India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நக்கீரன் கோபாலின் நாக்கை அறுப்பேன் என பேசிய அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்ஜாமீன் மனு விசாரணையின் போது, ஓம்கார் பாலாஜி மன்னிப்பு கோரினார். ஆனால், மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன் என திருத்தி, மனுத்தாக்கல் செய்யுமாறு நீதிபதி அறிவுறுத்தினார். ஆனால் இதற்கான அவகாசத்தை நீதிபதி தர மறுத்தார். இதனால் அவர் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
சென்னையில் டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே டாக்டர்கள், நர்சுகள் தாக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தும், திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் சாடியுள்ளார். சட்டம் ஒழுங்கை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஸ்டாலின், ஒவ்வொரு முறையும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறுகிறார். ஆனால் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் கூறியுள்ளார்.
ஈஷா யோகா மையத்துக்கு எதிராக செய்தி வெளியிடும் நக்கீரன் கோபாலின் நாக்கை அறுப்பேன் என அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி அண்மையில் பேசியிருந்தார். இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் அவரிடம் விசாரித்தனர். இந்நிலையில், அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு, சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நேரில் ஆஜரான ஓம்கார் பாலாஜி, தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார்.
மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.
இந்தியாவில் <<14597364>>கருவுறுதல்<<>> விகிதம் குறையும்போது மக்களின் வாழ்க்கை தரம் உயரும் என நிபுணர்கள் கூறுகின்றனர். உணவு, குடிநீர், மின்சாரம் உள்ளிட்டவற்றின் தேவை குறையும். சுகாதாரம், கல்வி மற்றும் சமூக சேவை மேம்படும். அதேநேரம், சமுதாயத்தில் இளைஞர்களின் விகிதம் குறையும். இளம் தொழிலாளர்கள் இல்லாததால் பொருளாதார வளர்ச்சி வெகுவாக சரியும் என்கிறார்கள். இந்தியாவின் பெரிய பலம் இளைஞர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்து வருவதால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்து, 78,071 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டி 200 புள்ளிகள் சரிந்து, 23,686 புள்ளிகளுடன் வர்த்தகமாகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து விற்று வருவதால், சந்தை சரிவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இன்று 10 மணிக்கு <<14597683>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) பாண்டனல் 2) Border Security Force 3) Dynamometer 4) சுரேகா யாதவ் 5)ஃபார்மிக் அமிலம் 6) நாட்டுப்புறவியல் 7) ராஜநாகம் 8) ஆலிவ் இலை. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களைப் பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என கீழே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
தாக்குதலுக்கு உள்ளான டாக்டர் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தலைப் பகுதியில் 4 இடங்களில் காயம் உள்ளதாகவும், தொடர்ந்து உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், 6 மாதங்களாக சிகிச்சையில் உள்ள தாயாருடன் வருபவர் என்பதால் சந்தேகம் எழவில்லை எனக் கூறிய அவர், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
‘அமரன்’ திரைப்படம் வெளியாகி 12 நாள்களில் ₹250 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன்மூலம், ₹250 கோடி பாக்ஸ் ஆஃபிஸில் இணைந்த 4ஆவது நடிகராக சிவகார்த்திகேயன் உருவெடுத்துள்ளார். முன்னதாக, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் ஆகியோர் மட்டுமே இந்த பட்டியலில் இருந்தனர். இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்த நிலையிலும், இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்புள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களிலும், நாளை 21 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும், தி.மலை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.