India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கணினி நெட்வொர்க் மூலம் வேலை செய்ய வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் நாணயத்தை கிரிப்டோகரன்சி என அழைக்கின்றனர். பிட்காயின், எத்தரியம் உட்பட 4,000 வகையான Virtual Coins சந்தையில் இருக்கின்றன. இதனை டிஜிட்டல் பரிவர்த்தனைகளின்போது, பயன்படுத்த முடியும். பிற நாணயங்கள் போல Cryptocurrency-ஐ எந்த சர்வதேச அமைப்போ, அரசோ, வங்கியோ கட்டுப்படுத்துவதில்லை. இவற்றில் முதலீடு செய்வது அதிக அபாயம் உள்ளதாகக் கருதப்படுகிறது.
ஐ.நாவுக்கான ஈரான் தூதர் அமீர் சயீத்தை, தொழிலதிபர் எலான் மஸ்க் சந்தித்ததாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. திங்களன்று நியூயார்க்கில் ரகசிய இடத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகள் இடையே பதற்றத்தை தணிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஈரானின் அணுசக்தித் திட்டத்தை விரும்பாத அமெரிக்கா, அதன் மீது பல ஆண்டுகளாக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல் நடிப்பில் நேற்று வெளியான ‘கங்குவா’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. குறிப்பாக இப்படத்தில் சத்தம் என்ற பெயரில் இரைச்சல் அதிகமாக இருப்பதாக பலரும் விமர்சித்திருந்தனர். இந்நிலையில், Volumeஐ சற்று குறைக்க சொல்லி, தியேட்டர் உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளதாக புரொடியூசர் ஞானவேல் ராஜா கூறியுள்ளார். இந்த படத்தை பார்த்துவிட்டீர்களா? உங்க அனுபவம் எப்படி?
PM மோடி பயணிக்க இருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு டெல்லிக்கு மோடி புறப்பட இருந்தார். இந்நிலையில், அவரின் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் தியோகர் விமான நிலையத்தில் அது நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நடிகை மீனாட்சி சவுத்ரியும், தெலுங்கு நடிகர் சுஷாந்தும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் ஆண்டனியின் கொலை படம் மூலம் அறிமுகமான மீனாட்சி, விஜய்யின் கோட், சிங்கப்பூர் சலூன், துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் சுஷாந்துக்கும் அவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாகவும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்வீடன் நாட்டின் அமைச்சர் பவுலினா பிராண்ட்பெர்க் தான் இருக்கும் இடங்களில் வாழைப்பழம் இருக்கக் கூடாது எனக் கட்டுப்பாடு விதித்துள்ளார். இவர் வித்தியாசமானவர். BananaPhobia என்ற இந்த பயம் வாழைப்பழத்தின் வாசனையோ, அதன் தோற்றமோ இவருக்கு Anxiety, குமட்டல் போன்ற பாதிப்புகளை கொடுக்குமாம். இந்த Phobia விசித்திரமானது என்றாலும், வல்லுநர்கள் இது குழந்தை பருவத்திலேயே உருவாகி இருக்கலாம் என்கிறார்கள்.
Work Life Balance என்பதில் தனக்கு துளியும் நம்பிக்கை இல்லையென இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார். வாரத்தில் 6 நாட்களாக இருந்த பணி நாள் 5 நாட்களாகக் குறைக்கப்பட்டது ஏமாற்றம் அளித்ததாகவும் கூறியுள்ளார். மேலும், PM மோடியை பின்பற்றி வாரத்திற்கு 100 மணி நேரம் பணியாற்றி அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். அவரது கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா-2 தி ரூல் படத்தில் நடிக்க அவருக்கு ரூ.300 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அவர் நடிகர் விஜய் மற்றும் ஷாருக்கானை பின்னுக்கு தள்ளி இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவரது சம்பளம் பல மடங்கு அதிகரித்துள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரச்னைகளை டிவி பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என சிலர் கடந்த காலத்தில் கூறினர். ஆனால் நான் பிரச்னைகளை எதிர்கொண்டு, தீர்த்து வைக்கிறேன் என EPSக்கு ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அதிமுக ஆட்சியில் நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில் எவ்வளவு முதலீடு வந்தது எனக்கூற முடியுமா? என கேள்வி எழுப்பிய அவர், மக்கள் எனக்கு அளிக்கும் ஆதரவைக் கண்டு ஊழல் ஆட்சி நடத்திய EPSக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் சாடினார்.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் சிசிச்சை பெறும் மக்கள் மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்ற அவர், மருத்துவர் பணியிடத்தை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.