News November 14, 2024

நடிகை கஸ்தூரி விரைவில் கைது?

image

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து இழிவாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. முன்ஜாமின் மனு தள்ளுபடியானதால் அவர் கைதாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே, போலீசாரின் சம்மனை பெற மறுத்து அவர் தலைமறைவாக உள்ள நிலையில், முன்ஜாமின் மனுவும் தள்ளுபடியானதால் நெருக்கடி அதிகரித்துள்ளது. அவரை கைது செய்ய 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

News November 14, 2024

இந்திய அணிக்கான பேட்டிங் ஆலோசகர் சச்சின்?

image

பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணிக்கான பேட்டிங் ஆலோசகராக சச்சின் வர வேண்டுமென WV ராமன் விருப்பம் தெரிவித்துள்ளார். சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை இந்தியா முழுமையாக இழந்தது. தற்போது, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆடவுள்ளது. இந்நிலையில், சச்சினின் ஆலோசனையால் இந்திய அணி பயனடையலாம் என அவர் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

News November 14, 2024

நேரு பிறந்தநாள் – பிரதமர் மோடி வாழ்த்து

image

முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது எக்ஸ்தளப்பதிவில், நமது முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு அஞ்சலி செலுத்துகிறேன் எனப் பதிவிட்டுள்ளார். நேருவின் 3 முறை தொடர் பிரதமர் பதவி வெற்றியை மோடி சமன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 14, 2024

ஹாஸ்பிட்டல் வருவோருக்கு கையில் டேக்

image

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் நோயாளிகள் மற்றும் உடன் வருவோரின் கைகளில் 4 நிறங்களில்
டேக் கட்டப்படும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, * தீவிர சிகிச்சை பிரிவு – சிறப்பு நிறம், * சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவு – மஞ்சள் நிறம், * சிறப்பு அறுவை சிகிச்சை பிரிவு – பச்சை நிறம், * பொது மருத்துவம் – நீல நிறம் டேக் கட்டப்படும் என அமைச்சர் மா.சு தெரிவித்துள்ளார்.

News November 14, 2024

டிஜிட்டல் மது விற்பனை: நாளை தள்ளிவைப்பு

image

டிஜிட்டல் முறையில் மது விற்பனை செய்வது நாளை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று முதல் TASMACல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இருப்பில் உள்ள பழைய மதுபானங்களை இன்று விற்பனை செய்த பிறகு நாளை முதல் டிஜிட்டல் முறையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக ₹10 பணம் வசூலிக்க முடியாது எனக் கூறப்படுகிறது.

News November 14, 2024

BREAKING: வைகோவுக்கு ஹாஸ்பிடலில் சிகிச்சை

image

வைகோ அப்பலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது. வலது தோள்பட்டை காயம் காரணமாக 2 நாள்களுக்கு முன் அங்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில நாள்களுக்கு முன் கீழே விழுந்ததில், அவருக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

News November 14, 2024

இளைஞர்களை அச்சுறுத்தும் நீரிழிவு நோய்

image

உலகளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த ‘தி லான்சேட்’ இதழ் நடத்திய ஆய்வில், உலகளவில் 80 கோடி பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரியவந்துள்ளது. இது 1990இல் 20 கோடியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும், இந்நோயால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை 7%இல் இருந்து 14%ஆக அதிகரித்துள்ளது.

News November 14, 2024

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராகிறார் ரூபியோ

image

அமெரிக்காவின் அடுத்த அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், தனது நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களை நியமித்து வருகிறார். புளோரிடா மாகாணத்தின் செனட் உறுப்பினரான மார்கோ ரூபியோவை டிரம்ப் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சராக நியமித்துள்ளார். ரூபியோ சீனாவை விமர்சிப்பதை வழக்கமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. டிரம்ப் ரூபியோவை “அச்சமற்ற போர்வீரன்” என புகழ்ந்துள்ளார்.

News November 14, 2024

தங்கம் விலை ₹880 குறைவு

image

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ₹880 குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹880 விலை குறைந்து ₹55,480க்கும், கிராமுக்கு ₹110 குறைந்து ₹6,935க்கும் விற்பனையாகிறது. கடந்த 2 வாரங்களில் தங்கம் சவரனுக்கு ₹4,160 சரிந்துள்ளது.

News November 14, 2024

ஆதவ் அர்ஜுனா குறித்து விசிக நிர்வாகிகள் குமுறல்

image

ஆதவ் அர்ஜுனா குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை விசிக 2ஆம் கட்டத் தலைவர்கள் திருமாவிடம் முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. DMK கூட்டணியில் இருந்து VCK வெளியேறி, அதிமுக (அ) தவெகவுடன் பயணிக்க உள்ளதாகப் பேசப்படுகிறது. இதற்கு அச்சாரமிடுவது போல, ஆதவ் கருத்து தெரிவித்து வருகிறார். இதனால், அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள் இதே நிலை தொடர்ந்தால், கட்சியில் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாக திருமாவிடம் குமுறியுள்ளனர்.

error: Content is protected !!