India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்று CM ஸ்டாலின் மீண்டும் முழங்கியுள்ளார். அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் தான். கருணாநிதி ஆட்சியின்போது இருந்ததைவிட, தற்போது மோசமான சூழ்நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது என வேதனை தெரிவித்த அவர், மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் தெளிவான முயற்சிகளுக்காக மத்திய அரசு ஆளுநர்களை பயன்படுத்துவதாக குற்றம் குற்றம் சாட்டினார்.
கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் KKR Vs GT அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் இருக்கும் KKR-க்கு இப்போட்டி மிக முக்கியமானது. சொந்த மைதானத்தில் போட்டி நடைபெறவிருப்பதால், அந்த அணி வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது. ஆனால், பேட்டிங், பீல்டிங், பவுலிங் என அனைத்திலும் GT வலுவாக இருப்பதால், இன்றைய போட்டி பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது.
அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் கட்டாயம் என்று TNSTC அறிவித்துள்ளது. ஊழியர்கள் சிலர் சரியான நேரத்தில் பணிக்கு வருவதில்லை. இதை கட்டுப்படுத்தும் நோக்கில், டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்டோர் பயோமெட்ரிக் மூலமாகவே வருகையை பதிவு செய்ய வேண்டும்; இதை கணக்கிட்டு மட்டுமே சம்பளம் வழங்கப்படும் என கூறியுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி (DA) உயர்வுக்கான அரியர் தொகையை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மே மாதம் வழங்கப்பட உள்ள சம்பளத்தில் இந்த அரியர் பணம் கிடைக்கும். உதாரணமாக உங்கள் அடிப்படை ஊதியம் ₹35,400 எனில் 4 மாதங்கள்(ஜன. – ஏப்.) 4% நிலுவைத் தொகை ₹5,664 உங்களுக்கு கிடைக்கும். நாடு முழுவதும் சுமார் 9.59 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் இதன் மூலம் பலனடைவார்கள்.
ஐபிஎல் தொடரில் CSK அணி மோசமாக தோல்வி அடைந்த முதல் 3 போட்டிகளும் MI அணியுடன்தான். 2020-ல் CSK-வை 10 விக்கெட் வித்தியாசத்தில் MI அணி வீழ்த்தியுள்ளது. 2008, 2025 (நேற்று) போட்டிகளில் 9 விக்கெட் வித்தியாசத்தில் MI அணி வெற்றி பெற்றிருக்கிறது. அதேநேரத்தில், கடைசியாக இரு அணிகளும் மோதிய 8 போட்டிகளில் CSK அணி 6 முறை வாகை சூடியுள்ளது.
மகப்பேறு கால உயிரிழப்புகள் ஆண்டுக்கு 45லிருந்து 39ஆக குறைந்ததாக TN பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்கு பிந்தைய 47 நாள்களுக்குள், பெண்களுக்கு ஏற்படும் தீவிர பாதிப்புகளுக்கு உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. குறிப்பாக, கர்ப்பிணி தொடர் கண்காணிப்பு, பிரசவத்திற்கான மருத்துவமனையை முன் கூட்டியே திட்டமிடல் போன்றவற்றால் கர்ப்ப கால உயிரிழப்பு குறைந்துள்ளது.
தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் நகை உற்பத்தி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பைக்கு அடுத்தப்படியாக நகை உற்பத்தியில் ஜொலிக்கும் கோவை நகரில் சுமார் 1,00,000 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நகைத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் அவர்கள் தற்போது தங்க நகைக்கு பதிலாக சில்வர், ஐம்பொன், கவரிங் நகைகளின் ஆர்டர்களே அதிகம் வருவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
3 நாள்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. காலை 9:30 மணிக்கு பேரவைக் கூடியதும் கேள்வி நேரம் நடைபெறவுள்ளது. அதன்பிறகு மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கைகள் மீது நடைபெறும் விவாதங்களுக்கு அத்துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.
அடுத்த 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என IMD எச்சரித்துள்ளது. வட தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், வெளியில் செல்வோருக்கு அசவுகரியம் ஏற்படக்கூடும். எனவே, மதியம் 11 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அதிகளவில் தண்ணீர், மோர், இளநீர் போன்றவற்றை குடிக்க வேண்டும்.
திமுக கூட்டணியில் பாமக இணைய உள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். திமுக கூட்டணியில் தற்போதைய நிலையே தொடரும் என்று விளக்கியுள்ளதன் மூலம் புதியவர்களுக்கு இடமில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் கருத்து கூறி வருகின்றனர். இதனால் பாமக, அதிமுக கூட்டணியில் இணையவே அதிக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?
Sorry, no posts matched your criteria.