News November 11, 2024

இந்திக்கு தருவதுபோல், தமிழுக்கும் பரிசு கொடுங்க

image

இலங்கையில் தமிழில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு திருமா கடிதம் எழுதியுள்ளார். இலங்கையின் சப்ரகமுவ பல்கலை.,யில் இந்தியில் முதல் மதிப்பெண் பெறும் மாணவருக்கு தங்கப் பதக்கமும் ₹25,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படுவதுபோல், தமிழில் முதல் மதிப்பெண் பெறும் மாணவருக்கும் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

News November 11, 2024

11 நாள்களில் தங்கம் விலை ₹1,880 குறைந்தது

image

நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை, கடந்த சில நாள்களாக குறைந்து வருகிறது. அக்.31ம் தேதி வரலாற்று உச்சமாக ஒரு சவரன் ₹59,640க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து, நவ.1 முதல் படிப்படியாக தங்கம் விலை குறைந்து வருகிறது. அதன்படி, கடந்த 11 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹1,880 குறைந்துள்ளது. இதனால், வரும் நாள்களிலும் தங்கம் விலை குறையாதா என்ற எதிர்பார்ப்பு நடுத்தர மக்களிடையே எழுந்துள்ளது.

News November 11, 2024

Stock Market: பென்னி ஸ்டாக்ஸ் என்றால் என்ன?

image

பென்னி ஸ்டாக்ஸ் (Penny Stocks) என்பது மிகவும் குறைந்த விலையில் சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் நிறுவனங்களின் பங்குகளைக் குறிக்க பயன்படுத்தப்படும் சொல்லாகும். இவற்றின் விலை பொதுவாக ஒரு பங்கிற்கு ₹10 அல்லது அதற்கும் குறைவான விலையிலேயே இருக்கும். இந்த குறைந்த விலைதான் முதலீட்டாளர்களை மிகவும் கவர்ந்திழுக்கிறது. ஒரு சிறிய தொகையை முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என்ற எண்ணம் பலரின் மனதில் எழுகிறது.

News November 11, 2024

ரோஹித்துக்கு பதில் பும்ரா கேப்டன்?

image

ஆஸி.,வுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ரோஹித் விளையாடுவது குறித்து இன்னும் தெளிவாக முடிவாகவில்லை என கம்பீர் தெரிவித்துள்ளார். ஹிட்மேன் விளையாடுவார் என நம்புவதாகவும், தொடர் தொடங்கும் முன் தெளிவான பதில் வழங்கப்படும் எனக் கூறினார். மேலும், முதல் டெஸ்டில் ரோஹித் விளையாடவில்லை என்றால் பும்ரா கேப்டனாக இருப்பார் என்றும், ராகுல் – அபிமன்யு தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

News November 11, 2024

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த கம்பீர்

image

சமூக ஊடகங்களில் எனக்கு எதிராக வரும் விமர்சனங்கள் என்னை ஒருபோதும் பாதிக்காது என கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார். நியூசி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்து சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் ஆனதால் நெட்டிசன்கள், அவரை விமர்சித்தனர். இந்நிலையில், சமூக ஊடகங்கள் யாருடைய வாழ்க்கையிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது எனக் கூறிய அவர், IND அணிக்கு பயிற்சியளிப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் எனக் கூறியுள்ளார்.

News November 11, 2024

AK பாணியில் அறிக்கை விட்ட KH

image

‘உலக நாயகன்’ என்று தன்னை அழைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தன்னை கமல், கமல்ஹாசன் அல்லது KH என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று கேட்டுக் கொண்டுள்ளார். முன்னதாக, நடிகர் அஜித்குமார் தன்னை ‘தல’ என அழைக்க வேண்டாம். அஜித், அஜித்குமார், AK எனக் குறிப்பிட்டால் போதும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது. உங்க கமெண்ட் என்ன?

News November 11, 2024

டெல்லி கணேஷ் உடலுக்கு இறுதிச்சடங்கு

image

சென்னையில் நேற்று காலமான நடிகர் டெல்லி கணேஷ் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. ராமாபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் உள்பட ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதிச் சடங்குக்குப் பின் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நெசப்பாக்கம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

News November 11, 2024

இந்தியாவில் தரம் குறைந்த உணவுகள்: ஆய்வில் அதிர்ச்சி

image

Nestle, PepsiCo, Unilever ஆகிய MNC நிறுவனங்கள், இந்தியா உள்ளிட்ட நடுத்தர, ஏழை நாடுகளில் தரம் குறைந்த பொருள்களை விற்பதாக ATNI ஆய்வு அறிக்கை கூறுகிறது. சிப்ஸ், பிஸ்கட்கள், பானங்கள், ஹெல்த் டிரிங்ஸ் என நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருள்களில் இப்படி நடக்கிறதாம். 30 நாடுகளில் நடந்த ஆய்வில், ஏழை, நடுத்தர நாடுகளில் பொருள்களின் தரக்குறியீடு 1.8 ஆகவும், வளர்ந்த நாடுகளில் 2.3 என அதிகமாகவும் உள்ளது.

News November 11, 2024

பள்ளியில் வாயு கசிவு: மாணவர்களின் நாடகம்?

image

சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயுக் கசிவு ஏற்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் தான் இது போன்ற சம்பவத்தை அரங்கேற்றியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மாணவர்கள் மர்ம பொருளை எடுத்து வந்து அதன் மூலம் மயக்கம் ஏற்படுவதற்கான பணிகளை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. விடுமுறைக்காக இதுபோன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டர்களா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

News November 11, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) உலகின் மிகப்பெரிய இந்து கோயில் எது? 2) NPA என்பதன் விரிவாக்கம் என்ன? 3) Theology என்றால் என்ன? 4) இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் யார்? 5) காட்சிக் கவனவீச்சின் அளவை அளக்க பயன்படும் கருவி எது? 6) பச்சை நிற ரத்தத்தைக் கொண்ட ஒட்டுண்ணி எது? 7) குறைந்த அடர்த்தி கொண்ட தனிமம் எது? 8) Alarm என்பதன் தமிழ் சொல் என்ன? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.

error: Content is protected !!