News October 26, 2025

நாளை பள்ளிகளுக்கு இங்கெல்லாம் விடுமுறை

image

மொன்தா புயல் உருவாவதால், புதுவையின் ஏனாமில் நாளை முதல் அக்.29 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை சென்னை, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. மேலும், <<18102668>>தூத்துக்குடி<<>> மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறையாகும். அதேபோல், சிவகங்கையில் 7 ஒன்றியங்களுக்கு நாளை, அக்.30 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News October 26, 2025

கூட்டணி ஆட்சி கனவில் விசிக?

image

சமீப காலமாக கூட்டணி கட்சிகள் மத்தியில், கூட்டணி ஆட்சிக்கான முழக்கம் எழுந்திருப்பதால் திமுக அதிருப்தியில் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2026-ல் கூட்டணி கட்சியா, கூட்டணி ஆட்சியா என திருமாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘தேர்தல் முடிவுக்கு பின்னர்’ என ஒற்றை வார்த்தையில் பதில் கூறி நகர்ந்தார். இதனால் திமுகவுக்கு இன்னும் அழுத்தம் அதிகரிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News October 26, 2025

தமிழ்நாட்டில் SIR: நாளை அறிவிப்பு?

image

டெல்லியில் நாளை மாலை தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாடு உள்பட 2026-ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்படும் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் SIR-ஐ திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

News October 26, 2025

என்னது..ஈபிள் டவர் வளருமா!

image

பிரான்ஸில் உள்ள ஈபிள் டவர் வெயில் காலத்தில் 15 செ.மீ., வரை வளரும் என சொன்னால் நம்பமுடிகிறதா? ஆம், வெப்பம் அதிகரிக்கும்போது இதில் உள்ள இரும்பு உலோகம், சிறிதளவு விரிவடைந்து, குளிர்காலம் வரும்போது சுருங்குகிறது. இதனால் இதன் உயரம் ஒவ்வொரு ஆண்டும் வெயில் காலத்தின் போது அதிகமாவதாக சொல்கின்றனர். தற்போது இதன் உயரம் 1083 அடியாக இருக்கிறது. 1% பேருக்கு மட்டுமே தெரிந்த இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News October 26, 2025

❤️❤️ 20 வயது காதலியை கர்ப்பமாக்கிய 80 வயது தாத்தா

image

காதலுக்கு கண்ணுமில்லை, வயதுமில்லை என்ற கேப்ஷனுடன் SM-ல் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. 80 வயது முதியவர் ஃபிராங்குக்குள் ஆழமான காதலை கண்டுகொண்ட 20 வயது ஜெசிகா, தானும் அவரை காதலிக்க தொடங்கினார். ஊரார் பேச்சை உதாசீனப்படுத்தி காதலில் திளைத்த இந்த ஜோடிக்கு, இப்போது குழந்தை பிறக்கப் போகிறதாம். குழந்தையுடன் காதலின் அடுத்த அத்தியாயத்தை தொடங்க ஆவலுடன் காத்திருக்கின்றனர் தம்பதியர். வாழ்த்தலாமே!

News October 26, 2025

மதுபோதையில் வாகனம் ஓட்டுவோர் தீவிரவாதிகள்!

image

குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்கள் தீவிரவாதிகள் எனவும் அவர்களுக்கு மன்னிப்பு கிடையாது என்றும் ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் VS சஜ்ஜனார் எச்சரித்துள்ளார். கர்னூலில் ஆம்னி பஸ் விபத்துக்கு பிறகு ஹைதராபாத்தில் ஆம்னி பஸ்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, பஸ் மீது மோதிய பைக்கை ஓட்டிச் சென்ற இளைஞர் குடிபோதையில் இருந்ததோடு, தாறுமாறாக ஓட்டியது வீடியோவில் அம்பலமாகியுள்ளது.

News October 26, 2025

₹1,000 மகளிர் உரிமைத் தொகை நிராகரிப்பு.. அரசு புதிய தகவல்

image

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் மீதான கள ஆய்வை நவம்பருக்குள் முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. குடும்ப வருமானம் உள்ளிட்ட தகவல்களை மறைத்து விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அண்மையில் அரசு பணியில் சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் விண்ணப்பித்திருந்தால் அவர்களுக்கு ₹1,000 கிடைக்காது. விண்ணப்பித்தவர்களின் ரேஷன் கார்டில் சரியான முகவரி இல்லை என்றாலும் ₹1,000 கிடைப்பதில் சிக்கல் வரும்.

News October 26, 2025

பெண் டாக்டர் தற்கொலை: ராகுல் சரமாரி கேள்வி

image

மகாராஷ்டிரா <<18092365>>பெண் டாக்டர் தற்கொலை <<>>வழக்கில், போலீஸ் SI கோபால், மென்பொறியாளர் பிரசாந்தை போலீசார் கைது செய்தனர். இருப்பினும், குற்றவாளிகளை ஆளும் BJP அரசு காப்பாற்ற முயல்வதாகவும், ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்கள் அந்த டாக்டரை பொய்யான உடற்கூராய்வு அறிக்கையை கொடுக்க கூறி வற்புறுத்தியதாகவும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளானத கூறி அந்த டாக்டர் தற்கொலை செய்து கொண்டார்.

News October 26, 2025

பதற்றத்தை குறைக்க சில டிப்ஸ்

image

பதற்றம் நமது அன்றாட வாழ்க்கையில் அமைதியை குலைத்து, வேலை, உறக்கம், உறவுகள் போன்றவற்றை பாதிக்கக்கூடும். மேலும், தலைவலி, உயர் ரத்த அழுத்தம், சோர்வு, மனஅழுத்தம் போன்ற பிரச்னைகளையும் ஏற்படுத்தும். எனவே, பதற்றத்தை குறைப்பது மிக அவசியம். இதற்கு என்ன செய்யலாம் என்று, மேலே பகிர்ந்துள்ள போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. கமெண்ட் பண்ணுங்க.

News October 26, 2025

புயல் அலர்ட்.. கனமழை வெளுத்து வாங்கும்

image

வங்கக் கடலில் இன்று மாலை 5.30 மணியளவில் ‘மொன்தா’ புயல் உருவாகவுள்ளதாக IMD கணித்துள்ளது. இதன் எதிரொலியாக, பல மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இரவு 7 மணி வரை, ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூரில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, காஞ்சி, செங்கை, விழுப்புரம், திருப்பத்தூர், தி.மலை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!