India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பணவீக்கம் அதிகரிக்க 5 பொருட்களே காரணம் என மத்திய நிதித்துறை செயலாளர் துஹின் காந்த பாண்டே தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அரசு எவ்வளவு முயற்சித்தாலும் பணவீக்கம் அதிகரிக்கிறது என்றார். குறிப்பாக, தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, தங்கம், வெள்ளி ஆகியவை பணவீக்கத்திற்கு காரணம் எனக் கூறினார். மேலும், நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான காற்றை சமாளித்து, இந்தியா வளர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சக்திவாய்ந்த அரசியல்வாதி தலைவர்கள் 2024 பட்டியலில் உ.பி., CM யோகியை விட ஸ்டாலின் பின்னடைவை சந்தித்துள்ளார். டாப் 10 பட்டியலில் முதல் 5 இடங்களில் ராகுலை தவிர I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள் யாரும் இடம்பெறவில்லை. முதல் இடத்தில் மோடி, 2வது இடத்தில் மோகன் பகவத், 3வது இடத்தில் அமித் ஷா, 4வது ராகுல், 5வது இடத்தில் சந்திரபாபு, 7வது இடத்தில் யோகி உள்ளனர். இதில் 8வது இடத்தில் தான் ஸ்டாலின் இருக்கிறார்.
ஜெட்டாவில் நவ. 24-25 தேதிகளில் நடைபெறும் ஐபிஎல் 2025 ஏலத்தில் இரண்டு செட்களாக மார்க்கீ வீரர்கள் இடம் பெறுவார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ரூ. 2 கோடியை அடிப்படை விலையாக கொண்ட இந்த பட்டியலில் ராகுல், பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், சிராஜ், உட்பட 6-9 வீரர்கள் இடம் பெறவுள்ளனர். இதற்கு முன்பு 2014, 2018 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மெகா ஏலத்தில் இதுபோன்று நடைமுறை இருந்தது குறிப்பிடத்தக்கது.
காலையில் எழுந்ததுமே பல் தேய்க்காமல் Bed காபி, டீ குடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. இப்பழக்கம் நல்லதல்ல எனக் கூறப்படுகிறது. டீ மற்றும் காபியில் காஃபின் இருப்பதால், வயிற்றில் அமிலத்தின் உற்பத்தியை இது அதிகரிக்கச் செய்யுமாம். அப்படியாகும் சூழலில், வயிற்று எரிச்சல், நெஞ்செரிச்சல் போன்றவற்றுடன் காஃபின் சிறுநீர் வருவதை அதிகரிப்பதால், உடலில் நீரின் அளவு குறையும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வந்தபிறகு கொங்கு மண்டலத்தில் பல்வேறு அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில், அதிமுகவை சேர்ந்த முக்கிய புள்ளிகள் உட்பட பலர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். புதிதாக கட்சியில் ஐக்கியமானவர்களுக்கு சால்வை அணிவித்து திமுக உறுப்பினர் அட்டைகளை வழங்கிய அவர், வார்டு வாரியாக தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
மண்டல கால பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. இதனால், பம்பை, சன்னிதானம், நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் பக்தர்களுக்கான வசதிகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. மாலை 5 மணிக்கு சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றி வைக்கிறார். இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும் நிலையில், நெய்யபிஷேகத்துடன் ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கும்.
டிரம்ப் மனைவி மெலானியா, வெள்ளை மாளிகையில் தொடர்ந்து வசிக்க மாட்டார் எனத் தகவல் வெளிவந்துள்ளது. இதற்கு ஒரு காரணமும் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக புளோரிடாவில் தனக்கான நட்பு வட்டாரத்தை உருவாகியுள்ள மெலானியா, அங்கேயே அதிக நேரத்தை செலவிட விரும்புகிறார். இதன் காரணமாகவே இவர், அம்மாகாணத்தில் தொடர்ந்து வசிக்க விரும்புவதால், வெள்ளை மாளிகையில் அதிக நேரம் இருக்க மாட்டார் எனக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த 1 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை. திருவள்ளூர். செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்கள் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான கடைசி T20 போட்டி, இன்று இரவு 8.30க்கு தொடங்குகிறது. SAவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள IND அணி, 4 T20 போட்டிகளில் விளையாடுகிறது. இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளில், 2இல் IND அணியும், 1இல் SA அணியும் வென்றுள்ளன. இதனால் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. SKYயின் இளம்படை தொடரை வெல்லுமா? Cmt HERE.
55ஆவது சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் நவம்பர் 20 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், மாதவன் புதிதாக நடித்துள்ள “ஹிஸாப் பராபர்” என்ற படமும் திரையிடப்பட உள்ளது. இதுகுறித்து பேசிய அவர், ”இந்தப் படம் ஊழலுக்கு எதிரான போராட்டம் மட்டும் அல்ல. நீதி என்பது எளிதாக கிடைத்துவிடாது என்பதை புரிந்துகொள்ள வைக்கும்” என்றார். நவ.26 மாலை 5:45க்கு ‘ஹிஸாப் பராபர்’ படம் ஒளிபரப்பப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.