India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஊடக விவாதங்களில் தனி மனித தாக்குதல்கள் கூடாது என தவெக நிர்வாகிகளுக்கு அக்கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. ஊடக விவாதங்களை எவ்வாறு அணுக வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், மாற்றுக் கட்சியினர் வைக்கும் எதிர் கருத்துகளுக்கு கண்ணியமான முறையில் பதிலடி கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், தவெக கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் குழுவை அதிகப்படுத்தவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மும்பையில் குடும்பத்தோடு செட்டிலானது சரியான முடிவு என சூர்யா தெரிவித்துள்ளார். மும்பை தனது மாமியாரின் ஊர் என்பதால், அதை பற்றி எப்படி தவறாகக் கூற முடியும் எனப் பேசியுள்ளார். ஜோதிகா தனக்காக 27 ஆண்டுகள் சென்னையில் இருந்தார். தற்போது அவரும் அவரது குடும்பத்தாருடன் இருக்க வேண்டும் என்பதால் மும்பைக்கு குடிபெயர்ந்ததாகக் கூறியுள்ளார். மேலும், இங்கு தனக்கு அதிகமான அன்பு கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஸ்விக்கி நிறுவனம், Employee Stock Ownership Plan (ESOP) திட்டத்தின் கீழ், தனது நிறுவன ஷேர்களை ஊழியர்களுக்கு ஒதுக்கியுள்ளது. அதன்படி, இன்று அதன் பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், 5,000 ஊழியர்களுக்கு ₹9,000 கோடி மதிப்புள்ள ஷேர்கள் கிடைக்கும். இவர்களில் அதிகம் ஷேர்கள் பெறும் 500 பேர் கோடீஸ்வரர்களாக மாறுவர். முன்னதாக, மூத்த அதிகாரிகளுக்கு இதே வழியில் ₹1,600 கோடி கிடைத்தது.
பூசாரி தற்கொலை வழக்கில் ஓபிஎஸ் தம்பி ராஜா உட்பட 6 பேரை விடுதலை செய்து திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோயில் பூசாரியாக இருந்த நாகமுத்து, “தனது மரணத்திற்கு ஓ.ராஜா உள்ளிட்டோர் தான் காரணம்” என கடிதம் எழுதிவைத்துவிட்டு 2012இல் தற்கொலை செய்துக் கொண்டார். இவ்வழக்கு 12 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் வீடுகளை இடிப்பது அரசியலமைப்பிற்கு விரோதமானது என SC தெரிவித்துள்ளது. வீடுகளை புல்டோசர் கொண்டு இடிப்பதற்கு எதிரான வழக்கில், வீடு என்பது ஒவ்வொருவரின் கனவு; அது கலைந்து விடக்கூடாது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், இருக்கும் சட்டத்தை கொண்டு மக்களை பாதுகாக்க வேண்டும். அதிகாரிகள் நீதிபதிகள் கிடையாது. அதிகாரிகள் தன்னிச்சையாக அதிகாரத்தை பயன்படுத்தக்கூடாது என கூறியுள்ளது.
ஆபத்தான பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்துவது ஏற்கத்தக்கதல்ல என EPS கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மலையில் நில கணக்கெடுப்புப் பணியின்போது மாணவி ஒருவரை பாம்பு கடித்ததாகவும், மற்றொரு மாணவி குளவி கொட்டப்பட்டு சிகிச்சை பெறுவதாகவும் வேதனை வெளிப்படுத்தினார். மாணவர்களின் உயிரோடு விளையாடுவது கொடுமையானது என்றும் CM தலையிட்டு, இப்பணியில் இருந்து கல்லூரி மாணவர்களை உடனடியாக விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
ஒருங்கிணைந்த வேளாண் திட்டங்களை வகுக்க ஏதுவாக, மாநிலத்தில் உள்ள நிலங்களின் தன்மை, அளவு, பயிர் வகைகள், விவசாயிகளின் வருமானம், கடன், காப்பீடு போன்ற விவரங்களை மின்னணு முறையில் தொகுத்தளிக்க மத்திய அரசு கோரியிருந்தது. இப்பணிக்கு வருவாய்த்துறையினரை பயன்படுத்த வேண்டும். ஆனால், அவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுப்பதைத் தவிர்க்க, வேளாண் கல்லூரி மாணவர்களை TN அரசு பயன்படுத்துவதாக OPS விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் இந்தாண்டு மட்டும் 75,800 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நோயாளிகளைக் கண்டறிதல், தொடர் கண்காணிப்பு நடவடிக்கை என நோய் ஒழிப்பு திட்ட பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. வீடுகளுக்கே சென்று மருந்து வழங்குவதுடன், மாதிரிகள் எடுக்கப்படுகின்றன. இதனால், 84% பேர் முதல் சிகிச்சையிலேயே குணமடைவதாகக் கூறியுள்ளது.
அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதை பயன்படுத்தி தங்கத்தின் தேவை உள்ளவர்கள் வாங்கிக் கொள்ளலாம் என பரிந்துரைக்கின்றனர். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தங்கத்தின் விலை மீண்டும் உயரக் கூடும் என்கிறார்கள். அமெரிக்க அதிபர் டிரம்பின் பொருளாதார முடிவுகளை பொறுத்து இந்த சூழல் மாறக் கூடும் என்றும் கூறுகின்றனர்
தமிழகத்தில் பகல் 1 மணி வரை 11 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தி.மலை, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை மையம் கூறியது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.