India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களிலும், நாளை 21 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும், தி.மலை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
விராட் கோலியின் ஃபார்ம் குறித்து ரிக்கி பாண்டிங் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு, அவருக்கு IND அணியில் என்ன வேலை என கம்பீர் பதிலளித்தார். ஆனால், கம்பீரிடம் இருந்து இப்படி ஒரு பதில் வரும் என தான் எதிர்பார்க்கவில்லை என பாண்டிங் தெரிவித்துள்ளார். மேலும், கம்பீரின் குணத்தை பற்றி தனக்கு தெரியும் எனவும், தனது கருத்து குறித்து கோலியிடம் கேட்டால் அவரே ஒப்புக் கொள்வார் எனவும் கூறியுள்ளார்.
பங்குச்சந்தையில் கால் பாதிக்கும் புதிய நிறுவனம் தனது பங்குகளை முதல் முறையாக மக்களுக்கு வழங்கும் செயல்முறையை IPO (Initial Public Offering) என அழைக்கிறார்கள். பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் போல இல்லாமல், IPOஇல் குறிப்பிட்ட அளவு பங்குகளை மொத்தமாக சேர்த்து மட்டுமே வாங்க முடியும். இதனை ஆங்கிலத்தில் Lot என்பர். தொடக்கத்தில், ஒரு Lot-இன் விலை ₹15,000க்கு குறைவாகவே இருக்கும்.
இந்தியாவின் PM மோடி, குஜராத்திற்கான PM-ஆக மட்டும் செயல்படுவதாக தெலங்கானா CM ரேவந்த் ரெட்டி விமர்சித்துள்ளார். தங்கள் மாநிலத்திற்கு வர வேண்டிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை, PMO அதிகாரிகள், குஜராத்திற்கு மடைமாற்றி இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னதாக, தங்கள் மாநிலங்களுக்கு வர வேண்டிய முதலீடுகள் குஜராத்திற்கு மாற்றப்படுவதாக முதல்வர்கள் சித்தராமையா, ஸ்டாலின் புகார் தெரிவித்திருந்தனர்.
சென்னையில் கிண்டி அரசு ஹாஸ்பிடலில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டதாகவும், டாக்டருக்குத் தேவையான சிகிச்சைகளை அளிக்கவும், விரிவான விசாரணை நடத்தவும் ஆணையிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற சம்பவம் இனி நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
திமுக ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு கிடையாதா என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். டாக்டர் மீதான தாக்குதல் குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உழவர்களுக்கு அடுத்தபடியாக உயிர்காக்கும் கடவுள்களாக மதிக்கப்படுவது டாக்டர்கள்தான் என்றார். மருத்துவம் அளிப்பதில் பாகுபாடு காட்டப்படுவதில்லை எனவும், டாக்டர்கள் மீதான தாக்குதலை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் பணியில் இருந்த அரசு டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் எதிரொலியாக, காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது. டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி, தமிழகம் முழுவதும் உயிர்காக்கும் சிகிச்சையை தவிர மற்ற அனைத்து சிகிச்சை பிரிவுகளும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டிரைக் அறிவிப்பால், மருத்துவத்துறை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தோனி நேரில் ஆஜராக ஜார்கண்ட் ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தனது பெயரில் ஸ்போர்ட்ஸ் கல்வி நிறுவனங்களை திறக்க தோனிக்கும், அவரது முன்னாள் பார்ட்னர்கள் திவாகர், தாஸ் ஆகியோருக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் காலக்கெடு முடிந்த பின்னரும், தனது பெயரை பயன்படுத்தி ₹15 கோடி மோசடி செய்ததாக தோனி புகார் அளித்திருந்தார். இதை எதிர்த்து பார்ட்னர்கள் தொடர்ந்த வழக்கில், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
டாக்டர் பாலாஜிக்கு தலை, காதுப்பகுதி, முதுகில் கத்திக்குத்து விழுந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். பலத்த காயமடைந்த அவர் தீவிர சிகிச்சையில் உள்ளதாகவும், அவர் இதய நோயாளி என்பதால் கத்திக்குத்தில் அதிகளவில் ரத்தம் வெளியேறி உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தாக்குதல் நடத்தியவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் அல்ல, பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ்வரன் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மழை பெய்யும்போது, இடி மின்னல் விழலாம். அது தப்பித்தவறி வீட்டின் மேற்கூரையிலோ அல்லது ஏரியா EB Transformer மீதோ தாக்கினால் மின்சாதனங்கள் பாதிப்படைய வாய்ப்புண்டு. இதற்கான சாத்தியம் மிக குறைவே என்றாலும், இடி மின்னலின்போது, மின்சாரத்துடன் நேரடியாக தொடர்பில் உள்ள டிவி, ஃபிரிட்ஜ், ஏர் கூலர் போன்ற மின்சாதனங்களை Unplug செய்து, உபயோகிக்காமல் வைத்திருப்பது நல்லது.
இந்த செய்தியை பிறருக்கும் பகிருங்கள்.
Sorry, no posts matched your criteria.