India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜம்மு – காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜம்மு–ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால், பல கிமீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மழை விடாமல் பெய்து வருவதால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நீடிக்கும் என்பதால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் CSK, SRH அணிகள் மோதும் போட்டி ஏப். 25-ல் நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று தொடங்க உள்ளது. காலை 10.15 மணியில் இருந்து www.chennaisuperkings.com என்ற இணையதளத்தின் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். இந்த சீசனில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 5-வது போட்டி இதுவாகும். இதிலாவது CSK வெல்லுமா?
பல்கலை.களின் வேந்தராக கவர்னர் ஆர்.என்.ரவியே தொடர்கிறார் என கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது. உதகையில் ஏப். 25, 26-ல் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறும் என்றும், துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டும் அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, கவர்னரை கண்டித்த உச்சநீதிமன்றம், முதல்வரே பல்கலைக்கழக வேந்தராகும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திமுகவை மட்டுமே நம்பி விசிக இல்லை என திருமாவளவன் கூறிய நிலையில், கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என CM ஸ்டாலின் தெரிவித்திருந்தார். தற்போது, TN அரசின் காலி பணியிடங்களை நிரப்பவும், மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் தொடர்பான திமுகவின் தேர்தல் வாக்குறுதியை விரைந்து நிறைவேற்றவும் திருமா வலியுறுத்தியுள்ளார். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற திமுகவிற்கு அவர் அழுத்தம் கொடுப்பதில் அரசியல் கணக்கு இருக்குமா?
சராசரிக்கும் குறைவான ஸ்கோர் எடுத்ததே MI உடனான தோல்விக்கு காரணம் என CSK கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். லீக் சுற்றில் மீதமுள்ள 6 போட்டிகளிலும் வென்று பிளே ஆஃப்-க்கு முன்னேற முயற்சிப்போம் என தெரிவித்த அவர், ஒருவேளை வெற்றி பெறவில்லை என்றால் அடுத்த சீசனுக்காக அணியை கட்டமைக்கும் பணியை தொடங்குவேன் எனக் குறிப்பிட்டுள்ளார். 8 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே CSK வென்றுள்ளது.
காசா மீதான தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தி இருக்கும் இஸ்ரேல், போரிடுவதை தவிர வேறு வழியில்லை எனத் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 51,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஹமாஸ் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படும் வரை போரை முடிவுக்கு வர முடியாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். காசா மக்களுக்கு என்றுதான் விடிவுகாலம் வருமோ?
நாசாவின் மூத்த வீரர் டான் பெட்டிட் தனது 70-வது பிறந்த நாளை கொண்டாட விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பியுள்ளார். ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் மூலம் கடந்தாண்டு அக்டோபரில் அவர் விண்வெளிக்குச் சென்றார். சக ரஷ்ய வீரர்களுடன் விண்கலத்தில் பூமி திரும்பிய அவர், கஜகஸ்தான் அருகே கடலில் பத்திரமாக தரையிறங்கினார். விமானம் மூலம் அவரை அமெரிக்கா அழைத்து வர நாசா திட்டமிட்டுள்ளது.
▶ தேசிய குடிமை பணிகள் தினம். ▶ 1926 – மறைந்த இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள். ▶ 1964 – புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள். ▶ நாடக, திரைப்பட நடிகர் டி.ஆர். மகாலிங்கம் நினைவு நாள். ▶ 1944 – பிரான்சில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்த நாள். ▶ 1987 – இலங்கை தலைநகர் கொழும்புவில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் 106 பேர் உயிரிழப்பு.
அஜித் நடிப்பில் வெளியாகிய குட் பேட் அக்லி படம் வசூலில் சக்கைப்போடு போட்டு வருகிறது. உலகளவில் இப்படம் சுமார் 250 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், படத்தின் OTT ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மே இரண்டாம் வாரத்தில் படத்தை OTT-ல் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். ஃபைனலில் ஸ்பெயின் வீரர் அல்காரஸை அவர் எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற ஆட்டத்தில், 7-6, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று ஹோல்ஜர் ரூனே வாகை சூடினார். 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.