News April 20, 2025

தமிழகத்தில் வெயில் கொளுத்தியது

image

தமிழகத்தில் இன்று இரண்டு இடங்களில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை கடந்து பதிவானது. வேலூரில் அதிகபட்சமாக 40.2 டிகிரி செல்சியஸும், மதுரையில் 40 டிகிரி செல்சியஸும் வெப்பம் பதிவானது. அடுத்தபடியாக, கரூர் பரமத்தி 39.5 டிகிரி, ஈரோடு 39.4 டிகிரி, திருச்சி 39.1 டிகிரி, திருத்தணி 38.9 டிகிரி, சென்னை 38 டிகிரி என வெயில் கொளுத்தியது. ஊட்டியில் அதிகபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாக பதிவானது.

News April 20, 2025

கூகுள் சிஇஓ-வை வியக்க வைத்த இளம் வீரர்

image

14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி ஒரே போட்டியிலேயே ஸ்டாராக உருவெடுத்துள்ளார். சிக்ஸருடன் தனது கால்தடத்தை IPL-லில் பதித்த வைபவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவரது ஆட்டத்தை பார்த்து கூகுள் சிஇஓ – சுந்தர் பிச்சையே மெய்சிலிர்த்து உள்ளார். 8-ம் வகுப்பு மாணவனின் ஆட்டத்தை காண தூக்கத்தில் இருந்து எழுந்ததாக சுந்தர் பிச்சை X-ல் பதிவிட்டுள்ளார். என்ன அருமையான தொடக்கம் எனவும் சுந்தர் குறிப்பிட்டுள்ளார்.

News April 20, 2025

டிரம்பை எதிர்க்கும் இந்திய, சீன மாணவர்கள்

image

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை மற்றும் குடியேற்ற அதிகாரிகளுக்கு எதிராக 3 இந்திய மாணவர்கள், 2 சீன மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். சர்வதேச மாணவர்களுக்கான F-1 மாணவர் அந்தஸ்தை அரசு சட்டவிரோதமாக ரத்து செய்வதால் தங்கள் கல்வி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். டிரம்ப் அதிபராக பதவியேற்றது முதல், அந்நாட்டில் குடியேற்ற சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

News April 20, 2025

கிரிக்கெட் விளையாடுகையில் மாரடைப்பு.. இளைஞர் மரணம்

image

தெலுங்கானாவில் கிரிக்கெட் விளையாடுகையில் மாரடைப்பு வந்து இளைஞர் ஒருவர் மரணமடைந்தார். மேட்சல் ராம்பள்ளியில் உள்ள மைதானத்தில் பிரனீத் (32) என்பவர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் சரிந்து விழுந்தார். அங்கிருந்தோர் ஹாஸ்பிடலுக்கு அவரை அழைத்து சென்றனர். எனினும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார். மருத்துவ பரிசோதனையில் மாரடைப்பு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

News April 20, 2025

DANGER: அதிக நேரம் ரீல்ஸ் பார்ப்பவரா நீங்கள்?

image

அதிக நேரம் ரீல்ஸ் பார்ப்பதால், நிரந்தர பார்வை இழப்பு அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் ரிப்போர்ட் வெளியிட்டுள்ளனர். பார்வை குறைபாடு அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக 0-16 வயது உடையவர்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அறிக்கையில் தெரியவந்துள்ளது. 2050-க்குள் உலகம் முழுவதும் 50% பேருக்கு MYOPIA குறைபாடு ஏற்படும் எனவும், இது நிரந்தர பார்வை இழப்பிற்கு வழிவகுக்கும் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

News April 20, 2025

யோகிதான் அடுத்த பிரதமர் வேட்பாளர்: அகிலேஷ்

image

உ.பி.யில் நிகழ்ந்தது ஆன்மிக கும்பமேளா அல்ல, அரசியல் கும்பமேளா என அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். பாஜகவின் அடுத்த பிரதமர் வேட்பாளர் யோகி ஆதித்யநாத்தான் என்பதை மக்களுக்கு தெரிவிக்கவே கும்பமேளா நடத்தப்பட்டதாகவும், சமூகத்தை மதம், சாதி ரீதியில் பிளவுபடுத்துவதே பாஜகவின் திட்டம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், சமூகத்தை பிளவுபடுத்த அதிக நிதியை செலவழிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News April 20, 2025

மாம்பழம் விலை கடும் சரிவு

image

தமிழ்நாட்டில் தற்போது மாம்பழ சீசன் களைகட்டியுள்ளது. இதனால் மாம்பழ பிரியர்கள், மாம்பழத்தை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். அவர்களை மேலும் சந்தோஷப்படுத்துவது போல, சென்னை கோயம்பேடு சந்தையில் மாம்பழம் விலை சரிந்துள்ளது. தினமும் 100 டன் மாம்பழம் வருவதே இதற்கு காரணமாகும். இதனால் தேன் மாம்பழம் 1 கிலோ ₹60-₹80க்கும், பங்கனபள்ளி ₹70-₹100க்கும், அல்போன்சா ₹80-₹110க்கும் விற்கப்படுகிறது.

News April 20, 2025

ராகுல் திரிபாதிக்கு இடமில்லை.. களம் காணும் இளம் வீரர்

image

CSK அணியில் தொடர்ந்து சொதப்பி வரும் ராகுல் திரிபாதி அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார். அவருக்கு பதில் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே அணியில் இடம் பிடித்துள்ளார். ஏற்கனவே ஷேக் ரசீத்துக்கு சென்னை அணி கடந்த போட்டியில் வாய்ப்பளித்த நிலையில் தற்போது மற்றொரு இளம் கன்றுக்கு CSK வாய்ப்பு கொடுத்துள்ளது. என்ன செய்ய காத்திருக்கிறார் ஆயுஷ் என பொறுத்திருந்து பார்க்கலாம்…. இந்த முடிவு சரியா? நீங்க சொல்லுங்க..

News April 20, 2025

வாழ்வா, சாவா போட்டியில் சிஎஸ்கே அணி

image

சிஎஸ்கே இன்று விளையாடுவது 8-வது போட்டியாகும். இதில் மும்பை இந்தியன்ஸை சிஎஸ்கே எதிர்கொள்கிறது. இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் சிஎஸ்கே 2-ல் மட்டும் வென்றுள்ளது. 5 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது. ஆதலால், அடுத்த சுற்றுக்கு முன்னேற இன்று வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது. ஆதலால் இந்த போட்டி, சிஎஸ்கே-வுக்கு வாழ்வா, சாவா போட்டியாகும். இன்று வெற்றி பெறுமா?

News April 20, 2025

IPL: CSK அணி பேட்டிங்

image

சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. நடப்பு சீசனின் முதல் பாதியில் மும்பை – சென்னை அணிகளுக்கு சிறப்பாக அமையவில்லை. 7 போட்டிகளில் மும்பை 3 வெற்றிகளையும், சென்னை 2 வெற்றிகளையும் மட்டுமே பெற்றுள்ளன. இதனால் இரு அணிகளுக்குமே இது வாழ்வா? சாவா? ஆட்டம். யார் ஜெயிக்க போறா? உங்க கணிப்பு என்ன?

error: Content is protected !!