News November 10, 2024

நியூசி.க்கு எதிரான தோல்வி: அஸ்வின் ஓப்பன் டாக்

image

நியூசிலாந்துக்கு எதிரான தோல்விக்கு தானும் முக்கிய காரணம் என அஸ்வின் தெரிவித்துள்ளார். நியூசி. அணிக்கு எதிராக பேட்டிங் மற்றும் பவுலிங்கில் தன்னால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போனதை நினைத்து வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னால் முடிந்தவரை சிறப்பானதை கொடுக்கு முயன்றதாகவும், ஆனால் அது அணியின் வெற்றிக்கு போதுமானதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

News November 10, 2024

டெல்லி கணேஷ் மறைவு – மோடி இரங்கல்

image

நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். X பதிவில் ‘ டெல்லி கணேஷ் சிறந்த நடிப்பாற்றல் கொண்டவராக திகழ்ந்தவர். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அவர் கொண்டு வந்த தனித்துவத்திற்காக தலைமுறைகள் கடந்தும் பார்வையாளர்களால் அவர் நினைவுகூரப்படுவார். நாடகத்தின் மீதும் ஆர்வம் கொண்டிருந்தார். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.’ என பதிவிட்டுள்ளார்.

News November 10, 2024

காங்.,க்கு மக்கள் தோல்வியை பரிசளிப்பார்கள்: அமித் ஷா

image

வீர சாவர்க்கரை புகழ்ந்து பேசும்படி ராகுலிடம் உத்தவ் தாக்கரே வலியுறுத்துவாரா என அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். மராட்டியத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், பால் தாக்கரேவை அவமதிக்கும் காங்கிரஸ் கட்சியுடன், சிவசேனா(உத்தவ் அணி) கூட்டணி வைத்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார். மராட்டிய மக்கள் அவர்களுக்கு மீண்டும் தோல்வியை பரிசளிப்பார்கள் என்றும் சூளுரைத்தார். வரும் நவ.20இல் அங்கு தேர்தல் நடக்கிறது.

News November 10, 2024

’புஷ்பா-2’வில் குத்தாட்டம் போடும் ஸ்ரீலீலா

image

சுகுமார், அல்லு அர்ஜுன் கூட்டணியில் புஷ்பா 2 படம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தின் வெற்றிக்கு சமந்தா நடனத்தில் உருவான ‘ ஊ சொல்றியா’ பாடல் இந்தியா முழுவதும் ஹிட் அடித்ததும் ஒரு காரணம். ’புஷ்பா-2’ படத்தில் யார் அப்படி நடனமாடுவார் என எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் நடிகை ஸ்ரீலீலா Kissik பாடலுக்கு நடனமாடி இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாட்டுக்கு யாரெல்லாம் வெயிட்டிங்?

News November 10, 2024

UNION BANKஇல் 1,500 காலி இடங்கள்.. 3 நாளே அவகாசம்

image

UNION BANK-இல் காலியாக இருக்கும் 1,500 லோக்கல் பேங்க் ஆபிசர் நிலையிலான பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இதற்கு unionbankofindia.co.in இணையதளத்தில் விண்ணப்பிக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கான கால அவகாசம் வருகிற 13ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஆதலால் வேலைக்கு சேர விரும்புவோர் உடனே அந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். SHARE IT.

News November 10, 2024

ஊழல் மட்டுமே செய்யும் ஆட்சி தேவையா? மோடி

image

ஜார்க்கண்ட் மாநிலத்தை ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி கொள்ளையடித்து வருவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். அம்மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், மாநிலத்தை ஆண்டவர்கள் ஊழல் செய்வதையே கொள்கையாக வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டினார். இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைப்பவர்களின் திட்டங்களை பாஜக முறியடிக்கும் எனவும் உறுதியளித்தார். இங்கு நவ.13இல் தேர்தல் நடைபெறுகிறது.

News November 10, 2024

2,123 நாட்களுக்கு பிறகு தொடரை இழந்த ஆஸி. அணி

image

ஆஸி. அணி தனது சொந்த மண்ணில் 2,123 நாள்களுக்கு பிறகு ஒருநாள் தொடரை இழந்துள்ளது. இன்று நடைபெற்ற பாக். அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம், ஆஸி. அணியின் நீண்டகால சாதனை (சுமார் 6 ஆண்டுகள்) முறியடிக்கப்பட்டுள்ளது. கடைசியாக, 2019இல் ஆஸி. அணி, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது குறிப்பிடத்தக்கது.

News November 10, 2024

மகளிர் உதவித்தொகை ரூ.2,100: பாஜக வாக்குறுதி

image

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்துள்ளது. அவற்றில் சிலவற்றை பார்ப்போம். 1) இளைஞர்களுக்கு 25 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 2) மகளிர் உதவித்தொகை ரூ.1,500 இலிருந்து 2,100-ஆக உயர்த்தப்படும். 3) மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும். 4) மின் கட்டணம் பல மடங்கு குறைக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது.

News November 10, 2024

மழைக்காலத்தில் பைக் ஸ்டார்ட் ஆகலையா? இதை செய்யுங்க

image

மழைக்காலத்தில் பைக் ஸ்டார்ட் ஆவதில் பிரச்சனை வருவது சகஜம். குளிர்ச்சியால் இன்ஜின் ஆயில் தானாக இறுகுவதும், பேட்டரி பவர் குறைவதுமே இதற்கு காரணமாகும். இதற்கு கீழ்காணும் வழிகளில் தீர்வு காணலாம். *பைக்கில் உள்ள சோக்-ஐ இழுத்துவிட்டு, ஸ்டார்ட் செய்தால் உடனே ஸ்டார்ட் ஆகும். *ஆக்சிலேட்டரை முறுக்காமல் காலால் கிக்கரை அழுத்தி மிதித்தாலும் ஸ்டார்ட் ஆகும். வேறு ஏதேனும் ஐடியா இருக்கா? கமெண்ட் செய்யுங்க.

News November 10, 2024

நவ.13இல் வெள்ளை மாளிகை செல்லும் ட்ரம்ப்

image

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ட்ரம்ப் விரைவில் சந்தித்து பேச உள்ளார். நவ.13இல் வெள்ளை மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. பதவியில் இருந்து விலகும் அதிபர், புதிதாக பொறுப்பேற்க உள்ள அதிபரை சந்தித்து பேசுவது அமெரிக்க அரசியலில் இயல்பான நடைமுறையாக உள்ளது. அமைதியான அதிகார பரிமாற்றத்தின் தொடக்கமாக இந்த சந்திப்பு அமையும் என்று கருதப்படுகிறது.

error: Content is protected !!