News November 13, 2024

கர்மவினை தீர்க்கும் கோமாதா வழிபாடு

image

பசுவின் உடலில் மும்மூர்த்திகளும், 33 கோடித் தேவர்களும், 48,000 ரிஷிகளும் வீற்றிருப்பதாக ஞான நூல்கள் கூறுகின்றன. பார் கடலில் இருந்து வெளிப்பட்ட சுரபி லட்சுமி என அழைக்கப்படும் கோமாதாவை சிரத்தையுடன் வணங்கினால் சாப – பாவ தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்கிறது விஷ்ணு புராணம். பசு & கன்றுக்கு திலகமிட்டு, அகத்திக்கீரை, கொடுத்து அஷ்டோத்திரம் பாடி வணங்கினால் சனியின் ஆதிக்கம், கர்மவினை தீரும் என்பது ஐதீகம்.

News November 13, 2024

BREAKING:முதல் மாவட்டமாக விடுமுறை அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். அதேபோல், காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News November 13, 2024

காலையில் எழுந்ததுமே பாதங்கள் வலிக்கிறதா?

image

காலையில் எழுந்ததும், குறிப்பாக குளிர் காலத்தில் குதிகால் வலி & இறுக்கத்தால் பலர் அவதிப்படுவதைக் கண்டிருப்பீர்கள். இந்த கால் வலி ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று கீல்வாதமாகும். அதாவது யூரிக் அமிலத்தின் படிகங்களானவை படிந்து மூட்டுகளில் சிதைவை (தசைநார்கள் & திசுக்களில் ரத்த ஓட்டக் கோளாறும்) ஏற்படுத்துவதால் வலி உண்டாகும். வீக்கம், வலி பாதிப்புகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

News November 13, 2024

AIக்கு மாறுவதில் இந்தியா தான் டாப்பு!

image

AI தொழில்நுட்பத்துக்கு மாறுவதில் உலகளவில் இந்தியா முன்னிலையில் உள்ளதாக போஸ்டன் கன்சல்டிங் குழும தெரிவித்துள்ளது. இதுகுறித்த ஆய்வறிக்கையில், “ஃபின்டெக், சாஃப்ட்வேர், வங்கித் துறைகளின் செயல்பாடுகளில் AI பயன்பாடு அதிகரித்துள்ளது. 30% இந்திய நிறுவனங்கள் வளரும் தொழில்நுட்பத்திற்கு மாறுவதன் மூலம் தங்களின் மதிப்பை அதிகரிப்பதாக” கூறப்பட்டுள்ளது. AI செயல்பாட்டின் சர்வதேச சராசரி 26% ஆகும்.

News November 13, 2024

சாதிவாரி கணக்கெடுப்பு: தமிழக அரசு விளக்கம்

image

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு தமிழக அரசு ஆணையம் அமைத்துள்ளதாகவும், அதிகாரிகள் விரைவில் வீடுவீடாக வரவுள்ளதாகவும் சோஷியல் மீடியாவில் ஒரு தகவல் உலா வருகிறது. இதனை மறுத்துள்ள அரசு, 2020ஆம் ஆண்டு முதல் சோஷியல் மீடியாவில் இந்த வதந்தி பரப்பப்பட்டு வருவதாக கூறியுள்ளது.

News November 13, 2024

இடி மின்னல் விழும்போது கைபேசி பயன்படுத்தலாமா?

image

செல்ஃபோன்கள் அனைத்தும் மின்காந்த அலைகள் மூலம் இயங்குகின்றன. இந்த மின்காந்த அலைகள் தானாகவே பயணிக்கும், எதையும் சார்ந்து பயணிக்காது. குறிப்பாக இந்த அலைகள் எலெக்ட்ரான்ஸ்களின் ஓட்டத்தின் மூலமான மின்னல்களை ஒருபோதும் ஈர்க்காது. குறிப்பாக இதனால் ஃபோன்கள் மின்னல்களை ஈர்க்காது. செல்ஃபோன்களுக்கும் மின்னலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதே நேரம், இடி விழும்போது வெட்ட வெளியில் நின்றுகொண்டு ஃபோன் பேசாதீங்க!

News November 13, 2024

விடிய, விடிய வெளுத்த கனமழை

image

சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் விடிய, விடிய கனமழை வெளுத்து வாங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதால், தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. இதனிடையே 12 மாவட்டங்களில் இன்று மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் மாவட்டத்தில் மழை பெய்ததா? கமெண்ட் Here.

News November 13, 2024

7 AMக்கு தொடங்குகிறது வாக்குப்பதிவு

image

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 43 தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 AMக்கு தொடங்கி 6 PM உடன் நிறைவடையும். முதற்கட்ட தேர்தலில் 1.37 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 2ஆம் கட்ட தேர்தல் நவ.20இல் நடைபெறவுள்ளது.

News November 13, 2024

நுழைவு, தகுதித் தேர்வுகளில் சீர்த்திருத்தம்

image

NEET, CUET உள்பட NTA நடத்தும் அனைத்து நுழைவு மற்றும் தகுதித் தேர்வுகளிலும், 2025 ஜனவரி முதல் சீர்த்திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆள் மாறாட்டம், முறைகேடு ஆகியவற்றால் தகுதியான நபர்கள் போட்டித் தேர்வில் தோல்வியை சந்திக்கின்றனர். இதனை தடுக்க இஸ்ரோ Ex தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரைப்படி சீர்த்திருத்தம் செய்யப்படவுள்ளது.

News November 13, 2024

நடைபயிற்சியும்… நன்மைகளும்…

image

*ஒருமுறை நடைபயிற்சி செய்வதால், உடலில் உள்ள கெட்ட சர்க்கரை 40 mg குறையும்.
*சரியான நடைபயிற்சி தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கும்.
*முதுகு வலிக்கு முதன்மை நிவாரணம் நடைபயிற்சி.
*தொப்பை, உடல் பருமனைக் குறைப்பதில் நடைபயிற்சிக்கு முக்கியப் பங்குண்டு.
*முழங்கால் வலியால் அவதிப்படுவோர் வாரம் 3 மணி நேரம் நடைபயிற்சி செய்தால் நிவாரணம் கிடைக்கும்.

error: Content is protected !!