News April 21, 2025

தேர்தல் பணிகளில் வேகம் காட்டும் விஜய்

image

TN சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளில் தவெக தலைவர் விஜய் வேகம் காட்டி வருகிறார். கடந்த வாரம் கட்சியின் ஐடி பிரிவு நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திய நிலையில், தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு வரும் 26, 27–ம் தேதிகளில் கோவையில் நடக்கிறது. இதில், தேர்தல் களப்பணிகள் குறித்து விஜய் ஆலோசிப்பார் என தெரிகிறது. கோவை, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மண்டல கமிட்டி நிர்வாகிகள் இதில் பங்கேற்கின்றனர்.

News April 21, 2025

BREAKING: என்கவுன்டரில் 8 நக்சல்கள் சுட்டுக்கொலை

image

ஜார்கண்ட் மாநிலம் பொகாராவில் உள்ள லுகு மலைப் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 8 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். சமீப காலமாக சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களில் நக்சல் தேடுதல் வேட்டையை மத்திய பாதுகாப்பு படை தீவிரப்படுத்தியுள்ளது. அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் நக்சல்களை ஒழித்துவிடுவோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா சூளுரைத்துள்ளது கவனிக்கத்தக்கது.

News April 21, 2025

பேக்கரி டீலிங்: அமைச்சர் சிவசங்கர் பேச்சால் அமளி

image

சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். அதிமுக ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளை கிரி படத்தில் வரும் வடிவேலு வசனத்துடன் ஒப்பிட்டு அமைச்சர் பேசியுள்ளார். இதனால், ஆவேசமடைந்த அதிமுகவினர் அமைச்சருக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

News April 21, 2025

வந்தாச்சு பிசிசிஐ காண்ட்ராக்ட்.. மீண்டும் ஷ்ரேயஸ் ஐயர்…

image

நடப்பு ஆண்டுக்கான BCCI-யின் ஒப்பந்தத்தில் ‘A+’ பிரிவில் ரோஹித், விராட், பும்ரா, ஜடேஜா தொடர்கின்றனர். ‘A’ பிரிவில் சிராஜ், ராகுல், கில், பாண்டியா, ஷமி, பண்ட் உள்ளனர். ‘B’ பிரிவில் விடுவிக்கப்பட்டிருந்த ஷ்ரேயஸ், சூர்யா, குல்தீப், அக்‌ஷர், ஜெய்ஸ்வால் உள்ளனர். ‘C’ பிரிவில் இஷான் கிஷன் உட்பட 19 வீரர்கள் உள்ளனர். A+ – க்கு ₹7கோடி, A-க்கு ₹5 கோடி, B-க்கு ₹3 கோடி, C-க்கு ₹1 கோடி சம்பளமாக உள்ளது.

News April 21, 2025

8 மத்திய அமைச்சர்களின் பதவி பறிப்பு?

image

மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகளை PM மோடி தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார். இதனிடையே, 7 (அ) 8 அமைச்சர்களை விரைவில் மாற்ற உள்ளதாகவும் அதில் சில மூத்த அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில், அங்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்க மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

News April 21, 2025

உறையூர் உயிரிழப்பு: கே.என்.நேரு மறுப்பு

image

திருச்சி உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்தி 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுவது ஆதாரமற்றது என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். பேரவையில் இபிஎஸ் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்த அவர், உறையூர் வெக்காளி அம்மன் கோயில் திருவிழாவில் வழங்கிய சுகாதாரமற்ற குளிர்பானத்தை குடித்ததால் தான் பலருக்கு வயிற்று கோளாறு ஏற்பட்டதாகவும், குடிநீரில், கழிவுநீர் கலக்கவில்லை என்றும் கூறினார்.

News April 21, 2025

ஹெல்மெட் இல்லைனா சஸ்பெண்ட்.. அதிரடி உத்தரவு

image

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டும் போலீசாரை சஸ்பெண்ட் செய்ய டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும் போக்குவரத்து விதிமுறைகளை சரியாக பின்பற்றாமல் இருப்பது, பொது இடங்களில் ஒழுங்கீனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் போலீசார் ஈடுபட்டால் அவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அனைத்து கமிஷனர்கள் மற்றும் எஸ்.பிக்களுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

News April 21, 2025

‘மாம்பழம்’ எந்தப் பக்கம்? இலை, பூ கட்சிகளிடையே போட்டி!

image

கூட்டணி கதவை திமுக அடைத்ததால் பாமகவை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக, தவெக இடையே கடுமையான போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. வரும் ஜூன் மாதத்துடன் அன்புமணியின் ராஜ்யசபா MP பதவிக்காலம் நிறைவடைவதால் மீண்டும் பாமகவுக்கு MP சீட்டு, 2026 தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாம். அதேநேரம் ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் என தவெகவும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாம்.

News April 21, 2025

3 நாள்களுக்கு தொடர் விடுமுறை!

image

சித்திரைத் திருவிழாவையொட்டி மதுரை மாவட்டத்திற்கு மே 12-ம் தேதி (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை என கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார். இதனால், அன்று அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் செயல்படாது. ஏற்கனவே மே 10 (சனிக்கிழமை), மே 11 (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் தொடர்ந்து 3 நாள்களுக்கு விடுமுறை கிடைக்கவுள்ளது. இது அரசு ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

News April 21, 2025

ED வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு ஜாமின்

image

போதைப் பொருள் கடத்தியதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக EX நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கடந்த 2024ல் கைது செய்யப்பட்டார். அவர் மீது சட்டவிரோத பணிப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ED தனியாக வழக்குப் பதிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், இவ்வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு சென்னை ஐகோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது. இவ்வழக்கில் 12வது நபராக இயக்குநர் அமீரும் சேர்க்கப்பட்டிருந்தார்.

error: Content is protected !!