India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்துக்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்க பதிவில், பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையே காட்டுவதாக குறை கூறியுள்ளார். அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்பது, தினம் தினம் நிகழும் குற்றச் செயல்களால் நிரூபணமாகிறது எனவும் சாடியுள்ளார்.
சென்னையில் அரசு டாக்டர் தாக்கப்பட்ட விவகாரத்தை கையில் எடுத்து, எதிர்க்கட்சிகள் முழுவீச்சில் களமிறங்கியுள்ளன. தமிழகத்தில் வக்கீல்கள், டாக்டர்கள் உள்ளிட்ட எவருக்குமே பாதுகாப்பு இல்லை என்று கண்டித்துள்ளது அதிமுக. முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் பாதிக்கப்பட்ட டாக்டரை சந்தித்து ஆறுதல் கூறினர். பாமகவின் அன்புமணி, பாஜகவின் அண்ணாமலையும் வன்மையாக கண்டித்துள்ளனர்.
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத் தொகை வழங்கும் “PM INTERNSHIP” திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னணி தனியார் நிறுவனங்களுக்கு INTERNSHIPக்கு அனுப்பப்படும் இளைஞர்களுக்கு ஒரு முறை ஊக்கத் தொகையாக ரூ.6,000ம், மாதம் ரூ.5,000ம் அளிக்கப்படும். இந்த நிவாரணத் தொகையை பெற pminternship.mca.gov.in. இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். SHARE IT
திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கு 15 மாதங்களே உள்ளதால் கட்சிப் பணிகளை வேகப்படுத்தவும், ஆலோசனைகள் வழங்கவும் இந்த கூட்டம் நடத்தப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இரவு 7 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. விழுப்புரம், செங்கல்பட்டில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர், கரூரில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.
அர்ஜுன் டெண்டுல்கர் இன்று தனது வாழ்வின் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார். ரஞ்சி டிராபி தொடரில், அருணாச்சல் பிரதேசத்திற்கு எதிரான போட்டியில், 25 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை அர்ஜுன் கைப்பற்றியுள்ளார். கோவா அணிக்காக ஆடிய அவர், 9 ஓவர்களை வீசி 3 ஓவர்களை மெய்டன் ஆக்கியுள்ளார். இதுவரை 17 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள அவர், ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்களை கைப்பற்றியுள்ளது இதுவே முதல்முறை.
BSNL நிறுவனம், Viasat என்ற அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து Satellite-to-Device என்ற புதிய சேவையை இன்று அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம், அவசரகாலத்தில் அல்லது தொலைதூரத்தில் நெட்வொர்க் இல்லாத போதும், ஃபோன் பேசலாம். மேலும் SMS, UPI டிரான்சாக்ஷனும் செய்யமுடியும். இந்த சேவையை கஸ்டமர்கள் எவ்வாறு பெறுவது, இதற்கான பிளான்கள் தொடர்பாக விரைவில் BSNL அறிவிப்பு வெளியிடும். தயாராக இருங்க மக்களே!
ஏ.ஆர் முருகதாஸ், விஜய் கூட்டணியில் 2012-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியான “துப்பாக்கி” படம் விஜய் ரசிகர்களின் Favourite லிஸ்ட்டில் ஒன்று. அதுவும் விஜய் உள்பட மற்ற ராணுவ வீரர்கள் செய்யும் என்கவுண்டர் சீன் மற்றும் இடைவெளியின் போது விஜய் சொல்லும் ‘ I AM WAITING’ என்ற டயலாக் இன்றும் மாஸ் Interval-லில் ஒன்று. இப்படி பல அம்சங்களை கொண்ட ‘துப்பாக்கி’ படம் வெளியாகி இன்றுடன் 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
சென்னையில் மேலும் ஒரு டாக்டர் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. கிண்டி அரசு ஹாஸ்பிடலில் இன்று காலை டாக்டர் பாலாஜி என்பவர் கத்தியால் குத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில், ஸ்டான்லி அரசு ஹாஸ்பிடலில் டாக்டர் ஹரிஹரன், அங்கு சிகிச்சை பெறும் நோயாளியால் கடுமையாக தாக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிண்டி அரசு ஹாஸ்பிட்டலில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்டித்து அங்குள்ள டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அவர்களுடன் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அரசு மருத்துவமனைகளில் பணியில் இருக்கும் தலைமை மருத்துவ அதிகாரிக்கு (CMO) துப்பாக்கி வழங்க வேண்டும் என டாக்டர்கள் வலியுறுத்தினர்.
Sorry, no posts matched your criteria.