News April 21, 2025

பாஜக MP மீது கிரிமினல் வழக்கு?

image

SC மற்றும் தலைமை நீதிபதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய <<16159926>>பாஜக<<>> எம்பி நிஷிகாந்த் துபே மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடரலாமா என வழக்கறிஞர் ஒருவர் SC-யிடம் அனுமதி கேட்டார். அதற்கு கோர்ட்டின் அனுமதி தேவைப்படாது, ஆனால் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலின் ஒப்புதலை பெற வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். ஆளுநர் மற்றும் வக்ஃப் விவகாரத்தில் SC-யின் தீர்ப்பை துபே கடுமையாக சாடியிருந்தார்.

News April 21, 2025

பேக்கரி டீலிங் திமுகவுக்குதான் பொருந்தும்.. இபிஎஸ் பதிலடி

image

பேக்கரி டீலிங் திமுகவுக்குதான் பொருந்தும் என்று இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார். வடிவேலு காமெடியில் வருவது போல அதிமுக பேக்கரி டீலிங் செய்து 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்ததாக அமைச்சர் சிவசங்கர் விமர்சித்திருந்தார். இந்த டீலிங் திமுகவுக்கு கைவந்த கலை என்றும், அறிவாலய மேல்தளத்தில் சிபிஐ சோதனை நடத்தியபோது, கீழ்தளத்தில் திமுக கூட்டணி பேச்சு நடத்தி கொண்டிருந்ததாக இபிஎஸ் பதிலடி கொடுத்தார்.

News April 21, 2025

போப் ஆண்டவர் மறைவால் வேதனையடைந்தேன்: ஸ்டாலின்

image

கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவால் மிகவும் வருத்தமடைந்தேன் என்று முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இரக்கமுள்ள, முற்போக்கான குரலாக ஒலித்தவர் போப் பிரான்சிஸ், ஏழைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காகவும் தன்னை அர்ப்பணித்தவர். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் & ஆறுதல் என தெரிவித்துள்ளார்.

News April 21, 2025

வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவுக்கு தடையா?

image

கொல்கத்தா மைதானத்தில் பிட்ச் குறித்து வர்ணனையாளர்கள் ஹர்ஷா போக்லேயும், சைமன் டவுலும் தெரிவித்த கருத்து சர்ச்சையானது. KKR அணிக்கு சாதகமாக இல்லாத கொல்கத்தா மைதானத்தில் இருந்து வேறு இடத்துக்கு அவர்கள் மாற வேண்டும் என இருவரும் தெரிவித்திருந்தனர். இதனால் இருவரும் இனி கொல்கத்தாவில் நடக்கும் போட்டிகளில் வர்ணனை செய்ய தடை கோரி பெங்கால் கிரிக்கெட் சங்கம் BCCI-க்கு கடிதம் எழுதியுள்ளது.

News April 21, 2025

தேர்தல் ஆணையத்தின் சிஸ்டம் சரியில்லை: ராகுல்

image

இந்திய தேர்தல் ஆணையம் சமரச அமைப்பாகிவிட்டது என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், பாஸ்டன் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் இந்திய தேர்தல் ஆணையத்தின் சிஸ்டத்தில் மிகப் பெரிய தவறு இருப்பதாக குற்றம்சாட்டினார். அமெரிக்காவுடன், இந்தியாவுக்கு நட்புறவு நீடிக்கிறது என்றும் தெரிவித்தார்.

News April 21, 2025

போப் பிரான்சிஸ் மறைவுக்கு PM மோடி இரங்கல்

image

போப் பிரான்சிஸ் மறைவுக்கு மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். போப் மறைவு மிகுந்த வேதனையை அளிப்பதாகவும், இந்த துயரமான வேளையில், உலகம் முழுவதும் உள்ள கத்தாேலிக்க கிறிஸ்தவர்களுக்கு தனது இதயம் கனிந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனைவருக்கும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக அவர் கொண்டிருந்த உறுதி தனக்கு மிகுந்த உத்வேகத்தை அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News April 21, 2025

அதிமுக–பாஜக கூட்டணியால் முதல்வருக்கு பயம்: இபிஎஸ்

image

அதிமுக–பாஜக கூட்டணியால் முதல்வருக்கு பயம் வந்துவிட்டது என இபிஎஸ் விமர்சித்துள்ளார். இந்த கூட்டணியால் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதை உணர்ந்ததால் அவர் பதற்றத்துடன் தங்களது கூட்டணியை விமர்சிப்பதாகவும் இபிஎஸ் குற்றம்சாட்டினார். யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது தங்களது உரிமை என்றும் தெரிவித்தாா். நீட் நுழைவுத் தேர்வை கொண்டு வந்தது திமுக கூட்டணி தான் என்றும் இபிஎஸ் விளக்கம் அளித்தார்.

News April 21, 2025

போப் ஆண்டவரின் கடைசி வார்த்தை!

image

காஸாவில் போர் நிறுத்தம் வரவேண்டும் என்பதே போப் பிரான்சிஸின் கடைசி வார்த்தை. நேற்று ஈஸ்டர் தினத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை சந்தித்து ஆசி வழங்கிய அவர், இதுகுறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸிடம் கூட கூறியுள்ளார். இன்று காலை 7:35 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக வாடிகன் அறிக்கை வெளியிட்டுள்ளது. போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலகம் முழுவதும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News April 21, 2025

அக்‌ஷர்தாம் கோயிலில் ஜே.டி.வான்ஸ் தரிசனம்

image

டெல்லி வந்திறங்கிய அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், அக்‌ஷர்தாம் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். மனைவி உஷா மற்றும் மூன்று குழந்தைகளுடன் சேர்ந்து வழிபட்டார். ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், ராஜஸ்தானில் உள்ள பிரசித்தி பெற்ற அரண்மனை ஆகியவற்றையும் கண்டுகளிக்க ஜேடி வான்ஸ் திட்டமிட்டுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த அவரது மனைவி உஷா ஆந்திராவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 21, 2025

போப் பிரான்சிஸ் காலமானார்.. கடந்து வந்த பாதை!

image

அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் 1936-ல் பிறந்த <<16168574>>போப் பிரான்சிஸ்<<>> கடந்த 2013-ல் கத்தோலிக்க திருச்சபையின் 266-வது தலைவராக பொறுப்பேற்றார். 12 ஆண்டுகள் அந்த பொறுப்பிலிருந்த 65 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். உலக அமைதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். நேற்று ஈஸ்டர் தினத்தையொட்டி அமெரிக்க துணை அதிபர் J.D.வான்ஸ் உள்ளிட்டோருக்கு ஆசி வழங்கிய நிலையில், இன்று உலகை விட்டு மறைந்தார்.

error: Content is protected !!