங்கள் முகவரிக்கு PAN card வந்து சேரும். அனைவருக்கும் பயனளிக்கும் தகவலை SHARE பண்ணுங்க.

News October 26, 2025

10 மாதங்களில் 1 லட்சம் பேர் பணிநீக்கம்!

image

IT, டெக் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு 2025 மோசமான ஆண்டாக மாறியுள்ளது. காரணம் Layoff. அமேசான், கூகுள் என முன்னணி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. Layoff.fyi தளம், உலகம் முழுவதும் 212 நிறுவனங்கள் 91,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால், பல நிறுவனங்கள் முழு எண்ணிக்கையை கூறாததால், இது 1 லட்சத்தையும் தாண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

News October 26, 2025

அதிமுக தொகுதிகளை குறிவைக்கும் பாஜக?

image

2021-ல் சேலம் மாவட்டத்தில் ஒரு தொகுதியை பாஜக கேட்டதாக கூறப்பட்டது. ஆனால், கொங்கு மண்டலத்தில் மட்டுமே அவர்களுக்கு வாய்ப்பளித்தது அதிமுக. ஆனால், இம்முறை விடக்கூடாது என சேலத்தில் டெல்லி தலைவர்களை வைத்து கூட்டங்களை நடத்த பாஜக ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால், சேலத்தை தனது கோட்டையாக கருதும் EPS கடுப்பில் இருக்கிறாராம். பாஜகவுக்கு சேலத்தில் EPS வாய்ப்பளிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

News October 26, 2025

பயணிகள் உயிரோடு விளையாடும் ஆம்னி பஸ்கள்!

image

கர்னூல் அருகே கடந்த 23-ம் தேதி விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ்ஸில் 20 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பஸ்ஸில் இருந்த 234 ஸ்மார்ட்போன்களும் காரணம் என்பது தெரியவந்துள்ளது. போனில் இருந்த லித்தியம்-அயன் பேட்டரிகள் வெடித்து சிதறியதும் நெருப்பு வேகமாக பரவ ஒரு காரணம். மக்கள் பயணிக்கும் ஆம்னி பஸ்களை பார்சல் லாரிகள் போல பலர் பயன்படுத்துவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அரசு இதில் கவனம் செலுத்துமா?

News October 26, 2025

மீண்டும் வரியை உயர்த்தினார் டிரம்ப்

image

கனடா பொருட்கள் மீது ஏற்கனவே 35% வரி விதிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக 10% வரி விதிக்கப்படுவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா முதலில் விதித்த வரிக்கு எதிராக கனடாவில் தொலைக்காட்சி விளம்பரம் ஒன்று ஒளிபரப்பானது. இதனை நிறுத்தும்படி டிரம்ப் கூறியும் கனடா அந்த விளம்பரத்தை திரும்பப்பெறவில்லை. இதனால் கடுப்பான டிரம்ப், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மீண்டும் வரியை உயர்த்தி நடவடிக்கை எடுத்துள்ளார்.

News October 26, 2025

BREAKING: திமுக கூட்டணியில் புதிய கட்சி

image

அடுத்த மாதம் 20-ம் தேதி புதிய கட்சி தொடங்கும் மல்லை சத்யா, திமுக கூட்டணியில் இணைய உள்ளதாக தெரிவித்துள்ளார். நேற்று திருச்சியில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய அவர், கட்சியின் பெயரை முடிவு செய்ய புலவர் செவந்தியப்பன் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். குறிப்பாக 2026 தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க தமது இயக்கம் பாடுபடும் என்றும் அறிவித்துள்ளார்.

News October 26, 2025

இன்று புழக்கத்தில் உள்ள டாப் 5 பழமையான நாணயங்கள்!

image

உலகத்தில் பல நாணயங்கள் புழக்கத்தில் இருந்தாலும், அவற்றில் மிகவும் பழமையானது எது என உங்களுக்கு தெரியுமா? மேலே உள்ள போட்டோஸை வலது பக்கம் Swipe செய்து பாருங்க. மிகவும் பழமையான நாணயங்களும், அவை எந்த நாட்டில் உருவாக்கப்பட்டன என்ற டாப் 5 லிஸ்ட்டை கொடுத்துள்ளோம். நம்மூரில் புழக்கத்தில் இருந்த ₹25 பைசா, ₹50 பைசாக்களை நீங்க யூஸ் பண்ணிருக்கீங்களா?

News October 26, 2025

UPDATE: ஷ்ரேயஸ் ஐயருக்கு என்ன ஆச்சு?

image

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ODI-யில் ஃபீல்டிங்கின் போது காயமடைந்த ஸ்ரேயஸ் ஐயருக்கு இடது விலா எலும்பில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன் காரணமாக, அவர் கிட்டத்தட்ட 3 வாரங்களுக்கு மேல் கிரிக்கெட்டில் இருந்து விலகலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால், அவர் நவம்பர் 30-ம் தேதி தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ODI-யில் விளையாடுவாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

News October 26, 2025

திமுகவில் இணைந்தனர்

image

2026 சட்டமன்றத் தேர்தலில், 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெல்ல வேண்டும் என்ற ஸ்டாலின் ஆணையை நிறைவேற்ற திமுகவினர் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அடித்தளம் போடும் வகையில் மாற்றுக்கட்சியினரை திமுகவில் இணைக்கும் பணி வேகமெடுத்துள்ளது. இந்நிலையில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் K.S.மூர்த்தி முன்னிலையில், அதிமுகவை சேர்ந்த பலர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர்.

News October 26, 2025

CM நிகழ்ச்சிக்காக பனைகள் வெட்டப்பட்டதா? Fact Check

image

தென்காசியில் CM நிகழ்ச்சிக்காக சட்டவிரோதமாக பனை மரங்கள் வெட்டப்பட்டதாக செய்தி பரவியது. இந்நிலையில், TN அரசின் தகவல் சரிபார்ப்பகம் இது தவறான செய்தி என்று தெரிவித்துள்ளது. 2 தனிநபர்கள் தங்களின் ஆபத்தான நிலையில் உள்ள 4 பனைகளை, உரிய அனுமதி பெற்று வெட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அரசாணை 238-ன் படி, ஒரு மரத்துக்கு 10 என்ற வீதத்தில் 40 பனைகளை வளர்க்க கலெக்டர் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!