News April 20, 2025

தலித் இளைஞர் மீது சிறுநீர் கழித்த கொடூரம்

image

ராஜஸ்தானில் 19 வயது தலித் இளைஞர் மீது இரண்டு பேர் சிறுநீர் கழித்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞர் தனியே வெளியே சென்றபோது வழிமறித்த இரண்டு பேர், இவரின் ஆடைகளை கழற்ற சொல்லி பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபட்டதாக புகாரில் பதிவாகியிருக்கிறது. அப்போது, அவர்கள் ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாகவும் கடுமையாக தாக்கியதாகவும் பாதிக்கப்பட்டவர் கூறியிருக்கிறார்.

News April 20, 2025

அதிரடி பாதைக்கு திரும்பிய துபே.. 50 அடித்து அசத்தல்

image

கடந்த சில ஆட்டங்களாக தடுமாறி வந்த ஷிவம் துபே மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தனது அதிரடி பாதைக்கு திரும்பியுள்ளார். முதலில் நிதானமாக ஆட்டத்தை தொடங்கிய அவர் பின் அதிரடி காட்ட தொடங்கினார். 31 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் அரைசதத்தை துபே பதிவு செய்தார். தோல்விகளால் துவண்டு போயிருந்த சென்னை ரசிகர்களுக்கு தூபே தற்போது அறுதல் கொடுத்துள்ளார்.

News April 20, 2025

2025-இல் அடுத்தடுத்து உயிரிழந்த ஹாலிவுட் நடிகர்கள்

image

2025-ம் ஆண்டு ஹாலிவுட் உலகிற்கு பெரும் துயரமாகி உள்ளது. பல்வேறு நடிகர், நடிகைகள் அடுத்தடுத்து கடந்த மூன்றரை மாதங்களில் உயிரிழந்துள்ளனர். அவர்களில் டெனிஸ் தி மெனேஸ் படத்தில் நடித்த ஜே நார்த், பேட்மேன் ஃபாரெவர் பட நடிகர் வால் கில்மர், ஸ்டார் வார்ஸ் நடிகை பேட் மலோன், ஹாரிபார்ட்டர் பட நடிகர் சைமன் பிஸர் பெக்கர், நடிகை பமீலா பாக், ஆஸ்கர் விருது நடிகர் ஜீன் ஹேக்மேன் உள்ளிட்டோரும் அடங்குவர்.

News April 20, 2025

விராத் கோலி படைத்த மிகப்பெரிய சாதனை

image

IPL வரலாற்றில் அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை விராத் கோலி படைத்துள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது 67-வது அரைசதத்தை ( 8 சதங்கள்) விராத் பதிவுசெய்தார். இந்த பட்டியலில் 66 சதங்களுடன் டேவிட் வார்னர் 2-வது இடத்திலும், 53 சதங்களுடன் ஷிகர் தவான் 3-வது இடத்திலும் உள்ளனர். IPL-லில் அதிக சதம்(8) அடித்தவரும் விராட் கோலிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 20, 2025

பெட்ரூமில் கணவன், மனைவி இப்படி செய்யுங்க

image

கணவன், மனைவி பந்தத்தில் படுக்கை அறை முக்கிய பங்கு வகிக்கிறது. அன்றாடம் பரஸ்பரம் இருவருக்கும் இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள், பிரச்னை குறித்து பெட்ரூமில் இருவரும் விவாதித்து தீர்வு காண முடியும். மறுநாளில் இருக்கும் செயல் திட்டங்கள், செல்ல வேண்டிய பயணம் குறித்தும் விவாதிக்கலாம். இதுபோல செயல்பட்டால், கணவன், மனைவி வாழ்க்கையில் பிரச்னை என்பதே இருக்காது. மகிழ்ச்சி தாண்டவமாடும். SHARE IT.

News April 20, 2025

முட்டை விலை கடும் சரிவு

image

நாமக்கல்லில் முட்டை பண்ணை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்து ₹3.90-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெயில் தாக்கத்தால் முட்டை சேதமடைவதால், விலை குறைந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் ₹4.90-ஆக இருந்த முட்டையின் விலை மளமளவென சரிந்து ₹4-க்கு கீழ் சென்றுள்ளது. கோடைக்காலம் முடியும் வரை முட்டை விலை குறைவாகவே இருக்கும் என்று நாமக்கல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News April 20, 2025

உச்சம் பெற்ற சுக்ரன்: 5 ராசியினருக்கு அதிர்ஷ்டம்

image

மீன ராசியில் உச்ச பலன் தரக்கூடியவர் சுக்கிர பகவான், கடந்த 13ம் தேதி முன்னோக்கி நகர்ந்தார். இதனால் ரிஷபம், கடகம், விருச்சிகம், தனுசு, மகரம் ஆகிய 5 ராசியினருக்கு வியாபாரம், தொழிலில் பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணியிடத்தில் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். கடினமான நேரத்தில் தந்தை, மூத்த நபர்களின் ஆலோசனை கிடைக்கும். காதல் வாழ்க்கையில் உறவு மேம்படும். பயணங்களால் லாபம் கிடைக்கும்.

News April 20, 2025

தமிழகத்தில் வெயில் கொளுத்தியது

image

தமிழகத்தில் இன்று இரண்டு இடங்களில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை கடந்து பதிவானது. வேலூரில் அதிகபட்சமாக 40.2 டிகிரி செல்சியஸும், மதுரையில் 40 டிகிரி செல்சியஸும் வெப்பம் பதிவானது. அடுத்தபடியாக, கரூர் பரமத்தி 39.5 டிகிரி, ஈரோடு 39.4 டிகிரி, திருச்சி 39.1 டிகிரி, திருத்தணி 38.9 டிகிரி, சென்னை 38 டிகிரி என வெயில் கொளுத்தியது. ஊட்டியில் அதிகபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாக பதிவானது.

News April 20, 2025

கூகுள் சிஇஓ-வை வியக்க வைத்த இளம் வீரர்

image

14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி ஒரே போட்டியிலேயே ஸ்டாராக உருவெடுத்துள்ளார். சிக்ஸருடன் தனது கால்தடத்தை IPL-லில் பதித்த வைபவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவரது ஆட்டத்தை பார்த்து கூகுள் சிஇஓ – சுந்தர் பிச்சையே மெய்சிலிர்த்து உள்ளார். 8-ம் வகுப்பு மாணவனின் ஆட்டத்தை காண தூக்கத்தில் இருந்து எழுந்ததாக சுந்தர் பிச்சை X-ல் பதிவிட்டுள்ளார். என்ன அருமையான தொடக்கம் எனவும் சுந்தர் குறிப்பிட்டுள்ளார்.

News April 20, 2025

டிரம்பை எதிர்க்கும் இந்திய, சீன மாணவர்கள்

image

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை மற்றும் குடியேற்ற அதிகாரிகளுக்கு எதிராக 3 இந்திய மாணவர்கள், 2 சீன மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். சர்வதேச மாணவர்களுக்கான F-1 மாணவர் அந்தஸ்தை அரசு சட்டவிரோதமாக ரத்து செய்வதால் தங்கள் கல்வி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். டிரம்ப் அதிபராக பதவியேற்றது முதல், அந்நாட்டில் குடியேற்ற சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

error: Content is protected !!