India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணியை உருவாக்குவேன் என ராமதாஸ் கூறியுள்ளார். சேலத்தில் பேசிய அவர், பாமகவின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பொறுத்திருந்து பாருங்கள் என்றார். திமுகவுடன் கூட்டணியா என்ற கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு, போக போக தான் தெரியும் எனக் கூறினார். தந்தை, மகன் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் அதிமுக, அன்புமணியுடன் கூட்டணிக்கு நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 340 Probationary Engineer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது ✦கல்வித்தகுதி: B.E / B.Tech / B.Sc Engineering Degree ✦வயது: 21- 25 ✦தேர்ச்சி முறை: கணினி வழி தேர்வு & நேர்காணல் ✦சம்பளம்: ₹40,000- ₹1,40,000 வரை ✦விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 14-ம் தேதி. முழு தகவலுக்கு <

கரூர் துயரம் தொடர்பான வழக்குகள் சென்னை HC-ல் நாளை(அக்.27) விசாரணைக்கு வரவுள்ளன. ➤முன்ஜாமின் கோரி புஸ்ஸி ஆனந்த் தாக்கல் செய்த மனு ➤ஆதவ் அர்ஜுனா மீது பதிந்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரிய மனு ➤கரூர் எஸ்பி உள்ளிட்டோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரிய மனு ➤அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க கோரிய மனு என தவெக தொடர்பான அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு வருகின்றன.

ஆசிய யூத் கேம்ஸ் கபடியில் தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகா, அபினேஷுக்கு தலா ₹25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி CM ஸ்டாலின் பாராட்டினார். இவர்களை போன்ற எளிய பின்புலங்களில் இருந்து சாதிக்கும் ஒவ்வொரு வீரரின் வெற்றியிலும், சமூகநீதி மண்ணான தமிழகம் பெருமை கொள்வதாக X-ல் CM கூறியுள்ளார். இச்சந்திப்பின் போது அவ்விருவர் விடுத்த கோரிக்கைகள், நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

உங்களிடம் ₹1 கோடி இருந்தால், வெறும் 25 கிராம் தங்கம் மட்டுமே வாங்க முடியும் என்றால் நம்ப முடியுமா? 2050-ல் அதுதான் நடக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். அதாவது, 2000-ல் 24 காரட் தங்கம் 10 கிராம் ₹4,400 மட்டுமே. ஆனால், 2025-ல் அதன் விலை தாறுமாறாக உயர்ந்து ₹1.32 லட்சமாக உள்ளது. இதே விகிதத்தில் விலை உயர்ந்தால், 2050-ல் 10 கிராம் தங்கம் ₹40 லட்சமாக அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். SHARE

மகளிர் ODI WC-ன் கடைசி லீக் போட்டியில் இன்று IND, BAN அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணி ஏற்கெனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றாலும், இன்றைய போட்டியில் வெல்ல முனைப்பு காட்டும். அதேபோல், கடைசி இடத்தில் உள்ள வங்கதேசம் இந்த போட்டியில் ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்கும். இருப்பினும், டாஸுக்கு பிறகு மழை குறுக்கிட்டதால், ஆட்டம் தாமதமாகியுள்ளது.

கரீபியன் கடலில் உருவாகியுள்ள ‘மெலிசா’ புயல் அதி பயங்கர ‘கேட்டகரி 3’ புயலாக மாறியுள்ளது. இது ஜமைக்கா மற்றும் ஹைதி பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தும் என USA வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஏற்கெனவே மெலிசா புயலில் சிக்கி, ஹைதியில் 3 பேரும், டொமினிகன் குடியரசில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த புயல் மேலும் வலுப்பெற்று, செவ்வாய்க்கிழமை ஜமைக்காவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஹார் போன்ற பல மாநிலங்களில் SIR-ஐ பயன்படுத்தி லட்சக்கணக்கானவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாக MP கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். இதுபோல தமிழ்நாட்டில் நடக்க கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிஹார் தேர்தலில் நீதியும், ஜனநாயகமும் வெல்ல வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது என கனிமொழி தெரிவித்துள்ளார்.

கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்காமல், அவர்களை மாமல்லபுரம் வரவழைத்து விஜய் நாளை ஆறுதல் தெரிவிக்க உள்ளார். இது கரூர் துயரம் தொடர்பான சிபிஐ விசாரணையில் தவெக தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அக்கட்சியின் வழக்கறிஞர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. பிற நிர்வாகிகளும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது விஜய் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டுக் கல்விக்காக இந்திய மாணவர்கள் செலவிடும் தொகை கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத வகையில் சரிவை கண்டுள்ளது. 2024 ஆகஸ்டில் ₹3,688 கோடியாக இருந்த தொகை 24% சரிந்து, 2025 ஆகஸ்டில் ₹2,800 கோடியாக குறைந்ததுள்ளது. இதனால், இந்தியர்கள் மத்தியில் வெளிநாட்டு படிப்பின் மீதான மோகம் குறைந்து வருவதாகவும், உள்நாட்டில் கல்வியின் தரம் அதிகரித்திருப்பதை இதை காட்டுகிறது எனவும் RBI தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.