News November 12, 2024

பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்.. TN அரசு உத்தரவு

image

ஐப்பசி மாத சுபமுகூர்த்த தினங்களான வருகிற 14, 15ஆம் தேதிகளில் பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன் வழங்க வணிகவரி, பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகத்தில் 100-க்கு பதில் 150 முன்பதிவு டோக்கன், 2 சார்பதிவாளர் உள்ள அலுவலகத்தில் 300, அதிக ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களில் 150 சாதாரண டோக்கன், 16 தட்கல் டோக்கன் வழங்க அவர் ஆணையிட்டுள்ளார். SHARE IT

News November 12, 2024

ஐபிஎல் ஏலம் குறித்து மனம் திறந்த தீபக் சாகர்!

image

IPL மெகா ஏலம் குறித்து தீபக் சாகர் மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர், ’கடைசியாக நடைபெற்ற மெகா ஏலத்தில் CSK அணி என்னை தக்க வைக்கவில்லை. ஆனால் ஏலத்தில் என்னை மீண்டும் எடுத்தனர். அதனால் 2025 IPL தொடருக்கான மெகா ஏலத்திலும் சிஎஸ்கே நிர்வாகம் என்னை ஏலம் எடுப்பார்கள் என தெரிவித்துள்ளார். பவர் ப்ளே ஸ்பெஷலிஸ்ட் ஆன தீபக் சாகரை CSK அணி மீண்டும் ஏலத்தில் எடுக்குமா? கமெண்ட்ல சொல்லுங்க.

News November 12, 2024

சென்னை மக்கள் 2 நாள் மட்டும் பொறுத்துக்குங்க: கே.என்.நேரு

image

மழை பெய்து ஏரிகள் நிரம்பினால்தான் குடிநீர் தேவை பூர்த்தியாகும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் தற்போது மழை பெய்யவேண்டிய தேவை உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பல இடங்களில் ஏரிகள் நீரின்றி வறண்டு கிடப்பதாக வேதனையை வெளிப்படுத்தினார். சென்னை மக்கள் 2 நாள் சிரமத்தை பார்க்கக் கூடாது என்ற அவர், மழை பெய்தால் மட்டுமே தொழில்வளம் செழிக்கும் எனவும் கூறினார்.

News November 12, 2024

JUST NOW: கஸ்தூரி மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

image

முன்ஜாமின்கோரி கஸ்தூரி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை வரும் 14ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்துள்ளது. தெலுங்கு மொழி பேசுவோரை அவமதிக்கும் வகையில் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கஸ்தூரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து தலைமறைவான கஸ்தூரி, முன்ஜாமின்கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இன்று நடைபெற்ற வாதத்திற்குப் பிறகு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

News November 12, 2024

‘கங்குவா’ ரிலீசாவதில் சிக்கல்

image

Fuel Technologies நிறுவனத்திற்கு தர வேண்டிய ₹1.60 கோடியை, ஐகோர்ட் பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்யாமல் ‘கங்குவா’ படத்தை வெளியிடக்கூடாது என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 3 படங்களின் இந்தி உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்திடம் இருந்து ₹6.60 கோடிக்கு மேற்கூறிய நிறுவனம் வாங்கியது. இதில் 2 படங்கள் தயாரிக்கப்படாததால், ஸ்டூடியோ க்ரீன் ₹5 கோடியை திருப்பி தந்தது. மீதமுள்ள தொகையை கேட்டு வழக்கு தொடரப்பட்டது.

News November 12, 2024

‘காலியா’ பேச்சு: அமைச்சர் பகிரங்க மன்னிப்பு

image

மத்திய அமைச்சர் குமாரசாமியிடம், கர்நாடக அமைச்சர் சமீர் அகமது கான் மன்னிப்பு கோரியுள்ளார். இடைத்தேர்தல் பரப்புரையில் பேசிய சமீர், பாஜகவை விட ‘காலியா’ குமாரசாமி மிகவும் ஆபத்தானவர் எனக் கூறினார். இனவெறி கருத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அவருக்கு பாஜக, மஜக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், தனது பேச்சில் உள்நோக்கம் இல்லை எனவும், மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்பதாகவும் சமீர் கூறியுள்ளார்.

News November 12, 2024

1192 தீவுகளை உள்ளடக்கிய ஆசியாவின் மிகச்சிறிய நாடு

image

48 நாடுகள் இருக்கும் ஆசியாவில் தான் உலக மக்கள் தொகையில் சுமார் 80% பேர் வாழுகிறார்கள். இதே ஆசியக்கண்டத்தில் 2016 மக்கள்தொகை கணக்கீடுப்படி, 5.15 லட்சம் மக்கள் மட்டுமே வாழும் சிறிய நாடான மாலத்தீவும் ஒன்று. 1,192 தீவுகளின் கூட்டணியான மாலத்தீவு 298 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. சுற்றுலாத்துறையை அதிகமாக நம்பியிருக்கும் நாடான மாலத்தீவில், கடல்சார் தொழிலும் பெரிய வருமானத்தை ஈட்டுகிறது.

News November 12, 2024

நடிகை கஸ்தூரிக்கு ஹைகோர்ட் சரமாரி கேள்வி

image

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரிக்கு மதுரை ஹைகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார். அவரது முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி, தெலுங்கு மக்கள் தமிழ் மன்னர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் என எந்த அடிப்படையில் கஸ்தூரி கூறினார்? இப்படியொரு கருத்தை கஸ்தூரி எப்படி கூறலாம்? அதற்கான அவசியம் என்ன? என நீதிபதி அடுத்தடுத்து கேள்வியெழுப்பினார்.

News November 12, 2024

விஜய்க்கு சிந்தனையில் தெளிவு இல்லை: ஹெச்.ராஜா

image

திருத்தணியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் ஹெச்.ராஜா, சிந்தனையிலும், நடவடிக்கையிலும் தெளிவு வேண்டும், அது விஜய்க்கு இல்லை என்றார். வேலுநாச்சியார், பெரியாரைக் குறிப்பிடும் நீங்க தேசியவாதியாக இருக்க விரும்புகிறீர்களா அல்லது பிரிவினைவாதியாக இருக்கிறீர்களா? எனவும் வினவினார். ஒரு குழப்பவாதியால் பெரிய முன்னேற்றத்தைப் பெற முடியாது என்பது தனது நம்பிக்கை என்றும் குறிப்பிட்டார்.

News November 12, 2024

தி.மலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது?

image

வருகிற 15ஆம் தேதி பவுர்ணமி ஆகும். அன்றைய தினத்தில் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கில் பக்தர்கள் மலையை கிரிவலம் வந்து சிவனை வழிபடுவார்கள். இந்நிலையில், நவ.15இல் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது? என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 15ஆம் தேதி அதிகாலை 5.40 மணி முதல் 16ஆம் தேதி அதிகாலை 3.33 மணி வரை பவுர்ணமி ஆகும். அந்த நேரத்தில் கிரிவலம் வருவது உகந்தது என்று கூறியுள்ளது. SHARE IT.

error: Content is protected !!