India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘கலகலப்பு 3’ படம் குறித்த அப்டேட் ஒன்றை நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ’விரைவில் ‘கலகலப்பு 3’ உருவாக இருக்கிறது, நடிகர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனப் பதிவிட்டுள்ளார். கடந்த 2012, 2018ஆம் ஆண்டுகளில் வெளியான கலகலப்பு1, 2 படங்களுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து 3ஆம் பாகம் விரைவில் தொடங்க உள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹480 உயர்ந்து ₹55,960க்கு விற்பனையாகிறது. நேற்று ₹6,935க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம், இன்று ₹60 உயர்ந்து ₹6,995க்கு விற்கப்படுகிறது. இதனால் தங்கம் வாங்குவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ஒன்று ₹99க்கு விற்கப்படுகிறது.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. அனல் பறக்கும் இறுதிகட்ட பிரச்சாரத்தில் அரசியல் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் ஒரே கட்டமாக நவ.20 வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. நவ.23 அன்று வாக்குகள் எண்ணப்படவுள்ளன.பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்திய அணியில் டெஸ்ட் போட்டிக்காகவே உருவாக்கப்பட்ட வீரராக இருந்தார் புஜாரா. கடைசியாக கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் அவர் இடம்பெற்றார். அதன் பிறகு, இந்திய அணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள புஜாரா, தற்போது BGT தொடரில் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஒளிபரப்பாக இருக்கும் BGT தொடரில் புஜாரா ஹிந்தியில் கமெண்ட்ரியில் கொடுப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் நயன்தாரா குறித்து நடிகர் பயில்வான் மிக கொச்சையாக பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனுஷுக்கு எதிராக நயன் வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ”நயன்தாரா என்ன கண்ணகியா? இன்னொருவரின் கணவர் என்று தெரிந்தும் பிரபுதேவாவை காதலித்தவர்தானே!” என்று பயில்வான் பேசியிருக்கிறார்.
சென்னை வியாசர்பாடி மேம்பாலத்தில் பைக்கில் தந்தையுடன் சென்று கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை புகழ்வேந்தனின் கழுத்தில் மாஞ்சா நூல் அறுத்து காயம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்புவரை கொடிகட்டி பறந்த பட்டம் விடும் கலாசாரம், தற்போது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனாலும், தடையை மீறி மாஞ்சா நூலை பயன்படுத்திய 4 மாணவர்கள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஏஐ எதிர்காலத்தில் பெரும் ஆபத்தாக மாறும் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவன், வீட்டுப்பாடம் எழுத உதவுமாறு GEMINI ஏஐ-இன் உதவியை நாடியுள்ளார். அதற்கு பதிலளித்த ஏஐ, “நீ இந்த உலகத்துக்கே பாரம். நீ யாருக்கும் முக்கியம் அல்ல. இந்த உலகின் சாக்கடையே.. நீ செத்து விடு” என மிரட்டியுள்ளது. ஏஐ-இன் இந்த பகிரங்க மிரட்டல், மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி. அரசு மருத்துவமனை தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. இதனிடையே, விபத்துக்கு முன்பான சிசிடிவி பதிவில், ஒரு நர்ஸ் வேக வேகமாக அங்கிருந்து வெளியேறுவது தெரியவந்தது. இதனால் இது சதிச்செயல் என தகவல் பரவியது. இந்நிலையில், இதுகுறித்து விசாரித்த உயர்மட்டக் குழு, தீ விபத்துக்கு சதிச்செயல் காரணம் இல்லை என்றும், ஷார்ட் சர்க்யூட்டால் இந்த விபத்து நேரிட்டதாகவும் அறிக்கை அளித்துள்ளது.
சபரிமலையில் 1952’இல் தீவிபத்து ஏற்பட்டது. இதனால், புதிய ஐயப்பன் சிலை செய்யப்பட்டு, பல இடங்களுக்கு புனித யாத்திரையாக கொண்டு செல்லப்பட்டது. அப்படி சென்னை மண்ணடி கச்சாலீஸ்வரர் கோயிலுக்கு சிலை வந்தபோது, மீண்டும் சபரிமலைக்கு கொண்டு செல்ல தேவஸ்தானம் தரப்பில் சற்று காலதாமதமானது. இதன் காரணமாக, 3 நாட்கள் ஐயப்பன் சிலை கோயிலில் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் தடையை மீறி ஊர்வலம் நடத்திய நடிகை ரோகிணி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். CPI(M) கட்சி சார்பில், பாலின பாகுபாடற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவோம் என்று ஊர்வலம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு முன் அனுமதி பெறப்படாத நிலையில், போலீசார் ஊர்வலம் நடத்தியவர்களை தடுத்து நிறுத்தினர். அதனையும் மீறி ஊர்வலம் நடத்திய ரோகிணி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.