News April 21, 2025

AI-யிடம் நன்றி சொல்லாதீங்க… கரண்ட் செலவாகுதாம்

image

மின்சார சிக்கனம்; தேவை இக்கணம் என்ற வாசகத்தை அவ்வளவு எளிதில் தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். தற்போது அது AI மாடல்களிடம் உரையாற்றுவதற்கும் தேவைப்படுகிறதாம். Thank you, hello, please போன்ற சிறிய உரையாடல்களுக்கு கூட மின்சாரத்திற்கு கோடிக்கணக்கான டாலர்கள் செலவாவதாகக் கூறி OPEN AI சிஇஓ சாம் அல்ட்மென் அதிர்ச்சியளித்துள்ளார். எனவே, தேவையானதை மட்டும் AI–யிடம் கேளுங்கள். ப்ளீஸ்…

News April 21, 2025

மகா.விலும் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு

image

தமிழகத்தை தொடர்ந்து பாஜக ஆளும் மகாராஷ்டிராவிலும் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. மராத்திக்கு மாற்றாக இந்தியை திணிப்பதாக சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில், 3வது மொழியாக இந்தியை கற்பிப்பது மாணவர்களுக்கு சுமையாக அமையும் என மாநில மொழிக் குழுவும் தெரிவித்துள்ளது. ஆனால், மராத்திக்கு மாற்றாக இந்தியை திணிக்கவில்லை என CM பட்நாவிஸ் விளக்கமளித்துள்ளார்.

News April 21, 2025

BREAKING: போப் பிரான்சிஸ் காலமானார்

image

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ், புனித வெள்ளி பிரார்த்தனையில் கூட கலந்துகொள்ளவில்லை. இதனால், அவரின் உடல்நிலை மீண்டும் மோசமானதாக கூறப்பட்ட நிலையில், வாடிகனில் உள்ள இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது.

News April 21, 2025

அசலை மிஞ்சும் ₹500 கள்ளநோட்டு: அரசு எச்சரிக்கை

image

அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ₹500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. சந்தையில் புழக்கத்துக்கு வந்துள்ள இந்த நோட்டில் ஒரு சிறிய எழுத்துப் பிழை மட்டுமே அது கள்ள நோட்டு என கண்டறிய உதவுகிறது. அசல் நோட்டில் ‘RESERVE BANK OF INDIA’ என இருக்கும். கள்ள நோட்டில் உள்ள ‘RESERVE’ல் E என்ற எழுத்துக்கு பதில் A என இருக்கிறது. உஷாரா இருங்க மக்களே!

News April 21, 2025

பிடிஆர்-க்கே இந்த நிலையா? அவரே சொன்ன பதில்

image

கடலூரில் டைட்டல் பார்க் அமைக்க அதிமுக எம்எல்ஏ பொன் ஜெயசீலன், பேரவையில் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பிடிஆர், தனது துறைக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கப்படுகிறது. நிதியை அதிகாரம் உள்ளவர்களிடம் கேட்க வேண்டியதைக் கேட்டால் கிடைக்கும் எனத் தெரிவித்தார். பிடிஆர் நிதியமைச்சராக இருந்தபோது, சரியாக நிதி ஒதுக்கவில்லை என பலர் புலம்பினர். தற்போது PTR-க்கும் அதே நிலை வந்திருக்கிறது.

News April 21, 2025

பிசிசிஐ ஒப்பந்தத்தில் உள்ள இரு தமிழர்கள்…

image

நடப்பு ஆண்டுக்கான பிசிசிஐ ஒப்பந்தத்தில் இரு தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் மற்றும் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் ‘C’ பிரிவில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ₹1 கோடி சம்பளமாக வழங்கப்படும். வேறு எந்த தமிழக வீரரை ஒப்பந்தத்தில் சேர்ந்திருக்கலாம்னு நீங்க சொல்லுங்க…

News April 21, 2025

அமைச்சர் கே.என்.நேரு பொய் சொல்கிறார்: இபிஎஸ்

image

திருச்சி உறையூர் குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரத்தில் அமைச்சர் கே.என்.நேரு தவறான தகவலை அளித்ததாக இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். வெக்காளியம்மன் கோயில் திருவிழாவில் கொடுத்த குளிர்பானத்தை அருந்தியதால் தான் மக்கள் பாதிக்கப்பட்டதாக கூறுவதை ஏற்க முடியாது என்றார். திருவிழாவில் உறையூர் மக்கள் மட்டுமே பங்கேற்றார்களா? அப்படியெனில் மற்ற பகுதி மக்களுக்கு ஏன் பாதிப்பு ஏற்படவில்லை என கேள்வி எழுப்பினார்.

News April 21, 2025

டாஸ்மாக் வழக்கில் ஏப்.23ல் தீர்ப்பு

image

டாஸ்மாக் வழக்கில் நாளை மறுநாள் சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்குகிறது. டாஸ்மாக்கில் ₹1,000 கோடிக்கு மேல் ஊழல் நடந்ததாக கூறி, அதன் தலைமை அலுவலகத்தில் ED சோதனை நடத்தியது. இச்சோதனை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி டாஸ்மாக் நிர்வாகமும், TN அரசும் வழக்குத் தொடர்ந்தது. இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை 23-ம் தேதிக்கு சென்னை ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது.

News April 21, 2025

நீட் விலக்கு: இபிஎஸ்-க்கு சரியான வாய்ப்பு

image

நீட்டை யார் கொண்டு வந்தது என தொடர்ந்து கேள்வி எழுப்பும் இபிஎஸ், அந்த சிக்கலை சரி செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எங்கள் கூட்டணி ஆட்சி அமைத்திருந்தால் நீட் விலக்கு பெற்றிருப்போம். ஆனால், அது நடக்கவில்லை. தற்போது பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதால், நீங்கள் (இபிஎஸ்) நீட் விலக்கை பெற்று தரலாம் என்று தெரிவித்துள்ளார்.

News April 21, 2025

இபிஎஸ்-க்கு ஸ்டாலின் சவால்!

image

சட்டப்பேரவையில் நீட் விவகாரத்தில் இபிஎஸ்-க்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையே காரசாரமாக விவாதம் நடந்தது. அப்போது, நாங்கள் யாரையும் ஏமாற்றி ஆட்சிக்கு வரவில்லை எனக் கூறிய ஸ்டாலின், நீட் விலக்கு தீர்மானம் கொண்டுவந்தால் ஆதரிக்க அதிமுக தயாரா? என கேள்வி எழுப்பினார். மேலும், நீட் தேர்வை ரத்து செய்தால் தான் பாஜக உடன் கூட்டணி வைப்போம் என்று கூறுவீர்களா? என்று இபிஎஸ்-க்கு சவால் விடுத்துள்ளார்.

error: Content is protected !!