News November 12, 2024

Breaking : அணியின் கேப்டனாகும் ரிங்கு சிங்?

image

அதிரடி ஃபினிஷராக அறியப்படும் ரிங்கு சிங் KKR அணியின் கேப்டனாகிறார் என தகவல் வெளிவந்துள்ளது. Auction’க்கு முன்னர், கோப்பையை வென்று கொடுத்த கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்தது. புதிய கேப்டனை தேர்ந்தெடுக்கும் தேவை உள்ள நிலையில், ரூ.13 கோடிக்கு KKR அணியால் தக்கவைக்கப்பட்டுள்ள ரிங்கு சிங் கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. ரிங்கு சரியா? KKR அணிக்கு உங்களுடைய கேப்டன் சாய்ஸ் யார்..?

News November 12, 2024

AI உதவியுடன் மனிதனைக் கண்காணிக்கும் நுண்ணுயிர்கள்

image

தற்போதைய காலகட்டத்தில், கேமராவின் கண்களிலிருந்து தப்புவதே கடினம். அப்படி இருக்க, ஒருவரின் இருப்பிடத்தைக் கண்டறிய, அவர்களின் உடலில் உள்ள நுண்ணுயிரை பயன்படுத்தும் AI டெக்னாலஜியை கண்டுபிடித்துள்ளனர் ஸ்வீடன் ஆராய்ச்சியாளர்கள். Microbiome Geographic Population Structure எனப்படும் இது ஒருவரின் இருப்பிடத்தைத் துல்லியமாகக் காட்டும் வல்லமை கொண்டதாம். இனி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.

News November 12, 2024

எச்சரிக்கை: OTP வராமலே ₹4 லட்சம் மோசடி

image

கர்நாடகாவின் உடுப்பி நகரில் ஆன்லைனில் வாடகை கார் புக் செய்தவரிடம் ₹4.1 லட்சம் திருடப்பட்டுள்ளது. கூகுளில் காட்டிய Shakti Car Rentals லிங்க்கை க்ளிக் செய்ய, அவருக்கு ஒரு போன் வந்துள்ளது. அதில் பேசியவர், முதலில் பதிவுக்கட்டணம் ₹150 செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து credit, debit cards மூலம் அவர் பணம் செலுத்த முயன்றபோது OTP வரவில்லை. பிறகு தான் அவர் ₹4.1 லட்சம் இழந்தது தெரிய வந்துள்ளது.

News November 12, 2024

‘தல போல வருமா’

image

அஜித் இரட்டை வேடத்தில் நடித்து கடந்த 2004 நவம்பர் 12ஆம் தேதி வெளியான ‘அட்டகாசம்’ படம் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. படம் முழுக்க வெள்ளை வேஷ்டி சட்டையில் தோன்றி கலக்கியிருப்பார் அஜித். ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக இது உள்ளது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற ‘தல போல வருமா’, ‘தல தீபாவளி’ பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இப்படத்தில் உங்களுக்கு பிடித்த காட்சி எது?

News November 12, 2024

மீண்டும் களத்திற்கு வரும் ஷமி

image

ரஞ்சி டிராபி தொடரில் வங்காள அணிக்காக ஷமி விளையாட உள்ளார். ம.பி அணிக்கு எதிரான நாளைய போட்டியில் அவர் களமிறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக கடந்த ஓராண்டாக அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. தேசிய கிரிக்கெட் அகாடமி தற்போது அவருக்கு ஃபிட்னஸ் சான்றிதழ் வழங்கியுள்ளது. ஆஸி.,-க்கு எதிரான டெஸ்ட் தொடர் விரைவில் நடைபெற உள்ளதால், ஷமியின் செயல்பாடு உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

News November 12, 2024

பாஜகவினரை நாயுடன் ஒப்பிட்ட காங்., தலைவர்

image

மகாராஷ்டிரா காங்., தலைவர் நானா படோல், பாஜகவினரை நாயுடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் பாஜகவை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது எனவும், பாஜகவினர் தங்களை கடவுள் போல் நினைத்து கொள்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக மாநில துணைத்தலைவர் கிரித் சோமையா, வரும் சட்டசபைத் தேர்தலில் தோல்வி உறுதி என்ற விரக்தியில் அவர் இப்படி பேசுவதாக கூறியுள்ளார்.

News November 12, 2024

தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பொறுப்பேற்பு

image

தமிழ்நாட்டின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் பொறுப்பேற்றார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அர்ச்சனா பட்நாயக், 1974ஆம் ஆண்டு பிறந்தார். 2002ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற அவர், தமிழகத்தில் பணியாற்றி வந்தார். கடைசியாக சிறு, குறு, நடுத்தர தொழில்துறை செயலாளராக பணியாற்றிய அவர், தற்போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி என்ற முக்கிய பொறுப்பை ஏற்றுள்ளார்.

News November 12, 2024

நாளை கடைசி: ரப்பர் கழகத்தில் வேலை!

image

ரப்பர் உற்பத்தி தொழிற்சாலையில் காலியாக உள்ள 50 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (நவ.13) கடைசி நாளாகும். Young Professionals பொறுப்பில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: UG டிகிரி (Agri, Hortic, Forestry). வயது : 20-30. உதவித்தொகை: ₹40,000. தேர்வு முறை: எழுத்து & நேர்முகத் தேர்வு. விண்ணப்பிக்க மற்றும் கூடுதல் விவரங்களுக்கு <>https://rubberboard.gov.in/public<<>> இணையதளத்தை அணுகவும்.

News November 12, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் மழை கொட்டும்

image

இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ள 18 மாவட்டங்கள் பட்டியலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூரில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தூத்துக்குடி, குமரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணித்துள்ளது.

News November 12, 2024

நடப்பு நிதியாண்டில் வருவாயில் முந்தும் மாநிலங்கள்?

image

இந்தியா 2030க்குள் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக வளரும் குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறது. MoSPI வெளியிட்ட தரவுகளின்படி, FY24 காலாண்டில் நாட்டின் GDP 8.2% அதிகரித்து ரூ.47.24 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இதில், ரூ.42.67 லட்சம் கோடி வருவாயுடன் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், ரூ.31.55 லட்சம் கோடி வருவாயுடன் தமிழகம் 2வது இடத்திலும் உள்ளது. ரூ.28.09 லட்சம் கோடியுடன் கர்நாடகா 3வது இடத்தில் உள்ளது.

error: Content is protected !!