India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆவணப்படத்தில் தனது முந்தைய காதலை பற்றி நயன்தாரா பேசும் போது, முதல் காதல் நம்பிக்கையின் அடிப்படையில் இருந்தது. எதிர் நபர் முழுதாக காதலிக்கிறார் என நம்பினேன். இதுவரை என் முந்தைய காதல்கள் பற்றி பேசியதில்லை. அக்கதைகள் எல்லாம் ரொம்பவே மோசம். இன்றுவரை என் ரிலேஷன்ஷிப்பில் சம்பந்தப்பட்ட ஆண்களிடம், நீங்கள் ஏன் இதை செய்தீர்கள், உண்மையில் என்ன நடந்தது? என்று யாரும் கேட்டதே இல்லை. இது நியாயமே இல்லை என்றார்.
இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய, ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க முன்னிலையில் பதவியேற்றார். இலங்கையில் கடந்த வியாழக்கிழமை நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 225 இடங்களில் 159 இடங்களை இடதுசாரிக் கூட்டணி கைப்பற்றியது. அதன் பின்னர், இலங்கையின் 3வது பெண் பிரதமராக ஹரிணி அமரசூரிய இன்று பதவியேற்றுக்கொண்டார். இலங்கையில் அரசியல் குடும்ப பின்னணி இல்லாத முதல் பெண் பிரதமர் ஹரிணி ஆவார்.
பிஎச்டி மாணவர்கள், அவர்களின் கைடுகளால் மோசமாக நடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் போது ஆளுநர் ஆர்.என். ரவியிடம் இதுதொடர்பாக சில மாணவர்கள் புகார் அளித்தனர். இந்நிலையில், பிஎச்டி மாணவர்களை தனது சொந்த வேலைகளுக்கு பயன்படுத்தினால், சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித் துறை எச்சரித்துள்ளது.
மத்திய அரசின் 16-வது நிதிக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின், வரிப் பகிர்வு விவகாரத்தில் பல கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாடு பெற்று வந்த பயன்கள் தொடர்ந்து குறைந்து வருவதாக அவர் குற்றம்சாட்டினர். இந்த நிலை நீடித்தால், முன்னேறிய மாநிலமாக மாறுவதற்கு முன்பு, முதியோர் அதிகமுள்ள மாநிலமாக தமிழ்நாடு மாறும் அபாயம் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
தமிழகம் வந்துள்ள மத்திய நிதிக்குழு உறுப்பினர்களிடம் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பேசிய அவர், “மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் வரி வருவாய் 41% உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், கடந்த 4 ஆண்டுகளாக 33.16% வரி வருவாய் மட்டுமே வழங்கப்படுகிறது. இது, தமிழகம் போன்ற மாநிலங்களை தண்டிக்கும் செயல். எனவே மாநிலங்களுக்கான வரி வருவாயை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும்” எனக் கூறினார்.
உலகின் பணக்காரர்களில் பலரும் ஒரே ராசியை சேர்ந்தவர்கள் என்றால் நம்ப முடிகிறதா? UK’வின் CashFloat நிறுவனம் 2022 ஆண்டின் உலக டாப் பில்லியனர்களின் தகவல்கள் அடிப்படையில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில், துலாம் ராசியில் (12%) தான் பெரும்பாலான பணக்காரர்கள் பிறந்திருக்கிறார்கள். இதில், கவனிக்க வேண்டிய விஷயம் இந்தியாவை போல் இல்லாமல் வெளிநாடுகளில் பிறப்பு, மதத்தை வைத்து ஜாதகம் முடிவு செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு கூட கூட்டணி ஆட்சி சாத்தியமில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் கூட்டணி ஆட்சி தேவை என்று தவெக தலைவர் விஜய் பேசியதில் இருந்து இந்த விவகாரம் பேசு பொருளாகியுள்ளது. ஆனால், சிறிய கட்சிகள் கூட்டணி ஆட்சியை கேட்பது விருப்பம் மட்டுமே என்றும், திமுக, அதிமுக ஏற்றுக் கொண்டால்தான் அது சாத்தியமாகும் என்றும் திருமாவளவன் பேசியிருக்கிறார்.
‘கலகலப்பு 3’ படம் குறித்த அப்டேட் ஒன்றை நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ’விரைவில் ‘கலகலப்பு 3’ உருவாக இருக்கிறது, நடிகர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனப் பதிவிட்டுள்ளார். கடந்த 2012, 2018ஆம் ஆண்டுகளில் வெளியான கலகலப்பு1, 2 படங்களுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து 3ஆம் பாகம் விரைவில் தொடங்க உள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹480 உயர்ந்து ₹55,960க்கு விற்பனையாகிறது. நேற்று ₹6,935க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம், இன்று ₹60 உயர்ந்து ₹6,995க்கு விற்கப்படுகிறது. இதனால் தங்கம் வாங்குவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ஒன்று ₹99க்கு விற்கப்படுகிறது.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. அனல் பறக்கும் இறுதிகட்ட பிரச்சாரத்தில் அரசியல் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் ஒரே கட்டமாக நவ.20 வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. நவ.23 அன்று வாக்குகள் எண்ணப்படவுள்ளன.பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
Sorry, no posts matched your criteria.