News April 21, 2025

சிறுவனை கடத்தி ரேப்.. பெண்ணுக்கு 20 ஆண்டு ஜெயில்

image

ராஜஸ்தானில் சிறுவனை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரை சேர்ந்த 16 வயது சிறுவனை லாலிபாய் மோஹியா (30) என்ற பெண் விரும்பியுள்ளார். அவனுடன் உடலுறவில் ஈடுபட விரும்பி கடத்தி, ஓட்டலில் அடைத்து வைத்து மதுவை அளித்து 7 நாள்கள் வரை ரேப் செய்துள்ளார். போலீசார் லாலிபாயை கைது செய்து சிறுவனை மீட்டனர். இந்த வழக்கில் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

News April 21, 2025

பிஎம் இன்டர்ன்சிப் திட்டம்: நாளையே கடைசி

image

படித்த வேலையில்லா இளைஞர்களை தேர்வு செய்து, தனியார் நிறுவன பங்களிப்புடன் அவர்களுக்கு மத்திய அரசு ஓராண்டு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கிறது. அப்போது மாதம் தலா ரூ.5,000, ஒரு முறை மட்டும் ரூ.6,000 மத்திய அரசு அளிக்கிறது. இதற்கு <>https://pminternshipscheme.com/ <<>>இணையதளத்தில் பதிவு நடைபெற்று வருகிறது. நாளையுடன் இந்த பதிவு நிறைவடையவுள்ளது. SHARE IT.

News April 21, 2025

REWIND: தமிழ் கவிஞர் பாரதிதாசன் மறைந்த நாள்

image

தமிழ் இலக்கிய உலகில் மிகவும் போற்றப்படுபவர்களில் பாரதிதாசனும் ஒருவர். பெண்கள் விடுதலை,அழகின் சிரிப்பு, குயில் பாடல்கள் என பாரதிதாசன் படைத்த படைப்புகள் இன்றும் அவர் புகழ் பாடுகின்றன. பாரதியாரின் வழியில் அவரை அடியொற்றித் துடித்தெழுந்து தொண்டாற்றியவர் பாரதிதாசன். அவரின் பெயரையே தனது பெயராகவும் அவர் மாற்றிக் கொண்டார். கடந்த 1964-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி இதே நாளில்தான் அவர் இன்னுயீர் நீத்தார்.

News April 21, 2025

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்

image

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் வினாத்தாளில் குளறுபடி உள்ளதால், ஒரு போனஸ் மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. சமூக அறிவியல் பாட வினாத்தாளில், ஒரு மதிப்பெண் வினாவில், 4-வது கேள்வியின் இரண்டு வாக்கியங்கள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன. இந்த கேள்வியை மாணவர் அட்டென்ட் செய்திருந்தால் ஒரு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 21, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

News April 21, 2025

போப் தேர்வு எப்படி நடைபெறும்? (1/3)

image

வாடிகன் நாட்டில் வசிக்கும் போப்தான் உலகம் முழுவதிலும் உள்ள RC கிறிஸ்தவர்களின் தலைவராக இருக்கிறார். அவர் இறந்துவிட்டாலோ, ராஜினாமா செய்து விட்டாலோ, அடுத்த போப்பை தேர்வு செய்யும் முறை விசித்திரமானது. உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 120 கர்தினல்கள் (மூத்த பாதிரியார்கள்) வாடிகன் நகருக்கு வருகை தருவார்கள். அவர்கள் அனைவரும் வாக்கு செலுத்தி புதிய போப் தேர்வு செய்யப்படுவார்.

News April 21, 2025

போப் தேர்வு எப்படி நடைபெறும்? (2/3)

image

வாடிகன் நாட்டில் உள்ள சிஸ்டின் சேப்பலில் மூடிய அறையில் தேர்தல் நடைபெறும். 80 வயதுக்கு குறைவான கர்தினல்கள் மட்டுமே வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். பொதுவாக, கிறிஸ்தவர்கள் அனைவருமே போப் தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றவர்கள்தான் என்றாலும், கர்தினல்களில் ஒருவர்தான் போட்டியிடுவார். வாக்குச்சீட்டு முறைப்படி நடைபெறும் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் பெறுபவர் வெற்றி பெறுவார்.

News April 21, 2025

போப் தேர்வு எப்படி நடைபெறும்? (3/3)

image

மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் யாருக்கும் கிடைக்காவிட்டால், வாக்குச்சீட்டுகள் எரிக்கப்பட்டு கரும்புகை வெளியிடப்படும். போப் தேர்வு செய்யப்பட்டால், வெண் புகை வெளியிடப்படும். அதை வைத்து மக்கள் போப் தேர்வானதை அறிந்து கொள்வார்கள். பின்னர், புதிய போப் தனது புதிய பெயரை தேர்வு செய்துகொண்டு பால்கனி மூலம் மக்களுக்கு காட்சியளிப்பார்.

News April 21, 2025

அமைதியை விரும்புவோருக்கு பேரிழப்பு: விஜய்

image

கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் X தளம் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது போஸ்டில், போப்பின் மறைவு செய்தி கேட்டு ஆழ்ந்த வேதனைக்குள்ளானதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அமைதியை விரும்புவோருக்கு இது பேரிழப்பு என்றும் அன்னாருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்றும் விஜய் கூறியுள்ளார்.

News April 21, 2025

உயர்வு கண்ட பங்குச்சந்தைகள்

image

வாரத்தின் முதல் நாளான இன்று, இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது. நிஃப்டி 273 புள்ளிகள் உயர்ந்து 24,125 புள்ளிகளிலும், சென்செக்ஸ் 855 புள்ளிகள் உயர்ந்து 79,408 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. வங்கிகளுக்கு 4-வது காலாண்டின் லாபம் அதிகமாக இருப்பதால் அதன் மதிப்பு உயர்கிறது. இதன் தாக்கத்தால், பங்குச்சந்தையும் ஏற்றமடைவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!