India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நார் தேய்த்து குளிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கும். நார் தேய்த்துக் குளிப்பது அழுக்கையும், இறந்த செல்களையும் நீக்க உதவுகிறது. ஆனால், குளியல் நாரை பயன்படுத்தியபின் சுத்தமாகவும், சூரிய ஒளிப் படும்படியும் வைக்க வேண்டும். இல்லையெனில், அதில் கிருமிகள் தங்கி சரும நோய்கள், அலர்ஜி பிரச்சனைகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். நீங்கள் குளியலுக்கு எந்த நார் பயன்படுத்துகிறீர்கள்?
➤கரீபியன் தீவு நாடான ஹைதியின் புதிய பிரதமராக அலிக்ஸ் டிடியர் ஃபில்ஸ்-ஐமே பதவியேற்றுள்ளார். ➤அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் ஐ.நா. தலைமையிலான காலநிலை மாற்ற மாநாடு நடைபெற்றது. ➤பெண்ணின் திருமண வயதை 18இல் இருந்து 9 ஆக குறைக்க ஈராக் பார்லிமென்ட் முடிவு செய்துள்ளது. ➤லெபனானின் தஹியே பகுதியில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முகாம்கள் அழிக்கப்பட்டன.
பசுவின் உடலில் மும்மூர்த்திகளும், 33 கோடித் தேவர்களும், 48,000 ரிஷிகளும் வீற்றிருப்பதாக ஞான நூல்கள் கூறுகின்றன. பார் கடலில் இருந்து வெளிப்பட்ட சுரபி லட்சுமி என அழைக்கப்படும் கோமாதாவை சிரத்தையுடன் வணங்கினால் சாப – பாவ தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்கிறது விஷ்ணு புராணம். பசு & கன்றுக்கு திலகமிட்டு, அகத்திக்கீரை, கொடுத்து அஷ்டோத்திரம் பாடி வணங்கினால் சனியின் ஆதிக்கம், கர்மவினை தீரும் என்பது ஐதீகம்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். அதேபோல், காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
காலையில் எழுந்ததும், குறிப்பாக குளிர் காலத்தில் குதிகால் வலி & இறுக்கத்தால் பலர் அவதிப்படுவதைக் கண்டிருப்பீர்கள். இந்த கால் வலி ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று கீல்வாதமாகும். அதாவது யூரிக் அமிலத்தின் படிகங்களானவை படிந்து மூட்டுகளில் சிதைவை (தசைநார்கள் & திசுக்களில் ரத்த ஓட்டக் கோளாறும்) ஏற்படுத்துவதால் வலி உண்டாகும். வீக்கம், வலி பாதிப்புகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
AI தொழில்நுட்பத்துக்கு மாறுவதில் உலகளவில் இந்தியா முன்னிலையில் உள்ளதாக போஸ்டன் கன்சல்டிங் குழும தெரிவித்துள்ளது. இதுகுறித்த ஆய்வறிக்கையில், “ஃபின்டெக், சாஃப்ட்வேர், வங்கித் துறைகளின் செயல்பாடுகளில் AI பயன்பாடு அதிகரித்துள்ளது. 30% இந்திய நிறுவனங்கள் வளரும் தொழில்நுட்பத்திற்கு மாறுவதன் மூலம் தங்களின் மதிப்பை அதிகரிப்பதாக” கூறப்பட்டுள்ளது. AI செயல்பாட்டின் சர்வதேச சராசரி 26% ஆகும்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு தமிழக அரசு ஆணையம் அமைத்துள்ளதாகவும், அதிகாரிகள் விரைவில் வீடுவீடாக வரவுள்ளதாகவும் சோஷியல் மீடியாவில் ஒரு தகவல் உலா வருகிறது. இதனை மறுத்துள்ள அரசு, 2020ஆம் ஆண்டு முதல் சோஷியல் மீடியாவில் இந்த வதந்தி பரப்பப்பட்டு வருவதாக கூறியுள்ளது.
செல்ஃபோன்கள் அனைத்தும் மின்காந்த அலைகள் மூலம் இயங்குகின்றன. இந்த மின்காந்த அலைகள் தானாகவே பயணிக்கும், எதையும் சார்ந்து பயணிக்காது. குறிப்பாக இந்த அலைகள் எலெக்ட்ரான்ஸ்களின் ஓட்டத்தின் மூலமான மின்னல்களை ஒருபோதும் ஈர்க்காது. குறிப்பாக இதனால் ஃபோன்கள் மின்னல்களை ஈர்க்காது. செல்ஃபோன்களுக்கும் மின்னலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதே நேரம், இடி விழும்போது வெட்ட வெளியில் நின்றுகொண்டு ஃபோன் பேசாதீங்க!
சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் விடிய, விடிய கனமழை வெளுத்து வாங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதால், தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. இதனிடையே 12 மாவட்டங்களில் இன்று மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் மாவட்டத்தில் மழை பெய்ததா? கமெண்ட் Here.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 43 தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 AMக்கு தொடங்கி 6 PM உடன் நிறைவடையும். முதற்கட்ட தேர்தலில் 1.37 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 2ஆம் கட்ட தேர்தல் நவ.20இல் நடைபெறவுள்ளது.
Sorry, no posts matched your criteria.