News November 10, 2024

கம்பீரின் தலைமை பதவிக்கு ஆபத்து?

image

டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து கம்பீரை விடுவிக்க BCCI முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்ததால், IND அணி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை IND அணி வெல்லாவிட்டால் கம்பீர் கழற்றி விடப்படுவார் என கிரிக்கெட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

News November 10, 2024

BREAKING: நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்

image

தமிழ்த் திரையுலகின் மூத்த நடிகர் டெல்லி கணேஷ் (81) வயது மூப்பு காரணமாக காலமானார். நாயகன் படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்து பிரபலமான அவர் பசி, சிந்து பைரவி உள்ளிட்ட தற்போது வரை 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், இன்று காலையில் இருந்து நடிகர்கள், நடிகைகள் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

News November 10, 2024

இன்று 5 மாவட்டங்கள், நாளை 6 மாவட்டங்களில் மழை

image

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு என RMC கூறியுள்ளது. இதேபோல, நாளை 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News November 10, 2024

தொடரை கைப்பற்றுமா இந்தியா?

image

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான 2ஆவது T20 போட்டி இன்று நடைபெறுகிறது. SAவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள IND அணி, 3 T20 போட்டிகளில் விளையாடுகிறது. டர்பனில் நடைபெற்ற முதல் போட்டியில், IND அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2ஆவது போட்டி Gqeberha மைதானத்தில் 7.30 PMக்கு தொடங்குகிறது. SAவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? கமெண்ட்ல சொல்லுங்க.

News November 10, 2024

தினமும் காலை எழுந்ததும் இதை செய்ய மறவாதீர்கள்

image

*ஒரு சில நிமிடங்கள் மனதை லேசாக்கி ஆழ்ந்த மூச்சு விடுங்கள்
*ஓவ்வொரு நாளையும் புதிதாக தொடங்குங்கள்
*காலை உணவை உட்கொள்ள தவறாதீர்கள்
*இன்றைய நாளுக்கான உங்கள் வேலைகளை பட்டியலிடுங்கள்
*சுறுசுறுப்பாக இருங்கள்
*சக ஊழியர்களிடம் புன்னகையுடன் பேசுங்கள்.

News November 10, 2024

டேனியல் பாலாஜி நடித்த ’BP 180’ ஃபர்ஸ்ட் லுக்

image

மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி நடித்த ‘BP 180’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிடப்பட்டுள்ளது. ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் அமுதன் கதாபாத்திரம் மூலம் ஃபேமஸான அவர், கடந்த மார்ச் மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். மறைவுக்கு முன் கமிட்டாகியிருந்த இந்த படத்தில், தன்யா ரவிச்சந்திரனும் அவரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். மருத்துவத்துறை பிரச்னையை மையமாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது.

News November 10, 2024

ஊதியம் வேண்டாம் என CM சொல்வாரா?

image

தமிழக அரசின் நிதிநிலை சரியாகும் வரை எங்களுக்கு ஊதியம் வேண்டாம் என CM ஸ்டாலின், அவரது மினிஸ்டர்ஸ், MLAக்கள் அறிவிப்பார்களா? என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. நிதிநிலை மோசம் என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் இந்திய ஆட்சிப் பணியில் பணியாற்றும் உயர் அலுவலர்கள், அவர்களின் ஊதியத்திலிருந்து 10% விட்டுக் கொடுப்பார்களா? எனவும் அந்த சங்கம் வினவியுள்ளது.

News November 10, 2024

ஸ்டாலினை எதிர்க்கட்சி தலைவராக்க தயார்: TNGEA

image

CM ஸ்டாலினை 2026இல் எதிர்க்கட்சி தலைவராக்க தயார் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் பகிரங்கமாக தெரிவித்துள்ளது. ஆட்சியில் அமர்த்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் உரிமைகளை பறித்ததுதான் திமுகவின் 3 ஆண்டு சாதனை என குற்றஞ்சாட்டிய சங்கம், எதிர்க்கட்சி தலைவராக இருந்தால் தான், ஸ்டாலின் தங்களை சந்திப்பார் என விமர்சித்துள்ளது. OLD பென்ஷன் ஸ்கீமை அமல்படுத்த வலியுறுத்தி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News November 10, 2024

உணவே மருந்து! மருந்தே உணவு!!

image

*தினம் ஒரு கோவைப்பழம் சாப்பிட சர்க்கரை நோய் கட்டுப்படும்.
*தினம் ஒரு இலந்தைப்பழம் – நெஞ்சுவலிக்கு தீர்வு
*தினம் 2 துண்டு அன்னாசி சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.
*தினம் ஒரு மாம்பழம் சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி சரியாகும்.
*தூங்கும்முன் ஒரு மாதுளம் பழம் சாப்பிட்டால் குடல் புழுக்கள் அழியும்.

News November 10, 2024

பிரியங்காவுக்கு ஆதரவாக களமிறங்கிய வினேஷ் போகத்

image

வயநாடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தியை ஆதரித்து, வினேஷ் போகத் பிரசாரத்தில் ஈடுபட்டார். முன்னாள் மல்யுத்த வீராங்கனையான அவர், ஒலிம்பிக்ஸ் ஃபைனல்ஸில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஓய்வை அறிவித்துவிட்டு காங்கிரஸில் இணைந்தார். அதன்பிறகு ஹரியானா MLA தேர்தலில் வெற்றி பெற்ற அவர், தற்போது நேரடி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

error: Content is protected !!